காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் கே.ஜி. பிரிவு மழலையருக்கு, நிறங்களின் வகைகளை எளிதில் விளக்குவதற்காக பல செயல்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வரிசையில், 28.03.2015 சனிக்கிழமையன்று செந்நாள் (Red Day) என அறிவிக்கப்பட்டிருந்தது. பள்ளியின் கே.ஜி. பிரிவு மழலையர் அனைவரும் அந்நாளில் சிவப்பு நிற உடையணிந்து பள்ளிக்கு வந்திருந்தனர்.
இந்நிகழ்ச்சியின் விளைவாக, மழலையருக்கு சிவப்பு நிறம் குறித்த புரிதல் ஏற்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
K.M.T.சுலைமான்
(துணைச் செயலாளர் - முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி)
முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
2. Re:... posted byசாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபார்)[02 April 2015] IP: 95.*.*.* Romania | Comment Reference Number: 39968
அட... சூப்பர். ரெட் ரோசஸ்.
அனைத்து பூக்களும் அருமையாக உள்ளது. மாஷா அல்லாஹ்.
கூடவே பொறாமையும் வருகிறது, நாங்கள் படிக்கும் காலம் முழுவதும் வெள்ளை சட்டையும், ஊதா கால்சட்டையும், பல இடங்களில் செருப்பு தைக்கும் தொழிலாளியின் ஊசி குத்துப்பட்ட ரப்பர் செருப்பும் தான். எங்களுக்கு இதுமாதிரி ஆடைகள் அணிய கொடுத்து வைக்கவில்லையே என்று.
ஒரு பெரிய திருப்தி, இப்படி செலவுகள் செய்யாமல் நிறங்களை அறிந்து கொண்டோமே என்று...!!
ஆனால் இன்றோ, ஒரு சிகப்பு கலரை குழந்தைகளுக்கு புரிய வைக்க ஆயிரம் இரண்டாயிரம் ரூபாய்க்கு ஆடைகளும், காலணிகளும் அதற்கு உண்டான உரைகளும். என்ன கொடுமை.
மாதத்திற்கு இரண்டு கலரை குழந்தைகளுக்கு புரிய வைக்க ஐந்து ஆயிரம் அம்பேல். நடுத்தர குடும்பத்தாரை நினைத்தால் தான் கவலையாக உள்ளது. ஒட்டு மொத்த குடும்ப செலவுக்கே 10 ஆயிரம் தான் கொடுக்கின்றார்கள். அதுவும் மிகவும் சிரமப்பட்டு சம்பாதித்து.
எத்தனை கலர்கள் இருக்கின்றது, எப்படி புரிய வைப்பது. அதிலும் பொட்டசியம் பெர்மாகநேட் கலர் வேறு (பர்பிள் - தமிழில் என்னவோ..!) . கொஞ்ச நஞ்ச சேர்த்து வைத்த சொத்து காலி, LKG,UKG முடிப்பதற்குள். அப்புறம் என்ன, நிரந்தர வெளிநாட்டு வாழ்க்கைதான்.
என்னத்தை சொல்ல, இந்த கால கல்வி முறையை..? காசு இல்லாதவனுக்கு கல்வி இல்லை போல.!!
3. Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (RIYADH)[02 April 2015] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39971
அஸ்ஸலாமு அலைக்கும்
மாஷா அல்லாஹ்...நம் குழந்தைகளின் இந்த புண் சிரிப்புடன் கலந்த அழகு முகத்தை பார்க்கும் ...போது நம் மன கவலைகள் எல்லாம் பறந்தோடுகிறது .......மனமும் நிம்மதியாகிறது ......
செம சூப்பர் ..அந்த சிவப்பு கலர் உடையும் ...செம பொருத்தமே .....
எல்லாம் வல்ல நாயன் நம் அருமை குழந்தை செல்வங்களின் ஆயுளை நீடித்து ..எப்போதும் இந்த புண் சிரிப்புடனே எல்லா காலத்திலும் வாழ்ந்தஅருள ரஹ்மத் செய்தருல்வானாகவும் ஆமீன்...
நமது '' முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளியின் முன்னேற்றம் தற்போது நன்கு நம் யாவர்களுக்கும் ...விளையாட்டிலும் + படிப்பிலும் ....தெரிகிறது ...அல்ஹம்துல்லிலாஹ் ....
பொதுவாகவே நம் '' முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி'' நல்ல கற்றோட்டமான ஒரு பள்ளி என்பது உண்மையே ..... வஸ்ஸலாம்
4. Re:... posted byVilack sma (jeddah)[02 April 2015] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39973
பார்க்க சந்தோசமாகத்தான் இருக்கிறது . இருப்பினும் ........
எங்க காலத்துல குட்டியாப்பு முதல் பள்ளி இறுதி வரை வெள்ளை சட்டையும் நீல அரைக்கால் , முழுக்கால் பேண்ட். இவைகள்தான் பள்ளி சீருடை .
குட்டியாப்பு வாத்தியார் மறைந்த அப்துல் சலாம் சார் அவர்கள் நிறங்களை அறிவதற்காக காக்கை கருப்பு , கிளி பச்சை , கடல் நீலம் என்றுதான் சொல்லி தந்தார் . பச்சை கிளியும் , கருப்பு காக்கையும் இன்றும் பறக்கின்றன . கடல் தண்ணீர் நீல நிறத்தில்தான் உள்ளது . பிள்ளைகளுக்கு இப்படி சொல்லி கொடுத்தாலே நினைவில் ஏறும்தான். என்ன பண்ணுவது ? குட்டியாப்புகளின் பெருக்கத்தால் ஏதாவது ஸ்டன்ட் செய்தால்தான் நிலைக்க முடியும் என்றாகிவிட்டது . ஆனால் குழந்தைகளுக்கு கலர் சொல்லி கொடுக்கிறேன் என்று தினம் ஒரு கலரில் உடை அணிய சொன்னால் அது பெற்றோர்களின் பாக்கெட்டை பதம் பார்க்கும் . நல்ல கல்வி கொடுக்கிறோம் என்று பெற்றோர்களை மன அழுத்தத்திற்கு ஆலாக்கினால் , அந்த கல்வி ஏழைகளுக்கு எட்டாக்கனியாகி விடும் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross