மக்களின் உடல்நலனைப் பாதிக்கும் DCW ஆலையை இழுத்து மூடக் கோரியும், ஆலை குறித்து தமிழக சட்டப்பேரவையில் வெள்ளையறிக்கை தாக்கல் செய்யக் கோரியும், டிசம்பர் 30 அன்று சோஷியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா - எஸ்.டி.பீ.ஐ. கட்சி ஆலையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தியது.
இப்போராட்டத்தில் - எஸ்.டி.பீ.ஐ. கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் தெஹ்லான் பாக்கவீ, கட்சியின் மூத்த நிர்வாகிகள், 'பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுந்தரராஜன், அணு சக்திக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார், அதன் நிர்வாகி முகிலன், கூடங்குளம் போராட்டக் குழு மகளிரணி நிர்வாகி சுந்தரம்மாள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.
இப்போராட்டத்தில் இடம்பெற்ற உரைகள் உட்பட அனைத்து நிகழ்வுகளும் - இன்றிரவு (வெள்ளிக்கிழமை; ஏப்ரல் 3) 9:30 மணிக்கு, தமிழன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட உள்ளது.
தகவல்:
ஹாபிழ் எம்.எம்.முஜாஹித் அலி |