அரிமா சங்க காயல்பட்டினம் கிளையின் சார்பில், அரிமா ஆளுநர் வருடாந்திர வருகை சிறப்புக் கூட்டம், நலத்திட்ட உதவிகளுடன் நடைபெற்றுள்ளது. விபரம் வருமாறு:-
அரிமா சங்கம் காயல்பட்டினம் கிளையின் சார்பில், 2014ஆம் ஆண்டிற்கான - அரிமா ஆளுநர் வருடாந்திர வருகை சிறப்புக் கூட்டம் 30.03.2015 திங்கட்கிழமை மாலையில் துளிர் கேளரங்கில், நடைபெற்றது.
எம்.ஏ.காழி அலாவுத்தீன் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். கே.அப்துர்ரஹ்மான் அரிமா பிரார்த்தனையை வாசித்தார். டீ.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் வரவேற்புரையாற்றினார். அரிமா சங்க காயல்பட்டினம் கிளையின் சேவைகள் குறித்து எம்.எல்.ஷேக்னா லெப்பை விளக்கிப் பேசினார்.
அரிமா செயலாளர் ஏ.எல்.நிஜார் ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார். [(அறிக்கை தனிச்செய்தியாக வெளியிடப்படும்.)]
ராமலிங்கம், கே.ஜான்சன், காயல் எஸ்.இ.அமானுல்லாஹ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். வி.டி.என்.அன்ஸாரீ - அரிமா ஆளுநரை அறிமுகப்படுத்திப் பேசினார்.
பின்னர், மேடையில் அங்கம் வகித்த அரிமா ஆளுநர் உள்ளிட்ட சிறப்பழைப்பாளர்கள் அனைவருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
அரிமா மாவட்ட ஆளுநர் சிவகாமி எஸ்.ஆறுமுகம், ஏழைகளுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கி, சிறப்புரையாற்றினார்.
யு.நவ்ஃபல் நன்றி கூற, ஹாஃபிழ் எஸ்.ஏ.முஹம்மத் இஸ்மாஈல் துஆ பிரார்த்தனையைத் தொடர்ந்து, நாட்டுப்பண்ணுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. பின்னர், அனைவருக்கும் இரவுணவு விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.
முன்னதாக, காயல்பட்டினம் அரசு பொது மருத்துவமனையில் உள் நோயாளிகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது. கே.எம்.டி. மருத்துவமனைக்கு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டன. துளிர் பள்ளி வளாகத்தில் மரங்கள் நடப்பட்டன. நெசவுத் தெரு ஒருவழிப்பாதையில் போக்குவரத்து அறிவிப்புப் பலகைகளும் நிறுவப்பட்டன.
தகவல்:
A.L.முஹம்மத் நிஜார்
செயலாளர்
காயல்பட்டினம் அரிமா சங்கம்
படங்கள்:
வீனஸ் ஸ்டூடியோ
அரிமா ஆளுநர் வருடாந்திர வருகையையொட்டி கடந்தாண்டு (2014) நடத்தப்பட்ட சிறப்புக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |