காயல்பட்டினத்தில் இன்று அதிகாலையிலிருந்து காலை 09.00 மணி வரை நிலவிய வெண்படலம் காரணமாக கண் எரிச்சல் ஏற்பட்டதாகவும், ஆலைக் கழிவு காரணமாக இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் 11ஆவது வார்டுக்குட்பட்ட காயிதேமில்லத் நகரில் - கே.எம்.டி. மருத்துவமனைக்குத் தென்புறத்தில், இன்று அதிகாலையில் துவங்கி, காலை 09.00 மணி வரை பூமியின் மேற்பரப்பில் வெண்படலம் காணப்பட்டது.
அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களில் ஈரப்பதம் எதுவும் இல்லாததால், இது பனிப்படலம் இல்லை என்றும், கண்களில் சிறிது எரிச்சலும் உணரப்பட்டதால் - அருகிலுள்ள தொழிற்சாலையிலிருந்து வெளியான கழிவின் மாசுவாக அது இருக்கலாம் என்றும் அப்பகுதியின் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
தகவல்:
M.H.அப்துல் வாஹித் |