ஆன்லைன், நேரடி முறையில் சிங்கப்பூர் காயல் நல மன்றம் நடத்திய திருக்குர்ஆன் மனனப் போட்டியில் 12 ஹாஃபிழ்கள் பங்கேற்றுள்ளனர். இதுகுறித்து, அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை வருமாறு:-
இறையருளால் எமது சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் சார்பில், திருக்குர்ஆன் மனன (ஹிஃப்ழுல் குர்ஆன்) போட்டி, 29.03.2015 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 09.30 மணியளவில், மன்ற அலுவலக வளாகத்தில் நடத்தப்பட்டது.
பங்கேற்றோர்:
இப்போட்டியில் சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் - திருக்குர்ஆனை முழுமையாக மனனமிட்டுள்ள 12 ஹாஃபிழ் உறுப்பினர்கள் பங்கேற்றனர். அவர்களது விபரம் வருமாறு:-
(01) ஹாஃபிழ் எம்.எஸ்.அபுல் காஸிம்
(த.பெ. ஏ.கே.மஹ்மூத் சுலைமான், ஆஸாத் தெரு)
(02) ஹாஃபிழ் எம்.எம்.அஹ்மத்
(த.பெ. மர்ஹூம் முஹம்மத் முஹ்யித்தீன், அம்பல மரைக்கார் தெரு)
(03) ஹாஃபிழ் எம்.எஃப்.பஸல் இஸ்மாஈல்
(த.பெ. மர்ஹூம் முஹம்மத் ஃபவ்ஸீ, கி.மு.கச்சேரி தெரு)
(04) ஹாஃபிழ் பி.ஏ.ஷாஹுல் ஹமீத்
(த.பெ. மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ)
(05) ஹாஃபிழ் கே.டீ.ஷாஹுல் ஹமீத் பாதுஷா
(த.பெ. கராமத்துல்லாஹ், குத்துக்கல் தெரு)
(06) ஹாஃபிழ் எம்.செய்யித் அஹ்மத்
(த.பெ. முஹ்யித்தீன் தம்பி, ஸீ-கஸ்டம்ஸ் சாலை)
(07) ஹாஃபிழ் எம்.ஏ.சி.செய்யித் இஸ்மாஈல்
(த.பெ. முஹ்யித்தீன் அப்துல் காதிர், புதுக்கடைத் தெரு)
(08) ஹாஃபிழ் எம்.ஆர்.ஏ.ஷேக் அப்துல் காதிர் ஸூஃபீ
(த.பெ. மர்ஹூம் ரஸீன் அலீ, குத்துக்கல் தெரு)
(09) ஹாஃபிழ் எம்.ஆர்.ஷேக் அப்துல் காதிர் ஸூஃபீ
(த.பெ. முஜீபுர்ரஹ்மான், நெய்னார் தெரு)
(10) ஹாஃபிழ் எம்.எஸ்.தைக்கா ஸாஹிப்
(த.பெ. மஹ்மூத் சுமைான், நெய்னார் தெரு)
(11) ஹாஃபிழ் எம்.ஐ.அபூபக்கர் ஸித்தீக்
(த.பெ. முஹம்மத் இப்றாஹீம், ஆஸாத் தெரு)
(12) ஹாஃபிழ் ஏ.எல்.அப்துர் ரஊஃப்
(த.பெ. மர்ஹூம் அஹ்மத் லெப்பை, சொளுக்கார் தெரு)
நடுவர்கள்:
இப்போட்டியில்,
(1) காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும், முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரிகளின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ,
(2) தமிழகத்தின் தலைசிறந்த திருக்குர்ஆன் ஓதல் கலை வல்லுநர்களுள் ஒருவரான மவ்லவீ ஹாஃபிழ் காரீ ஸித்தீக் அலீ பாக்கவீ,
(3) மவ்லவீ ஹாஃபிழ் என்.ஜெ.நூர் முஹம்மத் ரஸீன் ஸிராஜீ
(4) காயல்பட்டினம் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன் மஹ்ழரீ
ஆகியோர் தொலைதொடர்பு மூலமாகவும்,
சிங்கப்பூர் மஸ்ஜித் அல் அப்ரார் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் மில்லத் இஸ்மாஈல்,
சிங்கப்பூர் மஸ்ஜித் ஜாமிஆ சூலியா இமாம் மவ்லவீ ஹாஃபிழ் அப்துல் மாலிக்
ஆகியோர் நேரடியாகவும் நடுவர்களாகக் கடமையாற்றினர்.
சிங்கப்பூர் காயல் நல மன்ற ஆலோசகர் பாளையம் முஹம்மத் ஹஸன் - திருக்குர்ஆனின் ஒரு வசனத்திற்கு முந்தைய வசனத்தை (மா கப்ல்) கேள்விகளாகத் தொகுத்து, மாணவர்களிடம் கேட்டார்.
பரிசு பெற்றோர்:
இப்போட்டியில் இருவர் முதல் பரிசுக்கும், இருவர் இரண்டாம் பரிசுக்கும், ஒருவர் மூன்றாம் பரிசுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களது விபரம் வருமாறு:-
முதல் பரிசு:
(1) ஹாஃபிழ் எம்.ஏ.சி.செய்யித் இஸ்மாஈல் (த.பெ. முஹ்யித்தீன் அப்துல் காதிர், புதுக்கடைத் தெரு)
(2) ஹாஃபிழ் கே.டீ.ஷாஹுல் ஹமீத் பாதுஷா (த.பெ. கராமத்துல்லாஹ், குத்துக்கல் தெரு)
இரண்டாவது பரிசு:
(1) ஹாஃபிழ் எம்.எஸ்.அபுல் காஸிம் (த.பெ. ஏ.கே.மஹ்மூத் சுலைமான், ஆஸாத் தெரு)
(2) ஹாஃபிழ் ஏ.எல்.அப்துர் ரஊஃப் (த.பெ. மர்ஹூம் அஹ்மத் லெப்பை, சொளுக்கார் தெரு)
மூன்றாவது பரிசு:
ஹாஃபிழ் எம்.ஐ.அபூபக்கர் ஸித்தீக் (த.பெ. முஹம்மத் இப்றாஹீம், ஆஸாத் தெரு)
நடுவர்கள் கருத்து:
மவ்லவீ ஹாஃபிழ் அப்துல் மாலிக் - இமாம், ஜாமிஆ சூலியா பள்ளி, சிங்கப்பூர்
இது ஒரு நல்ல முயற்சி. இரண்டாவது முறையாக இப்போட்டியில் நான் நடுவராகப் பணியாற்றியுள்ளேன். மாணவாகளின் மனனத்திலும், திறமைகளிலும் நல்ல முன்னேற்றங்கள் உள்ளன. இது எக்காலமும் தொடர வேண்டும்.
மவ்லவீ ஹாஃபிழ் மில்லத் இஸ்மாஈல் - இமாம், மஸ்ஜித் அல் அப்ரார், சிங்கப்பூர்
இந்தப் போட்டி ஏற்பாடு எனக்குப் புதிய அனுபவம். அருமையான ஏற்பாடு. ஒவ்வொரு பிரிவிற்கும் தனி மதிப்பெண்கள் வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது வியப்பளித்தது.
சிறிய அளவில் இது நடைபெற்றபோதிலும், பார்ப்பதற்கு பெரிய அளவில் காட்சியளித்தது. போட்டியில் பங்கேற்ற அனைவருமே தமது முழுத் திறமைகளையும் வெளிப்படுத்தியதால், மதிப்பெண்கள் இடுவதற்கு மிகவும் அவதிப்பட்டேன்.
மவ்லவீ ஹாஃபிழ் காரீ ஸித்தீக் அலீ பாக்கவீ
எந்த வசனத்தை எப்படிக் கேட்டாலும், தாமதிக்காமல் விடையளித்ததன் மூலம், அனைத்து பங்கேற்பாளர்களும் தமது மனனத் திறமையை வெளிப்படுத்தியது மிகுந்த பாராட்டிற்குரியது. இந்த போட்டி நடத்தும் முயற்சியும் பாராட்டத்தக்கது.
மவ்லவீ ஹாஃபிழ் நூர் முஹம்மத் ரஸீன் ஸிராஜீ
இந்த பரபரப்பான நாட்டில், நல்ல பணியில் அமர்ந்து, ஓய்வின்றி உழைத்து வரும் நிலையிலும், இந்த ஹாஃபிழ்கள் தமது மனனத்தை நல்ல முறையில் பாதுகாத்து வருவதைப் பாராட்டாமல் இருக்க இயலாது.
மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன் மஹ்ழரீ
பெரிய முயற்சிகளுக்கிடையே - ஆன்லைன் மூலம் ஹிஃப்ழுப் போட்டி நடத்தியிருப்பது நல்லதொரு முன்னுதாரணம். திருக்குர்ஆனை மனனம் செய்துள்ள ஹாஃபிழ்கள் வசிக்கும் பகுதிகளிலெல்லாம் இதுபோன்ற போட்டி ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
திருக்குர்ஆனை மனனம் செய்த ஹாஃபிழ் உறுப்பினர்கள் ஒவ்வொரு வாரமும் தங்கள் மனனத்தை சிறப்பாக்கிக் கொள்ள மீள்பார்வை (தவ்ர்) வகுப்புகளை ஏற்பாடு செய்து, அதற்காக நேரம் ஒதுக்கி செயல்பட்டு வருவது மிகவும் பாராட்டத்தக்கது.
இவ்வாறு நடுவர்கள் அனைவரும் தம் கருத்துக்களைத் தெரிவித்ததோடு, இம்முயற்சிகள் எல்லாக் காலங்களிலும் தொடரவும், சிறப்புறவும், இதில் ஈடுபட்டோர் நலனுக்காகவும் துஆ பிரார்த்தனை செய்தனர்.
போட்டியில் பங்கேற்றோர் அனைவரையும் மன்றத் தலைவர் எம்.ஆர்.ரஷீத் ஜமான் உள்ளிட்ட நிர்வாகிகளும், அங்கத்தினரும் பாராட்டினர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
J.S.தவ்ஹீத்
V.S.தாவூத்
செய்தியாக்கம்:
எஸ்.கே.ஸாலிஹ்
சிங்கை கா.ந.மன்றத்தின் சார்பில் கடந்தாண்டு நடத்தப்பட்ட ஹிஃப்ழுப் போட்டி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
சிங்கை கா.ந.மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|