காயல்பட்டினம் சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியில், யு.கே.ஜி. பயின்று முடித்து, முதல் வகுப்பில் நுழையும் மழலை மாணவ-மாணவியரை ஊக்கப்படுத்தும் நோக்குடன் அவர்களுக்கு பட்டமளிப்பு விழா இன்று 14.00 மணியளவில், பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளி ஆசிரியை சந்தன ரேவதி அனைவரையும் வரவேற்றார்.
விழாவிற்குத் தலைமை தாங்கிய - பள்ளியின் தலைமையாசிரியர் எம்.செண்பகவல்லி, கோடை விடுமுறையின்போது குழந்தைகளைக் கவனிக்கும் முறைகள், அவர்களுக்குப் பிடித்தமான பயனுள்ள பொழுதுபோக்குகளை வழங்கல் உள்ளிட்ட அம்சங்களை உள்ளடக்கி தலைமையுரையாற்றினார்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட - பள்ளியின் தாளாளர் வாவு எம்.எம்.முஃதஸிம், மழலை மாணவ-மாணவியருக்கு பட்டச் சான்றிதழ்களை வழங்கி, வாழ்த்துரையாற்றினார்.
மழலை மாணவ-மாணவியருக்கு இதுபோன்ற பட்டமளிப்பு விழா நடத்த வேண்டியதன் அவசியம் குறித்து அவர் தனதுரையில் விளக்கிப் பேசினார்.
வள்ளியம்மாள் நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது. மழலையர் பிரிவின் பொறுப்பாசிரியர் டீ.அமேசா நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
கடந்த ஆண்டு (2014) பள்ளியின் சார்பில் நடத்தப்பட்ட மழலையர் பட்டமளிப்பு விழா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |