தமதமைப்பு பரிந்துரைத்த - காயல்பட்டினம் புல எண் 278இல் பயோகேஸ் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக, தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன் பொதுச் செயலாளர் பிரபு எம்.ஏ.சுல்தான் - நேற்று (ஏப்ரல் 10) வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
தமிழக அரசுக்கு காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் மனமார்ந்த நன்றி!
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மாண்புமிகு டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியில் பயோ எரிவாயு திட்டம் காயல்பட்டணம் நகராட்சி பகுதியில் அமைவதற்கு ரூபாய்: 90,00000 (தொன்னூரு இலட்சம்) ஒதுக்கீடு செய்யப்பட்டது.
திட்டம் அமையவும், திடக்கழிவுப் பொருட்களை கொட்டுவதற்கும் 5 ஏக்கர் நிலம் தேவை. மேற்படி நிலத்தை அரசு நிர்ணயித்துள்ள விலைக்கு (ஏக்கர் ஒன்றுக்கு ஒரு இலட்சம்) பெற்றுத்தரும் படியாக நமது நகராட்சிக்கு அரசு அறிவித்திருந்தது.
அந்த அறிவிப்பின்படி, நமது நகராட்சின் சார்பாக நகர்மன்ற தலைவி அவர்கள் மேற்படி திட்டத்திற்கு தேவையான இடத்தினை அடையாளம் கண்டு நகராட்சிக்கு அறிவிக்கும் படியாக ஒரு பொது அறிவிப்பினை வெளியிட்டு இருந்தார்கள்.
அரசு நிர்ணயித்துள்ள விலைக்கு நிலம் அமையாததால், மேற்படி பயனுள்ள திட்டம் அமைவதற்குரிய ஐந்து ஏக்கர் நிலத்தை நமதூர் காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை பெற்றுத்தர வேண்டுமென்று, நகராட்சியின் 18 உறுப்பினர்களும் கையொப்ப மிட்ட வேண்டுகோள் மனு ஒன்றை டிசம்பர் 05, 2012 -ம் ஆண்டு நகர்மன்றத்தின் 13 உறுப்பினர்கள் காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவைக்கு நேரில் வந்து அளித்தார்கள்.
நகர்மன்ற உறுப்பினர்கள் தந்த மனுவை பரிசீலிப்பதற்காக டிசம்பர் 19, 2012-ம் ஆண்டு ஜலாலிய்யா நிகாஹ் மஜ்லிஸ் அரங்கில், காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் கலந்து கொண்ட ஐக்கியப் பேரவையின் கௌரவ ஆலோசனைக்குழு உறுப்பினரும், நகராட்சியின் முன்னாள் தலைவரும், வாவு வஜிஹா வனிதையர் கல்லூரியின் நிறுவனத் தலைவருமான வணிக பெறுந்தகை ஹாஜி வாவு எஸ்.செய்யது அப்துர்ரஹ்மான் அவர்கள் கடையக்குடி பகுதியில் தனக்குச் சொந்தமான நிலத்தில் 5 ஏக்கர் நிலத்தை தருவதாக வாக்களித்தார்கள்.
காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் ஆலோசனை கூட்டத்தில் வாக்களித்தபடி 5 ஏக்கர் அல்ல, 5 1/2 ஏக்கர் நிலத்தை கடற்கரை மேலாண்மைத் திட்டப்பகுதி (CRZ) இல்லாதப் பகுதியில் கிரயத் தொகை எதுவும் பெறாமல், பத்திரப்பதிவு செலவையும் தானே செலுத்தி இலவசமாக அரசுக்கு அளித்துள்ளார்கள்.
பதிவு செய்யப்பட்ட பத்திரத்தை அக்டோபர் 24,2014-ம் ஆண்டு, காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் பிரமுகர்கள் மற்றும் நகராட்சி உறுப்பினர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் ஹாஜி வாவு எஸ்.செய்யது அப்துர்ரஹ்மான் அவர்கள் நேரில் அளித்தார்கள்.
மேற்படி நிலத்தில் திட்டத்திற்கான ஆயத்த பணிகள் அரசால் தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது. தொடங்கிய பணிகள் விரைவாக நிறைவுபெறவும், திட்டம் விரைவில் செயல்வடிவம்பெறவும் வாழ்த்துகிறோம்.
மேற்படி திட்டத்தை தொடங்குவதற்கு உத்தரவு பிறப்பித்த மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும், இத்திட்டம் அமையப் பெறுவதற்கு பெரிதும் ஒத்துழைப்பு நல்கிய மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முக நாதன் அவர்களுக்கும் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கும் காயல்பட்டணம் நகர மக்கள் சார்பாக, காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |