காயல்பட்டினம் கே.டீ.எம். தெருவில், அடிப்பகுதி சிதிலமுற்று - எந்நேரத்திலும் ஆபத்தை ஏற்படுத்தும் நிலையிலிருந்த மின்கம்பம் அகற்றப்பட்டு, புதிய மின்கம்பம் நிறுவப்பட்டுள்ளது.
அப்பகுதி நகர்மன்ற உறுப்பினரும், காயல்பட்டினம் நகர்மன்ற துணைத்தலைவருமான எஸ்.எம்.முகைதீன், அப்பகுதியை உள்ளடக்கிய தாயிம்பள்ளி ஜமாஅத், சமூக ஆர்வலர் பி.ஏ.ஷேக் ஆகியோரின் தொடர் கோரிக்கைகளைத் தொடர்ந்து, காயல்பட்டினம் மின்சார வாரியத்தால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பழைய மின்கம்பத்தை அகற்றி, புதிய மின்கம்பம் நிறுவும் பணியில், மின்சார வாரிய பணியாளர்களுடன் - அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் இணைந்து செயல்பட்டனர்.
இரும்பாலான மின்கம்பங்கள் தவிர்க்கப்பட்டு, தற்போது சிமெண்ட் - ஜல்லி கலவையால் உருவாக்கப்படும் மின்கம்பங்களே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இரும்பு மின்கம்பங்கள் பல்லாண்டுகளுக்குப் பிறகும் பழுதின்றி இருக்க, இந்த சிமெண்ட் மின் கம்பங்களோ தொடர்ந்து பழுதடைந்தும், சிதிலமடைந்தும் பொதுமக்களுக்கு உயிர் மீது அச்சத்தை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
கள உதவி:
ஹாஃபிழ் நஹ்வீ A.M.ஈஸா ஜக்கரிய்யா
மின்வாரியம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |