பாகம் - 1 இல், காயல்பட்டினம் தென்பாக கிராம பகுதியின் சர்வே எண் 278 நிலத்தை, வடபாக கிராம சர்வே எண் 278 என நினைத்து - மாசு கட்டுப்பாட்டு வாரியம் நிராகரித்தது என்ற கூற்று எவ்வாறு நம்பத் தகுந்தது அல்ல என்று கண்டோம்.
இந்த இரண்டாம் மற்றும் நிறைவு பாகத்தில், தென்பாக கிராம சர்வே எண் 278 இடம், நீர் தேங்கும் இடமா என்பதனை - ஆவணங்கள் உதவிகொண்டு - காண்போம்.
ஒரு நிலம் - CRZ வரைமுறைக்குள் அமைந்துள்ளதா, இல்லையா என முடிவு செய்ய உதவி செய்யும் அடிப்படை ஆவணம் COASTAL ZONE MANAGEMENT PLAN (CZMP) வரைபடம் ஆகும். இந்த ஆவணத்தை - தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை, அண்ணா பல்கலைக்கழக தொழில் நுட்ப உதவியுடன் தயாரிக்கிறது.
ஒரு பகுதியில் - பல ஆண்டுகளாக, பல முறை எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்கள் உதவி கொண்டு - இந்த வரைபடங்கள் தயாரிக்கப்படுகின்றன. CRZ விதிமுறைகள்படி முடிவுகள் எடுக்கத் தோதுவாக, இந்த வரைபடத்தில் - பல வர்ணங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
CZMP வரைபடத்தில் பயன்படுத்தப்படும் வர்ணங்களுக்கான விளக்கம்
CZMP வரைபடத்தில் பயன்படுத்தும் வர்ணங்களில் - கவனத்தில் கொள்ள வேண்டிய சில வர்ணங்கள் - LOW TIDE LINE (LTL), HIGH TIDE LINE
(HTL), WATER AREA, CRZ-1, CRZ-2, CRZ-3 போன்ற அம்சங்களுக்குப;் பயன்படுத்தப்படும் வர்ணங்களாகும்.
கீழே வழங்கப்பட்டுள்ளது சர்வே எண் 278 மற்றும் அதனைச் சுற்றி அமைந்துள்ள நிலங்களை விவரிக்கும் படம்.
இந்தப் படத்தில் - நீல வர்ணத்தில் உள்ள நிலங்கள் அனைத்தும் நீரோடை (WATER AREA) சார்ந்த இடங்கள் ஆகும்.
இந்தப் படத்தில் காணும் வடபாக கிராம சர்வே எண் 278 - 1950களில், கொட்டமடைக்காட்டின் ஒரு பகுதியாக இருந்தது. 1980களில், வருவாய்த்துறை அதிகாரிகளால் - மேய்ச்சல் தரை என்று வகைப்படுத்தப்பட்டது. ஆனால் - அந்த நிலம் தற்போது, கடல் உள்வாங்கியுள்ள காரணத்தால்,
நிரந்தரமாக நீரில் மூழ்கியுள்ளது.
[CZMP வரைபடங்களைப் பயன்படுத்தும்போது கவனத்தில் வைக்க வேண்டிய முக்கிய அம்சம் - இந்த வரைபடங்கள், கடல் மற்றும் ஓடை / ஆறு
போன்ற நீராதரங்களின் நிரந்தர தாக்கத்தை மட்டுமே கணக்கில் எடுக்கின்றன. தற்காலிகமாக ஏற்படும் மழைநீர்த் தேக்கங்களைக் கணக்கில் எடுப்பதில்லை என்பதாகும்.]
இந்த நிலத்திற்கு தெற்கில் - படத்தில் உள்ள தடித்த கருப்புக் கோடு, வடபாகம் / தென்பாகம் காயல்பட்டினம் கிராமங்களின் எல்லையைக்
குறிப்பிடுவதாகும். அந்த எல்லைக்கோட்டின் தெற்கில் - காயல்பட்டினம் தென்பாக கிராம சர்வே எண்கள் துவங்குகின்றன.
காயல்பட்டினம் தென்பாக கிராமத்தின், வடகிழக்குக் கோடியின் முதல் நிலம் சர்வே எண் 277 ஆகும்; அதனைத் தொடர்ந்து தெற்கில் அமைந்துள்ளதுதான் - சர்ச்சைக்குரிய சர்வே எண் 278.
கீழே காணும் படம் - இந்த இரு நிலங்களையும் (277 & 278) பெரிதாகக் காண்பிக்கிறது:-
காயல்பட்டினம் தென்பாக கிராமத்தின் 'அ' பதிவேடு படி, சர்வே எண் 277 மூன்று உட்பிரிவுகளைக் கொண்டது.
இதில் உட்பிரிவு 277/1 (5.62 ஏக்கர்) நிலத்திற்கான பட்டா கீழ்க்காணும் நபர்களின் பெயரில் உள்ளது.
இதில் உட்பிரிவு 277/2B - அரசு புறம்போக்கு நிலம். இந்த இடம், ஒரு காலத்தில் - காயல்பட்டினம் தென்பாக கிராமத்தின் அ பதிவேடு படி - மயானமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது.
இதில் உட்பிரிவு 277/2B (9.95 ஏக்கர்) நிலத்திற்கான பட்டா கீழ்க்காணும் நபர்களின் பெயரில் உள்ளது.
சர்வே எண் 278 குறித்த செய்தியில் ஏன் - அதற்கு வடக்கில் உள்ள -
சர்வே எண் 277 குறித்த விபரங்கள் விரிவாக வழங்கப்படுகிறது என்ற கேள்வி எழலாம். ஒரு காலத்தில் நிலங்களாக இருந்த இந்த இடம் (சர்வே எண் 277) தற்போது - ஏறத்தாழ முழுவதும் - CZMP வரைபடப்படி, நீரில் மூழ்கியுள்ளது.
2010ஆம் ஆண்டு - LKS Gold House Educational Charitable Trust மற்றும் LKS Jewellers Educational Trust ஆகியோருக்கு இடையில்
நடந்த நன்கொடைப் பத்திரப் பதிவில் - இந்த (277/2B) நிலத்திற்கு வடக்கில் DCW நஞ்சு வாய்க்கால் ஓடுவதாகக் கூறப்பட்டுள்ளது. நிலைமை என்னவெனில் - கடல் அலைகளின் தாக்கத்தால், DCW நஞ்சு வாய்க்கால் - சர்வே எண் 277 முழுவதையும் தற்போது ஆக்கிரமித்துள்ளது. அதுவே - CZMP வரைபடத்தில், சர்வே எண் 277, நீல வர்ணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கான காரணமாகும்.
சர்வே எண் 277க்கு வடக்கில் ஓடிய வாய்க்கால், சர்வே எண் 277 முழுவதையும் ஆக்கிரமித்துள்ளது மட்டுமலாமல், தற்போது சர்ச்சைக்குரிய சர்வே எண் 278 நிலத்தின் மத்திய பகுதிக்குள்ளும் நுழைந்துள்ளது.
இதனால்தான், சர்வே எண் 278 நிலத்தின் CZMP படம் - அதன் மத்திய பகுதியை, நீல வர்ணத்தில் (WATER AREA) காண்பிக்கிறது. அதாவது DCW நஞ்சு வாய்க்காலின் ஒரு பகுதி - தனது எல்லையை தாண்டி, சர்வே எண் 277 நிலத்தையும் தாண்டி, சர்வே எண் 278 இடத்திலும் அமைந்துள்ளது.
அதே படத்தில் - சர்வே எண் 278 நிலத்தின் மத்தியில் காணப்படும் இளஞ்சிவப்புக் கோடு - உயர் நிலை அலையின் (HTL) எல்லையாகும். அதனைச் சுற்றி அமைந்துள்ள நிலங்களின் பெருவாரியானவை, CRZ - 1 வரைமுறைக்குள் வருவதால், பச்சை வர்ணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளது.
காயல்பட்டினம் வடபாக கிராமத்தில் உள்ள சர்வே எண் 278 - ஒரு காலத்தில் காடாக இருந்து, பிறகு மேய்ச்சல் தரை என மாறி, தற்போது முழுவதும் நீரில் இருப்பது போல்,
காயல்பட்டினம் தென்பாக கிராமத்தில் உள்ள சர்வே எண் 277 நிலமாகவும், அதன் ஒரு பகுதி மயானமாகவும் பயன்படுத்தப்பட்டுவந்து, தற்போது
அதுவும் முழுவதும் நீரில் உள்ளது போல்,
சர்வே எண் 277க்கு உடனடி தெற்கில் உள்ள காயல்பட்டினம் தென்பாக கிராம சர்வே எண் 278 இடம் முழுவதும் - கடல் அரிப்பின் காரணமாக நீரில் மூழ்கிட வாய்ப்புகள் இருப்பதும், நீண்ட காலம் பயன்தர வேண்டிய, 90 லட்ச ரூபாய் மதிப்பிலான பயோ காஸ் திட்டம் இந்த இடத்தில் அமைந்திட - நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், எதிர்ப்பு தெரிவித்ததற்கான முக்கிய காரணங்களுள் ஒன்றாகும்.
முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஹாஜி வாவு செய்யது அப்துர் ரஹ்மான், இரு பத்திரங்கள் மூலம் - 5.5 ஏக்கர் நிலத்தை, காயல்பட்டினம் நகராட்சிக்கு
வழங்கினார். அதில் - அவர் வழங்கிய 4 ஏக்கர் நிலம், அவரது நிலத்தின், மேற்குக் கோடியில் (278/1) அமைந்துள்ளது.
சாலைக்கு என வழங்கப்பட்ட 1.5 ஏக்கர் நிலம் - தென் வடல் (140 மீட்டர்), கிழ மேல் (466 மீட்டர்) என சர்வே எண் 278இன் தென் கிழக்குக் கோடியில் துவங்கி, மத்தியில் தொடர்ந்து, மேற்கு மத்திய பகுதியை அடைகிறது. அதாவது - சர்வே எண் 278 இல், நிலவியல் பாதை துவங்கியவுடன், உடனடியாக மேற்கு நோக்கி சாலை வழங்கப்படாமல், தென் வடலாக 140 மீட்டர் நீளத்திற்கு சாலை வழங்கப்பட்டு, அதன்பிறகு மேற்கு நோக்கி, கிழ மேலாக, 466 மீட்டர் தூரத்திற்கு சாலைக்கான நிலம் வழங்கப்பட்டுள்ளது.
[இவ்வாறு சாலை வழங்கப்பட்டதற்கான நோக்கம் கேள்விக்குரியது. இதற்கு சுருக்கமாக சாலை வழங்கப்பட்டிருந்தாலும், அதுவும் CRZ-1 வரைமுறைக்குள் வரும் என்பதால் இச்செய்தியில் அதுகுறித்து விரிவாக விவரிக்க அவசியம் எழவில்லை.]
அவரது நிலத்தின் - 278/2 உட்பிரிவில் அமைந்துள்ள நிலவியல் பாதையை ஒட்டி, 4 ஏக்கர் நிலம் தராமல், அதன் மேற்கு கோடியில் நிலத்தை ஒதுக்கியதற்கு காரணம், DCW நஞ்சு வாய்க்கால் - சர்வே எண் 278இன் வடக்கு மத்தியில், நிரந்தரமாக உள்வாங்கியுள்ளதால், அப்பகுதி - CRZ-1
வரைமுறைக்குள் வருவதாகும்.
எனவேதான் - மாசு கட்டுப்பாட்டு வாரியமும், அதனைத் தொடர்ந்து DTCP அமைப்பும், இந்தத் திட்டம் - CRZ வரைமுறைக்குள் வருகிறது என்று கூறி இந்நிலத்தை நிராகரித்துள்ளன.
மேலும், இதன் காரணமாகத்தான் - தற்போது நகராட்சி மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய விண்ணப்பத்தில், சாலைக்கு என வழங்கப்பட்ட
இடத்தை இணைக்காமல் (1.5 ஏக்கர் நிலம்), விண்ணப்பம் வழங்கப்பட்டு, அசட்டுத் துணிச்சலுடன், பாதை இல்லாத பயணம் துவக்கப்பட்டுள்ளது.
[முற்றும்] |