இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளையால் நடத்தப்பட்ட தேர்தல் பொதுக்குழுக் கூட்டத்தில், அக்கட்சிக்கான நகர நிர்வாகிகளும், நகரின் அனைத்து வார்டுகளுக்கான நிர்வாகிகளும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து, அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
எல்லாம்வல்ல அல்லாஹ்வின் பேரருளால் - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளையின் தேர்தல் பொதுக்குழுக் கூட்டம், இம்மாதம் 10ஆம் நாள் வெள்ளிக்கிழமையன்று 19.00 மணியளவில், கட்சியின் நகர அலுவலகமான - காயல்பட்டினம் சதுக்கைத் தெருவிலுள்ள தியாகி பி.எச்.எம்.முஹம்மத் அப்துல் காதிர் மன்ஸிலில், நகர தலைவர் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் தலைமையில், மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் முன்னிலையில் நடைபெற்றது.
ஹாஃபிழ் வி.எம்.எல்.மொகுதூம் அப்துல் காதிர் கிராஅத் ஓதி, கூட்ட நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
நகர பொருளாளர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன், வரவு-செலவு கணக்கறிக்கையை சமர்ப்பிக்க, கூட்டம் அதற்கு ஒருமனதாக ஒப்புதலளித்தது.
அமீரக காயிதேமில்லத் பேரவையைச் சேர்ந்த பீ.என்.எஸ்.சுல்தான் ஜமாலுத்தீன், முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், காயல்பட்டினம் நகர துணைச் செயலாளர் என்.டீ.அஹ்மத் ஸலாஹுத்தீன், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ ஆகியோர் கருத்துரையாற்றினர்.
அண்மையில் விபத்தில் பலியான பள்ளப்பட்டி - மக்தூமிய்யா அரபிக்கல்லூரியின் மார்க்க அறிஞர்கள், அண்மையில் காலமான இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனீஃபா ஆகியோரின் மஃக்ஃபிரத்திற்காக துஆ பிரார்த்தனை செய்யப்பட்டது. நகர துணைத்தலைவர் எம்.கே.முஹம்மத் அலீ என்ற ஹாஜி காக்கா துஆ இறைஞ்சினார்.
முன்னிலை வகித்த - பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் சிறப்புரையாற்றியதோடு, கட்சியின் அனைத்து வார்டுகளுக்கான நிர்வாகிகள், நகர நிர்வாகிகள் தேர்தலையும் நடத்தினார்.
பங்கேற்றோர் கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து, பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - மறைந்தோருக்கு இரங்கல்:
அண்மையில் விபத்தில் காலமான - பள்ளப்பட்டி மக்தூமிய்யா அரபிக்கல்லூரியின் 8 உலமாக்கள் மற்றும் ஓட்டுநர்,
தனதினிய குரலால் எண்ணிலடங்கா பாடல்களைப் பாடி, முஸ்லிம் சமூகத்திற்கு மார்க்க அடிப்படையைப் போதித்து, மகத்தான சேவையாற்றிய ‘இசைமுரசு’ நாகூர் இ.எம்.ஹனீஃபா, தமிழ் இலக்கியத் துறையில் தன் நிறைவான பங்களிப்புகளை வழங்கிச் சேவையாற்றிய எழுத்தாளர் ஜெயகாந்தன் ஆகியோர் மறைவுக்கு இக்கூட்டம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், பள்ளப்பட்டி மார்க்க அறிஞர்கள் குழுவில் பயணித்து, விபத்தில் படுகாயமுற்று சிகிச்சை பெற்று வரும் மார்க்க அறிஞர் விரைவில் குணமடையவும் இக்கூட்டம் பிரார்த்திக்கிறது.
தீர்மானம் 2 - நடப்பு நிர்வாகத்திற்கு நன்றி:
தாய்ச்சபையின் காயல்பட்டினம் ப்ரைமரி நிர்வாகிகளாக இதுநாள் வரை இருந்து, நிறைவான சேவைகள் ஆற்றியமைக்காக, நடப்பு நிர்வாகிகள் அனைவருக்கும் இக்கூட்டம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 3 - வரவு-செலவு கணக்கறிக்கைக்கு ஒப்புதல்:
நகர பொருளாளர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன் அவர்களால் இக்கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட - 24.05.2012 முதல் 10.04.2015 வரையிலான வரவு-செலவு கணக்கறிக்கைக்கு இக்கூட்டம் ஒருமனதாக ஒப்புதலளிக்கிறது.
தீர்மானம் 4 - வார்டு நிர்வாகிகள் தேர்தல்:
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளையின் அனைத்து வார்டுகளுக்கான நிர்வாகிகள் பின்வருமாறு ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்:-
வார்டு 01:
தலைவர்: கே.எம்.சுல்தான் ஜரூக்
செயலாளர்: ஜெ.ஏ.செய்யித் முஹம்மத்
வார்டு 02:
தலைவர்: பீ.எம்.எஸ்.அமானுல்லாஹ்
செயலாளர்: எம்.இசட்.ஸித்தீக்
வார்டு 03:
தலைவர்: கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை
செயலாளர்: ஏ.ஆர்.ஷேக் முஹம்மத்
பொருளாளர்: எஸ்.ஏ.கே.முஜீபுர்ரஹ்மான்
வார்டு 04:
தலைவர்: எம்.எல்.ஷேக்னா லெப்பை
செயலாளர்: கே.எம்.என்.உமர் அப்துல் காதிர்
வார்டு 05:
தலைவர்: அரபி எம்.எம்.ஷாஹுல் ஹமீத்
செயலாளர்: என்.டீ.அஹ்மத் ஸலாஹுத்தீன்
பொருளாளர்: கே.எம்.ஏ.அஹ்மத் ஸாலிஹ்
வார்டு 06:
தலைவர்: ஏ.கே.மஹ்மூத் சுலைமான்
செயலாளர்: எஸ்.கே.ஸாலிஹ்
பொருளாளர்: பீ.எம்.ஏ.சி.ஷேக் நூருத்தீன்
வார்டு 07:
தலைவர்: என்.டீ.முஹம்மத் இஸ்மாஈல் புகாரீ
செயலாளர்: கே.வி.எச்.எம்.ஜிஃப்ரீ
பொருளாளர்: என்.டீ.பாதுல் அஸ்ஹப்
வார்டு 08:
தலைவர்: பெத்தப்பா எம்.ஏ.சி.சுல்தான்
செயலாளர்: எம்.எஸ்.காலித் அன்ஸாரீ
வார்டு 09:
தலைவர்: சாளை எம்.புகாரீ
செயலாளர்: எம்.ஓ.பிலால்
வார்டு 10:
தலைவர்: கே.அப்துர்ரஹ்மான்
செயலாளர்: என்.டீ.ஸதக்கத்துல்லாஹ்
பொருளாளர்: எஸ்.ஏ.செய்யித் முஹ்யித்தீன் என்ற பாபு
வார்டு 11, 12:
தலைவர்: ஏ.எஸ்.யூஸுஃப் பலியா
செயலாளர்: பி.பத்ருத்தீன்
பொருளாளர்: எஸ்.ஷேக் அப்துல் காதிர்
வார்டு 13, 14:
தலைவர்: எஸ்.எம்.செய்கு ஹுஸைன்
செயலாளர்: சொளுக்கு எஸ்.முஹம்மத் தம்பி
வார்டு 15:
தலைவர்: ஆர்.பீ.ஷம்சுத்தீன்
செயலாளர்: இமாம் பூஸரீ
வார்டு 16:
தலைவர்: எம்.யு.அமானுல்லாஹ்
செயலாளர்: ஸர்ஃபராஜ்
வார்டு 17:
தலைவர்: ஜெ.உமர்
செயலாளர்: கே.எம்.டீ.அபூபக்கர் ஸித்தீக்
வார்டு 18:
தலைவர்: ரஹ்மத்துல்லாஹ்
செயலாளர்: எலக்ட்ரீஷியன் பஷீர்
வெற்றிடப் பொறுப்புகளுக்கு பொறுப்பாளர்களை நியமிக்கும் அதிகாரத்தை வார்டு தலைவர், செயலருக்கு வழங்கி தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் 5 - மாவட்டப் பிரதிநிதிகள் தேர்வு:
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளைக்கு பின்வருமாறு மாவட்டப் பிரதிநிதிகள் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டனர்:-
(01) கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர்
(02) வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர்
(03) எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ
(04) எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன்
(05) எம்.ஏ.முஹம்மத் ஹஸன்
(06) மன்னர் ஏ.ஆர்.பாதுல் அஸ்ஹப்
(07) எம்.கே.முஹம்மத் அலீ (ஹாஜி காக்கா)
(08) ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ்
(09) கே.எம்.டீ.சுலைமான்
(10) எம்.டீ.எஸ்.முஹம்மத் முஹ்யித்தீன்
(11) எம்.எம்.அய்யூப்
(12) எம்.எச்.அப்துல் வாஹித்
(13) எம்.ஏ.சி.சுஹைல் இப்றாஹீம்
தீர்மானம் 6 - நகர நிர்வாகிகள், கவுரவ ஆலோசனைக் குழுவினர் தேர்வு:
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளைக்கு, பின்வருமாறு நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டனர்:-
தலைவர்:
ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர்
செயலாளர்:
ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ்
பொருளாளர்:
ஹாஜி எம்.ஏ.முஹம்மத் ஹஸன்
கவுரவ ஆலோசனைக் குழு உறுப்பினர்கள்:
(01) மவ்லவீ எஸ்.எஸ்.இ.காழி அலாவுத்தீன் ஆலிம்
(02) ஹாஜி எஸ்.டீ.வெள்ளைத்தம்பி
(03) ஹாஜி வாவு எஸ்.ஸித்தீக்
(04) ஹாஜி ஆர்.எஸ்.அப்துல் காதிர்
(05) ஹாஜி எம்.எம்.மொகுதூம் கண் ஸாஹிப்
(06) ஹாஜி எஸ்.ஏ.முஹம்மத் அலீ
(07) ஹாஜி அரபி எம்.எம்.முஹம்மத் முஹ்யித்தீன்
(08) ஹாஜி எம்.எஸ்.முஹ்யித்தீன் தம்பி
(09) ஹாஜி எஸ்.டீ.கமால்
(10) ஹாஜி எம்.ஏ.செய்யித் முஹம்மத் அலீ
(11) ஹாஜி வாவு எஸ்.அப்துல் கஃப்ஃபார்
(12) ஹாஜி எஸ்.எல்.ஷெய்கு அப்துல் காதிர்
(13) ஹாஜி எம்.எம்.அஹ்மத்
(14) ஹாஜி டூட்டி எம்.எஸ்.எல்.சுஹ்ரவர்த்தி
(15) ஹாஜி எம்.பி.ஏ.ஸலீம்
தீர்மானம் 7 - விபத்தில் காலமான மார்க்க அறிஞர்கள் குடும்பங்களுக்கு நல நிதி சேகரிப்பு:
அண்மையில் விபத்தில் காலமான பள்ளப்பட்டி மக்தூமிய்யா அரபிக்கல்லூரியின் 8 மார்க்க அறிஞர்கள், படுகாயமுற்று சிகிச்சை பெற்று வரும் ஒரு மார்க்க அறிஞர் மற்றும் ஒரு ஓட்டுநர் உள்ளிட்ட 10 பேரது குடும்பங்களுக்கும் தலா 25 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்க, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில தலைமை முடிவு செய்துள்ளது. இவ்வகைக்காக, தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து 32 ஆயிரம் ரூபாய் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வகைக்காக, தமது தாராள நன்கொடைகளை வழங்கியுதவிய நல்லுள்ளங்களுக்கு இக்கூட்டம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 8 - உடல் நலம் குன்றியோர் குணமடைய பிரார்த்தனை:
உடல் நலம் குன்றி சிகிச்சை பெற்று வரும் கட்சியின் மூத்த நிர்வாகி ஹாஃபிழ் எஸ்.எல்.ஷெய்கு அப்துல் காதிர், கட்சியின் அபிமானி ஹாஜி எஸ்.ஏ.முஹ்யித்தீன் தம்பி ஆகியோர் விரைவில் குணமடைந்து, சமூகப் பணிகளாற்றிட, வல்ல இறையோனிடம் இக்கூட்டம் இருகரமேந்திப் பிரார்த்திக்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தாய்ச்சபையின் நகர கிளையிலிருந்து இதுவரை உறுப்பினராக இணைந்துள்ளோருக்கான அடையாள அட்டைகளை அந்தந்த வார்டு நிர்வாகிகளிடம், மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் கையளித்தார்.
நகர பொருளாளர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன் நன்றி கூற, மவ்லவீ எஸ்.எஸ்.இ.காழி அலாவுத்தீன் ஆலிம் துஆவைத் தொடர்ந்து, ஸலவாத்துடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது. இக்கூட்டத்தில், கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
S.A.இப்றாஹீம் மக்கீ
படங்களில் உதவி:
A.R.ஷேக் முஹம்மத்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் கிளை சார்பில், இதற்கு முன் நடைபெற்ற நிர்வாகிகள் தேர்தல் பொதுக்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[சிறு திருத்தம் செய்யப்பட்டது @ 20:03 / 12.04.2015] |