திருச்செந்தூர் அருகே உள்ள நா.முத்தையாபுரம் பூச்சிக்காடு ரோட்டில் உள்ள தனியார் தோட்டத்தில் பணம் வைத்து சூதாடுவதாக திருச்செந்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மநாபபிள்ளை, சப்–இன்ஸ்பெக்டர் திலீபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டு இருந்த காயல்பட்டினத்தைச் சேர்ந்த முகம்மது அன்சாரி (வயது 30), முத்து நயினா (30), கிதிர் (40), அபு (27), மூசா (40), சிராஜூதீன் முக்தின் (35) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த ரூ.45 ஆயிரத்து 140 மற்றும் ஒரு காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தகவல் மூலம்:
தினத்தந்தி இணையதளம் |