“காசுக்குப் பேயாய் அலையும் கழிசடை அரசியால்வாதிகள் சகோதரி ஆபிதா ஷேக் அவர்களிடம் பாடம் பயில்வார்களா?” - ‘நேர்மை நெறி’ இதழில் ஊழல் எதிர்ப்பு இயக்கத் தலைவர் கேள்வி!
“காசுக்குப் பேயாய் அலையும் கழிசடை அரசியால்வாதிகள் சகோதரி ஆபிதா ஷேக் அவர்களிடம் பாடம் பயில்வார்களா?” என, ‘ஊழல் எதிர்ப்பு இயக்கம் – சென்னை’ அமைப்பின் மூலம் வெளியிடப்படும் ‘நேர்மை நெறி’ (ஏப்ரல் 2015) மாத இதழில் அவ்வமைப்பின் தலைவரும், ‘நேர்மை நெறி’ இதழாசிரியரும், தமிழக அரசு பொதுப்பணித்துறையின் பணி நிறைவு பெற்ற தலைமைப் பொறியாளருமான செ.மா.அரசு கேள்வியெழுப்பியுள்ளார். ‘நேர்மை நெறி’ இதழில் இப்பகுதி வெளியான பக்கம்:-
காயல்பட்டினம் நகராட்சியில் சேவைகளுக்கு யாரேனும் லஞ்சம் கேட்டால் தகவல் தருமாறு கோரி, நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் அண்மையில் வெளியிட்ட பொதுப்பிரசுரத்தின் அடிப்படையில், ‘நேர்மை நெறி’ மாத இதழில் இத்தகவல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஊழல் எதிர்ப்பு இயக்கம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
1. Re:... posted byLukman (chennai)[12 April 2015] IP: 49.*.*.* India | Comment Reference Number: 40113
அஸ்ஸலாமு அழைக்கும்.
இது வரை நகராச்சி பற்றி பொது மக்களிடம் வந்த ஊழல் புகார் பற்றிய. தகவல்களையும் அந்த. புகார்கள் சம்பந்தமாக. சம்பந்தப்பட்டவர்கள் மீது நகர மன்றதலைவி அவர்கள் எடுத்த
நடவடிக்கைகள் என்ன ? என்பதை பற்றியும் தலைவி அவர்கள் மக்களுக்கு விளக்கம் அளித்தால் நன்றாக. இருக்கும்.
2. Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (RIYADH)[13 April 2015] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40119
அஸ்ஸலாமு அலைக்கும்.
நம் ஊர் நகர் மன்ற மரியாதைக்குரிய தலைவி அவர்களை .... ஒரு அமைப்பின் '' நேர்மை நெறி’ இதழில் ஊழல் எதிர்ப்பு இயக்கத் தலைவர் அவர்கள பாராட்டி இருப்பது ...நம் ஊர் நகர் மன்றத்துக்கு கிடைத்த ஒரு வெற்றி என்றே தான் ...சொல்லணும் .....நம் நகர் மன்ற தலைவி அவர்கள் மூலம்...நமக்கும் & நம் ஊர்வ் நகர் மன்றத்துக்கும் பெருமையே ...
நம் அருமை லுக்மான் காகா அவர்களின் கேள்வி ...தேவைக்கற்றது என்றே பொதுவாக கருதுகிறேன் ....நாம் பெருமை படவேணுமே தவிர ....தேவைக்கற்ற '' வீண் '' வாதங்கள் வைக்க கூடாது ....
நம் நகர் மன்ற தலைவி அவர்களின் இந்த துணிச்சலை ...வெளி உலகம் பாராட்டும் போது....நாம் குறை கண்டு பிடிப்பதில் நம்மை நாமே குற்றம் சொல்வது போன்று உள்ளது ......தயவு செய்து யாரும் குறை கண்டு பிடிப்பது கொஞ்சமும் சரி இல்லை ......
நம் மரியாதைக்குரிய நகர் மன்ற உறுப்பினர்கள் ..நம் நகர் மன்ற தலைவி அவர்களுடன் இணைந்து செயல் பட்டால்.....நம் ஊர் நகர் மன்றத்துடன் ...எந்த ஊர் நகர் மன்றமும் நெருங்க முடியாத அளவுக்கு ...நம் ஊர் நகர் மன்ற சிறப்புடன் ,, சிறந்து விளங்கும் .....இதில் சந்தேகமே இல்லை ....
>>> நம் பாராட்டுக்குரிய தலைவி அவர்களுக்கு இன்னும் இது போன்ற பல பாராட்டுக்கள் ....வெளி உலகம் மூலம் .... இன்ஷா அல்லாஹ் ...தொடர்ந்து கிடைக்கும் .....நாம் '' துவா செய்து வாழ்த்துவோமாக ........... வஸ்ஸலாம்
4. Re:...மாஷா அல்லாஹ் posted byShaik Abdul Cader (KayalPatnam)[14 April 2015] IP: 182.*.*.* India | Comment Reference Number: 40122
மாஷா அல்லாஹ் ..நம்மூர் சகோதரி ஆபிதா அவர்களின் துனிச்சலான நடவடிக்கைகளுக்கும் ,எந்த சூழ்னிலையிலும் அநீதிக்கு ஆதரவளிப்பதில்லை என்பதாலும் பிறர் பாராட்டும்போது நமக்கு பெருமையாயிருந்தாலும் கூட ,நம்மூர் நகராட்சியில் உறுப்பினர்கள் ,இப்படி பட்ட தலைவிக்கு மாற்றமாக இருப்பது நமக்கு வேதனையாகவே உள்ளது ..அவர்களாகவே திருந்துவார்கள் என்று எதிபார்ப்போம்.அல்லது காலத்தின் மாற்றம் அவர்களை திருத்தும் என்று நம்புவோமாக.
5. Re:...அரசியல்.,பொது சேவையில் தெளிந்தால் நீரோடை...கலக்கினால் சாக்கடை...! posted byAnbinalA (Jaipur)[14 April 2015] IP: 101.*.*.* India | Comment Reference Number: 40131
தேர்தலுக்கு முன் இலட்சியங்கள்
முதலிடமாக இருக்கிறது...
தேர்வுக்கு பின் "இலட்சங்கள்"
முதல்மை இடமளிக்கிறது...
நமது வீட்டில் மூலையில் உள்ள குப்பைகளை
வெளியே கொட்டுவது போல
நமது "மூளையில்" ஏற்படும் சில தரமில்லாத
முடிவுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுங்கள்
இல்லை என்றால் "சிந்துபாத்" தொடர் போல
நீண்டுக் கொண்டே போகுமல்லவா....?
மீனவன் தொண்டையில் முள்
மீனின் பழிக்கு பழி... - இப்படித் தான்
நகர் மன்றத்தின் பனிப்போர் நகர்கிறது...
குழாயில் தண்ணீர் வருவதில்லை - ஆனால்
குழாயடி சண்டை என்பது தினம்...தினம்...
தலைப்புச் செய்தியாகவே நகர் வளம் வருகிறது...
மன்றங்கள்
மாமன்றங்களாக
மனித குலத்துக்கு நன்மை பல செய்திட பிராத்திப்போமாக....ஆமீன்....!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross