Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:45:52 PM
வெள்ளி | 4 அக்டோபர் 2024 | துல்ஹஜ் 1891, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:1315:2918:1619:24
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்07:03
மறைவு18:07மறைவு19:06
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5605:2005:44
உச்சி
12:06
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:2818:5219:16
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15730
#KOTW15730
Increase Font Size Decrease Font Size
புதன், ஏப்ரல் 8, 2015
இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனீஃபா காலமானார்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 10817 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (34) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த - புகழ்பெற்ற இஸ்லாமிய பாடகர் நாகூர் இ.எம்.ஹனீஃபா, இன்று 20.00 மணியளவில் சென்னை – கோட்டூர்புரத்திலுள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 90.

அன்னாரின் ஜனாஸா, சென்னையிலிருந்து நாளை (ஏப்ரல் 09 வியாழக்கிழமை) நாகூருக்குக் கொண்டுவரப்பட்டு, நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. நல்லடக்க நேரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

சுயமரியாதை இயக்கத் தொண்டராய், இந்தி எதிர்ப்புப் போராட்ட வீரராய் தம் அரசியல் வாழ்வைத் தொடங்கியவர் நாகூர் ஹனீஃபா. நீதிக்கட்சி, திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய திராவிட இயக்கங்களின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியவர். பட்டுக்கோட்டை அழகிரி, தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் மு.கருணாநிதி ஆகியோரின் நேசத்திற்குரியவர்.



கண்ணியத் தலைவர் காயிதே மில்லத்தின் அன்பைப் பெற்றவர். தமிழக அரசியல் களத்திலும், இஸ்லாமியப் பண்பாட்டுத் தளத்திலும் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். அவரது பாடல்கள் ஒலிக்காத பெருநாட்கள் இல்லை. அவர் குரல் கேட்காத கூட்டங்கள் இல்லை. அவரது பாடல்களில் உருகாத நெஞ்சங்கள் இல்லை.

இராமநாதபுரம் மாவட்டம் வெளிப்பட்டினத்தில் 1925 டிசம்பர் 25ஆம் நாளன்று, முஹம்மது இஸ்மாஈல் - மரியம் பீவி தம்பதிக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார் நாகூர் இ.எம்.ஹனீஃபா. இஸ்மாஈல் முஹம்மத் ஹனீஃபா என்பது இயற்பெயர். அப்பெயரைச் சுருக்கி இ.எம்.ஹனீஃபா என்று அழைக்கப்பட்டார். தந்தையின் பூர்வீகம் நாகூர் என்பதால் பெயரோடு நாகூரும் சேர்ந்து கொண்டது. இசை உலகில் பிரபலமானவுடன் ‘இசைமுரசு’ எனும் அடைமொழியும் அப்பெயரோடு இணைந்தது. சிறு வயதிலிருந்தே ஹனீபா பாடத் தொடங்கி விட்டார். நாகூரில் அவர் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, பள்ளிக்கூடத்தில் இறைவணக்கம் பாடியதுதான் அவரது முதல் பாடல் அனுபவம். அதன் பிறகு, திருமண நிகழ்ச்சிகளின்போது நடைபெறும் மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலங்களில் பாடினார் ஹனீபா.

1941ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டம் தேரிழந்தூரில் ஒரு திருமண நிகழ்வில் இசைக் கச்சேரி செய்ய ஹனீஃபாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. வெளியூர் சென்று இசைக் குழுவினருடன் ஹனீஃபா செய்த முதல் கச்சேரி அது. முறையாகப் பணம் பெற்றுக்கொண்டு செய்த கச்சேரியும் அதுவே. 25 ரூபாயைப் பெற்றுக்கொண்டு ஹனீஃபா அந்தக் கச்சேரியை நடத்தியபோது அவருக்கு வயது 15.

ஹனீஃபா முறையாக சங்கீதம் கற்றவர் அல்லர். அவரது எடுப்பான குரல் இயற்கையாகவே அமைந்தது. 1954இல் அவரது பாடல்கள் இசைத்தட்டில் பதிவாயின. இலங்கை கம்பலையில் வாழ்ந்த நல்லதம்பி பாவலர் எழுதிய ‘சின்னச் சின்னப் பாலர்களே! சிங்காரத் தோழர்களே!’ என்று தொடங்கும் சிறுவர்களுக்கான அறிவுரைப் பாடலும், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எழுதிய ‘எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு’ என்ற உணர்ச்சிப் பாடலும் ஒரே இசைத்தட்டில் பதிவாகி முதன் முதலில் வெளிவந்தது. ஹனீஃபா ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். பல்லாயிரக்கணக்கான இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.

1940களில் தொடங்கி 2006 வரை சுமார் 65 ஆண்டுகள் தொடர்ச்சியாகக் கச்சேரிகள் செய்துள்ளார். எந்த இசைக் கலைஞரும் செய்யாத அரிய சாதனை இது. உலக நாடுகள் பலவற்றிலும் ஹனீஃபாவின் இசை முழக்கம் அரங்கேறியுள்ளது. இலங்கையில் தொடங்கிய அவரது உலக இசைப்பயணம், சிங்கப்பூர், மலேஷியா, ஐக்கிய அரபு அமீகரத்தில் துபை - அபூதபீ, கத்தார், பஹ்ரைன், ஹாங்காங் என தொடர்ந்தது. ஹனீஃபாவின் பாடல்கள் சமய சமூக நல்லிணக்கத்துக்கு பெருந்துணை புரிந்துள்ளன.

தமிழகத்தில் சமயப் பூசல்கள் இன்றி சமூகங்களுக்கு இடையே அன்பும், அமைதியும் நிலவுவதற்கு ஹனீபாவும் ஒரு காரணம். தவத்திரு குன்றக்குடி அடிகளார், ஹனீஃபாவின் தீவிர ரசிகர். மதுரை ஆதீனம் காரில் பயணம் செய்யும்போதெல்லாம் ஹனீஃபாவின் பாடல்களையே பெரிதும் விரும்பிக் கேட்பாராம்.



திரைத்துறையிலும் தடம் பதித்தவர் ஹனீஃபா. குலேபகாவலி திரைப்படத்தில் ஜிக்கி மற்றும் எல்.ஜி.கிருஷ்ணன் ஆகியோருடன் இணைந்து, ‘நாயகமே நபி நாயகமே’என்ற பாடலைப் பாடினார். பின்னர் பாவமன்னிப்பு படத்தில் டி.எம்.சௌந்தரராஜனோடு இணைந்து ‘எல்லோரும் கொண்டாடுவோம்’என்ற பாடலையும், செம்பருத்தி படத்தில் ‘நட்ட நடுக் கடல் மீது’ என்ற பாடலையும், ராமன் அப்துல்லா படத்தில் ‘உன் மதமா என் மதமா’என்ற பாடலையும் மேலும் பல திரைப்பாடல்களையும் பாடியுள்ளார்.

ஹனீஃபா பாடிய ‘இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை’ என்ற பாடல், மத வேறுபாடுகளைக் கடந்து இந்து, கிறித்துவ வீடுகளிலெல்லாம் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

தகவல் மூலம்: நக்கீரன் இணையதளம்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Reஇன்னாளிலாஹி வ இன்னா இலிஹி ரஜிஹூன்!
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [08 April 2015]
IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 40052

இன்னாளிலாஹி வ இன்னா இலிஹி ரஜிஹூன்!

"இல்லை என்று சொல்லும் மனம் இல்லாதவன்-அவன்
ஈடு இணை இல்லாத கருணையுள்ளவன்
இன்னல்பட்டு எழும் குரலை கேட்க்கின்றவன்
எண்ணங்களை இதயங்களில் பார்க்கின்றவன்"

இறைவனிடம் கையேந்துங்கள் -அவன்
இல்லையென்று சொல்லுவதில்லை
பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள் -அவன்
பொக்கிஷத்தை மூடுவதில்லை!

என்று கம்பீரமாக கணீரென கர்ஜிதத இஸ்லாமிய இன்னிசை சிங்கம் இசைமுரசு நாகூர் EM ஹனிபா அவர்கள் இன்று நம்மை விட்டு சென்று விட்டார்கள்!.

அவர்கள் இசைத்த எண்ணிளடங்கா பாடல்களில் மேலே மேற்கோள் காட்டிய அந்த குறிபட்ட பாடலை எல்லா மதத்தவர்களும் அவர்கள் மதவழிபாட்டு மேடையில் பாடியதை கேட்க முடிந்தது!.

ஆக, இசைமுரசு அவர்கள் எல்லா மதத்தவரின் மனங்களையும் தன் இசை ஆற்றலால் இணைத்து, நம் புனித மார்க்கத்தின் இறைக்கொள்கை சித்தாந்தத்தை சிறப்புற இப்பூமியல் பரப்பிய ஒரு பூங்குயில் பறந்து விட்டது!

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் அனைத்து பிழைகளையும் மன்னித்து ஆகிரத்தில் ஜன்னத்துல் பிர்தவௌஸ் என்ற நற்பதவியை கொடுத்தருள்வானாக ஆமீன்!

அன்னாரின் பிரிவுத்துயரில் வாடும் குடும்பத்தார்கள் அனைவர்களுக்கும் என் அனுதாபம் அடங்கிய ஆறுதலுடைய ஸலாத்தினை தெரிவிக்கிறேன்! அஸ்ஸலாமு அழைக்கும்!

சபூருடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by omer anas (doha,qatar) [08 April 2015]
IP: 37.*.*.* | Comment Reference Number: 40053

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by shaik dawood (Sharjah) [08 April 2015]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 40054

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .

வல்ல நாயன் மர்ஹூமா அவர்களின் பாவங்களை பொருத்து மேலான சுவன பதியை கொடுத்து அருள்வானாக. ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்...
posted by Abdul Cader.S (Hong Kong) [08 April 2015]
IP: 121.*.*.* Hong Kong | Comment Reference Number: 40055

இன்ன லிள்ளஹி வா இன்ன இலைஹி ராஜிஊன்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [08 April 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 40056

இன்னாலிலீலாஹி வ இன்னா இலைஹி ராஜ்வூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...KULLUMAN ALAIHA FAAN
posted by Naseem (Srilanka) [09 April 2015]
IP: 103.*.*.* Sri Lanka | Comment Reference Number: 40058

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்

அல்ஹாஜ் நாகூர் ஹனீஃபா அவர்களின் வபாஃத் செய்தியறிந்து கவலையடைந்தேன். அவருடைய பால்கள் அனைத்தும் கருத்து நிறைந்தவைகள். இறைவனிடம் கையேந்துங்கள் என்ற பாடல் மதங்கள் சமயங்களைத் தாண்டி அனைவரையும் ரசிக்க வைத்தது. காணக்கண் கோடிவேண்டும் கஃபாவை என்ற பாடலைக்கேட்கும் போது உண்மையிலேயே ஹஜ்ஜுக்குச்சென்று வந்த உணர்வு ஏற்படும். ஒருநாள் மதீனாநகர்தனிலே மற்றும் மௌத்தையே நீ மறந்து வாழலாகுமா என்ற பாடல்கள் நெஞ்சை உருகச்செய்யும்.

கட்சிப்பாடல்களில்
ஓடிவருகிறான் உதயசூரியன், வளர்த்தகடா மார்பில் பாய்ந்ததடா போன்ற பாடல்கள் மறக்கமுடியாதவைகள். திராவிட முன்னேற்றக் கழகத்தில் அண்ணா கலைஞர் போன்ற தலைவர்களோடு நெருங்கிய தொடர்புகொண்டிருந்தார். தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவராக பதவி வகித்திருக்கிறார். அவரின் மறைவு ஈடு செய்யமுடியாத இழப்பாகும்.

எல்லாம்வல்ல இறைவன் அவரின் பிழைகளை மன்னித்து மேலான சுவனபதியில் சேர்த்தருல்வானாக ஆமீன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [09 April 2015]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40059

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிவூன்.

தனது கம்பீர கணீர் குரலால் நமது சமூதாய பாடல்களை பாடி நமது சமூதாய மக்களையும் , மற்றும் தி மு கழகத்தின் பிரசார பாடல்களை பாடி கழக உடன்பிறப்புகளையும் மெய் சிலிர்க்க வைத்தவர் மறைந்த இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனீஃபா அவர்கள் .

அவர்கள் மறைந்தாலும் அவர் பாடிய அந்த பாடல்கள் மூலம் அவரை யாராலும் மறக்கவே முடியாது .

வல்ல நாயன் அவரின் பாவங்களை மன்னித்து , அவரது மண்ணறையை பிரகாசமாக்கி வைப்பானாக . ஆமீன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. இன்னாலில்லாஹி
posted by NIZAR (kayalpatnam) [09 April 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 40060

இன்று இரவு எனது நண்பர் ஒருவர் இசைமுரசு ஹனீபா அவர்களின் மரண செய்தியை சொன்னார். நான் சற்றும் நம்பவில்லை. நான் அந்த நண்பரிடம் சொன்னேன். அவர் இதை போன்று பல முறை மரணம் செய்து உள்ளார் என்றேன். இல்லை இது உண்மையான செய்தி, தொலைகாட்சிகளில் அறிவித்து உள்ளார்கள் என்றதும் நம்பினேன்.

அது என்னமோ தெரியலே. இசை கூடாது,இஸ்லாமிய கச்சேரிகள் கூடாது என்று கருத்து வேறுபாடுகள் கொண்டவர்கள் கூட இவர் பாடலை கேட்டவுடன் அப்படியே ரசிக்க ஆரம்பித்துவிடுவார்கள். அதற்கு காரணம் இவருடைய பெரும்பான்மையான பாடல்களில் நபிகளின் வரலாறும் இஸ்லாமிய வரலாற்று செய்திகளும் மிஞ்சி இருக்கும்.

இவருக்கு ஏற்பட்டு இருக்கும் இத்தனை புகழுக்கும் கவிஞ்சர் நாகூர் சலீமின் வைர வரிகளும் முக்கிய காரணம் எனலாம். என்னுடைய சிறுவயதில் சாஹிப் தைக்கா வெட்டையில் பல்லாக் குடும்பத்தின் கல்யாணத்தில் இவருடைய கச்சேரி நடந்தது. மிக பிரமாண்டமாக நடந்த அந்த கச்சேரியில் மாலை சூடும் மணமக்களே என்ற பாடலை வெளியிட்டு பாடினார். அதிலிருந்து இவர் கச்சேரி நம்,பகுதியில் எங்கு நடந்தாலும் தவறாமல் செல்வதுண்டு. கேரளா கரையோரம் பீமா பள்ளி வரை சென்று இவர் பாடல் கேட்டதுண்டு. இறைவனிடம் கையேந்துங்கள் என்பது இவருக்கு உச்சகட்ட புகழை தேடி கொடுத்தது. இவர் அல்லாத மற்ற பாடர்கள் கச்சேரிகளுக்கு செல்வதுண்டு, அப்பொழுது பாதுகாப்புக்கு வரும் காவல் துறை அதிகாரிகள் மாற்று மத சான்றோர்கள் இறைவனிடம் கையேந்துங்கள் பாடுங்கள் என்று கேட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆக்கியதுண்டு.அவர் பாடிய மவ்த்தையே நீ மறந்து வாலாகுமா? மன்னாதி மன்னரெல்லாம் நிரந்தமறாய் இருந்ததில்லை என்ற அவரின் வரிகளை கொண்டு ஆறுதல் அடைந்து கொள்ள வேண்டும்.இறைவன் அவர்களுக்கு சிறப்பான மறுமை வாழ்வை அளிப்பானாக என முகநூல் நண்பர்கள் சார்பில் இறைஞ்சி முடிக்கிறேன்.கொண்டவர்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by சட்னி,எஸ்.ஏ.கே.செய்யது மீரான்,ஜித்தா (ஜித்தா..) [09 April 2015]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40061

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு..

எல்லாம் வல்ல அல்லாஹ் மறைந்திட்ட மரியாதைக்குரிய இசைமுரசு அல்ஹாஜ் நாகூர் ,இ.எம்.ஹனிபா அவர்களின் நல்லமல்கள் யாவற்றையும் கபூல் செய்து பாவ பிழைகளை மன்னித்து மண்ணறையை வெளிச்சமாக்கி விசாலமாக்கியும் வைத்து நாளை மறுமையில் உயரிய ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவனப்பதியை வழங்கிடுவானாக ஆமீன்.

அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார்களுக்கும் இப்பிரிவை தாங்கிடும் மன வலிமையும் அளித்து 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையையும் எல்லாம் வல்ல அல்லாஹ் வழங்கியருள்வானாக ஆமீன்.

மறைந்திட்ட அல்ஹாஜ் நாகூர் ,இ.எம்.ஹனிபாஅவர்களின் மண்ணறை மற்றும் மறுமை வாழ்வும் சிறப்புறவும் வெற்றி பெறவும் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு மிக்க அன்புடன் வேண்டி கொள்கின்றோம்..

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

ஆழ்ந்த இரங்கலுடன் ,எஸ்.ஏ.கே.செய்யது மீரான்,ஜித்தா .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...இன்னா லில்லாஹி
posted by Omer Abdul Qadir (Chennai) [09 April 2015]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 40063

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன் - நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; மேலும் நாம் அவனிடமே திரும்பிச் செல்லவிருக்கிறோம்...

யா அல்லாஹ்!
இவர்களுக்கு கபரின் வாழ்க்கையை இலகுவாக்கி வைப்பாயாக...

யா அல்லாஹ்!
இவர்களுக்கு கபரின் கேள்விகளை இலகுவாக்கி வைப்பாயாக...

யா அல்லாஹ்!
இவர்களை மறுமையில் நல்லோர்களுடன் எழுப்புவாயாக...

யா அல்லாஹ்!
இவர்களுக்கு சுவர்க்கத்தை ஆகுமானதாக்கி, நரகிலிருந்தும் காப்பாயாக...

யா அல்லாஹ்!
இவர்களுடைய குடும்பத்தார்க்கு பொறுமையை கொடுத்தருள்வாயாக.

யா அல்லாஹ்!
இவர்களை மன்னிப்பாயாக! இவர்களுக்கு அருள் புரிவாயாக! இவர்களது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவர்கள் தங்குமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக! இவர்கள் நுழையும் இடத்தை விசாலமாக்குவாயாக! இவர்களை தண்ணீராலும், பனிக் கட்டியாலும், ஆலங்கட்டியாலும் கழுவுவாயாக! வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து சுத்தம் செய்வதைப் போல் இவர்களை குற்றங்களிலிருந்து சுத்தம் செய்வாயாக! இங்கிருக்கும் வீட்டை விடச் சிறந்த வீட்டையும், இங்கிருக்கும் குடும்பத்தை விடச் சிறந்த குடும்பத்தையும், இங்கிருந்த வாழ்க்கைத் துணையை விட சிறந்த துணையையும் இவர்களுக்கு வழங்குவாயாக!

நீங்கள் முன்னே சென்றுவிட்டீர்கள், இன்ஷா அல்லாஹ் நாங்களும் உங்களை தொடர இருக்கிறோம். யா அல்லாஹ்! எங்கள் அனைவரையும் இம்மையிலும், மறுமையிலும் நல்லோர்கள் கூட்டத்தில் ஆக்கிவைப்பாயாக...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. அனைவருக்கும் மார்க்கக் கல்வி பயிற்றுவித்த ஆசான்!
posted by S,K.Salih (Kayalpatnam) [09 April 2015]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 40064

காயல்பட்டினத்தில் வேண்டுமானால் ஹாமிதிய்யா, மழ்ஹருல் ஆபிதீன், ஜாவியா போன்ற மார்க்கக் கல்வி நிறுவனங்கள் இருக்கலாம். ஆனால், முஸ்லிம்கள் செறிவாக வசித்தும் - மார்க்க வாடையே இல்லாத ஊர்களிலுள்ள மக்களும் ஓரளவுக்கு அல்லாஹ்வை, அவனது தூதரை, மார்க்கக் கிரியைகளை உணர்ந்துள்ளனர் என்றால் அது இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனீஃபா அவர்களின் பாடல்களால்தான்!

வல்ல அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க அவர்கள் தமது இவ்வுலக வாழ்வை முடித்துக்கொண்டார்கள். இசைமுரசு அவர்கள் தம் வாழ்நாளில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகள் அனைத்தையும் கருணையுள்ள அல்லாஹ் தன் அளப்பெரும் கிருபை கொண்டு பொறுத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தில், நபிமார் - ஸித்தீக்கீன் - ஷுஹதா - ஸாலிஹீனுடன் இணைந்திருக்கும் பாக்கியத்தை நற்கூலியாக வழங்கியருள்வானாக...

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் - அவர்களது குடும்பத்தார் உள்ளிட்ட யாவருக்கும் அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக... ஆமீன்.

அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.

துஆக்களுடன்,
எஸ்.கே.ஸாலிஹ்
மற்றும்
மர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் குடும்பத்தார்
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [09 April 2015]
IP: 95.*.*.* Romania | Comment Reference Number: 40065

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .

சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
posted by Mohamed Hassan (Jeddah) [09 April 2015]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40071

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. இன்னலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
posted by SHEIKH ABDUL QADER (RIYADH) [09 April 2015]
IP: 109.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40072

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.

இறையருள் நிறைக.

இன்னலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

கூடிருந்து கூடிப்பாடிப்பறந்த ஒரு தீன்குயில் அல்ஹம்துலில்லாஹ் உடையவனிடம் அடைக்கலமானது உலகெங்கிலும் இவருடயகுரலில் தீனுடைய மொழகள் ஒலிகளாலும்,ஒளிஒலிகளாலும் அறியப்பட்டு தீனறிவை தேனருவியாய் புகட்டி கலாச்சாரங்களையேமாற்றி பகற்றின்றி படைப்புகளைதந்தது படைத்தவனுக்கு பணிவிடைசெய்துவிட்டு விடைபெற்றிருக்கிறது.

அரசியலும் சமூகமும் இவருக்கு கவுரவங்களைத்தந்தது,வசைகளிலும் தசைகளிலும் இசைந்துகொடுக்கவில்லை இசைக்குமட்டுமே இசைந்தது.

நான் திருச்சி எல் கே எஸ் நகைக்கடையில் பணியாற்றிய காலங்களில் 1980 லிருந்து 1993 வரை சிலமுறை அவருடைய மக்களுக்கு நகைகள் செய்திருக்கிறார்கள் அந்த நகைகளுக்கு இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனீஃபா மாடல் என்றே இன்றும் பெயர்பெற்றுவிளங்குகிறது அல்ஹம்துலில்லாஹ்.

இவருடைய "இறைவனிடம் கையேந்துங்கள்,அல்லாஹ்வை நாம் தொழுதால்,அருள்மழைபொழிவாய்"என்றபாடல்கள் என்னுள் இசையார்வத்தைதூண்டியவைகள். நான் மேட்டுத்திடல் (ஹைகிரவுண்ட்) திருநெல்வேலி முஸ்லிம் அநாதை நிலையத்தில் படித்துக்கொண்டிருந்தகாலத்தில் அங்கு அப்பொழுதுநடந்த ஒருவிழாவில் முதல்முறையாக இறைவனிடம் கையேந்துங்கள்,அல்லாஹ்வை நாம் தொழுதால் ஆகியபாடல்களை இசைக்கருவிகளின்றி மாஷா அல்லாஹ் அவருக்கே உரிய ஆச்சாத்திய தொணியில் பாடிமகிழ்வித்தார்கள் அப்பொழுதுதான் அவ்விருபாடல்களையும் முதன்முறையாககேட்டேன் அல்ஹம்துலில்லாஹ் .

கருவிகளில்லாக்காலம்முதல் கணினிக்காலம்தொடர்ந்து களம்வகித்துவருகிறது இனியும் இன்ஷா அல்லாஹ் இந்த இனியகுரல் இணையதளம் இணையாத உளங்களையும் இணையச்செய்ய வலம்வரும்.

அவருக்கு எழுத்துவரிகள் வழியே தந்த ஆக்கங்கள் இவருடைய குரலுக்கு மென்மேலும் ஊக்கம்தந்துவருடுகின்றன.

"ஒரு எழுதுகோலும்,ஒருகுயிலும் படமான பின்னும் பாடம் சொல்கிறது." சுப்ஹானல்லாஹ்.

வல்ல இறைவன் அன்னாரின் பாவப்பிழைகளைப்பொறுத்து மண்ணறையை விசாலமாக்கி வெளிச்சமாக்கி இன்ஷா அல்லாஹ் நாளைமறுமையில் அவனுடைய மேலான் திருதரிசனத்துடன் சுவனத்தில் அமர்த்துவானாக.ஆமீன்.

அன்னாரைப்பிரிந்த குடும்பத்தினர் அனைவருக்கும் அழகிய பொறுமையைக்கொடுத்து அவரைப்போன்ற குயில்களையும் நிறைவானரையும் விரைவில் உருவாக்கிக்கொடுப்பானாக ஆமீன்.

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by SHEIKH HAMEED M.S. (AL MADINAH..KSA) [09 April 2015]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40073

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...assalamu alaikum.
posted by S.H.SEYED IBRAHIM (RIYADH - K.S.A.) [09 April 2015]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40074

"அஸ்ஸலாமு அலைக்கும்."

"இன்னா லிள்ளஹி வா இன்னா இலைஹி றாஜ்ஹீவூன்."

அவர்ஹளது பாட்டில் நம் எல்லோர்ஹளையும் கட்டி போட்டு வைத்து விட்டு மறைந்து விட்டர்ஹல். அல்பக்காவு லில்லாஹ்!!!

வல்ல அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க அவர்கள் தமது இவ்வுலக வாழ்வை முடித்துக்கொண்டார்கள். இசைமுரசு அவர்கள் தம் வாழ்நாளில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகள் அனைத்தையும் கருணையுள்ள அல்லாஹ் தன் அளப்பெரும் கிருபை கொண்டு பொறுத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தில், நபிமார் - ஸித்தீக்கீன் - ஷுஹதா - ஸாலிஹீனுடன் இணைந்திருக்கும் பாக்கியத்தை நற்கூலியாக வழங்கியருள்வானாக... ஆமீன்!!!

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் - அவர்களது குடும்பத்தார் உள்ளிட்ட யாவருக்கும் அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக... ஆமீன்.

ஆழ்ந்த இரங்கலுடன்,
சூப்பர் இப்ராகிம் எஸ். எச். + குடும்பத்தினர்,
ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH - KSA) [09 April 2015]
IP: 93.*.*.* Romania | Comment Reference Number: 40075

இனியும் கிடைக்குமா இவர் போல் இங்கே . இதனை எண்ணினால்விடை தான் எங்கே? இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. இவ்வுலகின் அனைத்து சமூக மக்களின் உள்ளத்தை பெற்றுக்கொண்டு அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க நம்மை முந்திவிட்டார்கள் ......
posted by MOHIDEEN ABDUL KADER (ABUDHABI) [09 April 2015]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 40076

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு..

எல்லாம் வல்ல அல்லாஹ் மறைந்திட்ட மரியாதைக்குரிய இசைமுரசு அல்ஹாஜ் நாகூர் ,இ.எம்.ஹனிபா அவர்களின் நல்லமல்கள் யாவற்றையும் கபூல் செய்து பாவ பிழைகளை மன்னித்து மண்ணறையை வெளிச்சமாக்கி விசாலமாக்கியும் வைத்து நாளை மறுமையில் உயரிய ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவனப்பதியை வழங்கிடுவானாக ஆமீன்.

அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார்களுக்கும் இப்பிரிவை தாங்கிடும் மன வலிமையும் அளித்து 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையையும் எல்லாம் வல்ல அல்லாஹ் வழங்கியருள்வானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. இசை முரசு அல்ஹாஜ் நாகூர் ஈ.எம். ஹனீஃபா வஃபாத்; குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) விடுக்கும் இரங்கல் அறிக்கை!
posted by கலீல் பாகவீ (Kuwait) [09 April 2015]
IP: 91.*.*.* Kuwait | Comment Reference Number: 40077

இசை முரசு அல்ஹாஜ் நாகூர் ஈ.எம். ஹனீஃபா வஃபாத்; குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) விடுக்கும் இரங்கல் அறிக்கை!

https://www.facebook.com/q8tic/posts/872567636150406

குவைத்தில் இன்ஷா அல்லாஹ் வரும் வெள்ளிக்கிழமை (10.04.2015) K-Tic தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு அன்னார் அவர்களின் சேவைகள் நினைவு கூறப்பட்டு, மறுமை வாழ்வின் வெற்றிக்காக சிறப்பு துஆ செய்யப்படும் இன்ஷா அல்லாஹ்.

நன்றி! வஸ்ஸலாம்.

அன்புடன்....

மவ்லவீ அல்ஹாஜ் எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ - தலைவர்

மவ்லவீ அஃப்ழலுல் உலமா அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ., - பொதுச் செயலாளர்

மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள்.

-----------------------------------------------------

தகவல் தொடர்பு & ஊடகப் பிரிவு,
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic),
குவைத்.

துரித சேவை / வாட்ஸ்அப் / வைபர் / டெலிகிராம் / அலைபேசி: (+965) 97 87 24 82

மின்னஞ்சல்: q8_tic@yahoo.com / ktic1427@gmail.com

இணையதளம்: www.k-tic.com

யாஹூ குழுமம்: http://groups.yahoo.com/group/K-Tic-group

முகநூல் (Facebook) பக்கம் : https://www.facebook.com/q8tic

முகநூல் (Facebook) குழுமம் : https://www.facebook.com/groups/q8tic

நேரலை (Ustream) : http://www.ustream.tv/channel/ktic-live

ஒலி/ஒளிப் பெட்டகம் (Youtube) : www.youtube.com/user/Ktic12


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:...
posted by mohamed salih (chennai) [09 April 2015]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 40078

இன்னாலிலீலாஹி வ இன்னா இலைஹி ராஜ்வூன்

குளம் முஹம்மத் சாலிஹ் கே.கே.எஸ்
சென்னை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. ஹனிபா புகழ் என்று நிலைத்த்திட வேண்டும்!
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [09 April 2015]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40079

நாகூர் ஹனிபா அவர்கள் தன் இன்னிசையால் நம் இஸ்லாத்தின் மாண்புகளை எடுத்கூறி நம்புண்ணிய மார்க்கத்தை இப்புவியில் பரப்பிட ஒவ்வொரு ஊராக சென்று தன் குரலாலும்,உடலாலும் உன்னதமாக உழைத்தவர்!

தான் சார்ந்த கட்சிக்காக தன்னுடைய உண்மையான உழைப்பை செலுத்தி தன் கட்சிக்கு சோதனை வந்தத நேரமெல்லாம் தலைமைக்கு துணையாக நின்ற ஒரு நன்றிமறவா நல்நெஞ்சமுடையவர் நாகூர் ஹனிபா என்றால் அது மிகையல்ல!

ஒரு எலும்பு துண்டு ஆதாயத்திற்காக நாக்கை தொங்க போட்டுக்கொண்டு தாம் பிறந்த ஊரைக்கூட காட்டிக்கொடுக்கும் பல பச்சோந்திகள் வாழும் இந்த தமிழகத்தில் வாழந்த வைராக்கிய கொள்கை குன்று நாகூர் ஹனிபா அவர்களுக்கு காட்டிய ஆசைகள்தான் எத்தனை எத்தனை,அள்ளித்தருகிறோம் ,அந்த கட்சியைவிட்டு வந்து விடு எங்கள் கட்சி தலைமையின் தாரகப்புகழை பாட வா என்று பல நாட்கள் , மாதங்கள், வருடங்கள் வலை விரித்து பிடிக்க முயற்சித்தார்கள்!

தான் சார்ந்த கட்சிக்கும்,தன் தலைவனுக்கும் துரோகம் செய்ய துளியளவு கூட சஞ்சலம் கொள்ளாமல் பணத்திற்காக எதையும் தின்று ஏப்பமிட்டு இழிநிலை வாழ்க்கையை வாழும் வீணர்களின் கூட்டத்திலிருந்து விலகி வீரமுடனும்,விசுவாசத்துடனும் கடைசிவரை வாழ்ந்து மறைந்த கொள்கை குன்றுவின் புகழ் இவ்வையகம் வாழும்வரை நின்று நிலைபெற்று வலம் வந்துகொண்டே இருக்கும்! இன்ஷா அல்லாஹ்!

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்,

ஹனிபா புகழ் என்று நிலைத்த்திட நாடும்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. إنـاّ لله وانـاّ اليــه راجـعـــون أللّـهـــمّ اغـفـــر لـه وارحـمـــه
posted by yahya mohiadeen (dubai) [09 April 2015]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 40081

يَا أَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَئِنَّةُ ارْجِعِي إِلَىٰ رَبِّكِ رَاضِيَةً مَّرْضِيَّةً فَادْخُلِي فِي عِبَادِي وَادْخُلِي جَنَّتِي

(அந்நாளில் நல்லடியார்களை நோக்கி) "திருப்தியடைந்த ஆத்மாவே! நீ உன் இறைவன் பக்கம் செல்! அவனைக் கொண்டு நீ திருப்தியடை! உன்னைப் பற்றி அவன் திருப்தியடைந்திருக்கின்றான்" (என்றும்) "நீ என்னுடைய நல்லடியார்களில் சேர்ந்து, என்னுடைய சுவனபதியிலும் நீ நுழைந்துவிடு" (என்றும் கூறுவான்).

மதிப்பிற்குரிய இசை முரசு ஹாஜி ஹனீபா அவர்களின் வபாத் செய்தி அறிந்து மிகவும் கவலை அடைந்தேன்

"எல்லா ஆன்மாக்களும் மரணத்தை சுவைத்தே தீரும்" என்ற இறைவாக்கின் படி நடந்த இக்கருமத்திற்கு நாம் பொறுமையை மேற்கொள்ள கடமை பட்டிருக்கிறோம். என்பதால் என் மனதை ஆறுதல் படுத்திக்கொண்டேன்.

ஹனீ என்றால் தேன் - பா என்றால் பாடல்
தேன் சுவைக்கீடான பாடல்களைத் தந்தவர்.

நான் சிறுவனாய் இருக்கும்போது அவர் பாடிய பாடல்களை அதிகம் மனனம் செய்திருக்கிறேன். பெரும்பாலானவை முஹம்மத் முஸ்தபா (ஸல்) அவர்களின் வரலாற்றை உள்ளடக்கியதாகவும், இஸ்லாமிய சரித்திரங்களை எடுத்துரைப்பதாகவும் அமைந்திருக்கும். நபிகளாரின் மேல் முஹப்பைத்தை அதிகரிக்கச் செய்பவை. அவரின் பாடல்களில் வரக்கூடிய அரபி வார்த்தைகளை சரியான முறையில் உச்சரிப்பதும் சிறப்பான அம்சங்களில் ஒன்று.

போவோம் எல்லோரும் கூடி,
பொன்னான ஹஜ்ஜை நாடி,

லாயிலாஹா இல்லல்லா
ஹூவினில் இன்பம் கொள் நெஞ்சமே....

தாங்கள் இல்லாமல் நாங்கள் இல்லையே ...

போன்ற எண்ணற்ற பாடல்கள் இன்னமும் இதயத்தை வருடுபவை.

மர்ஹூம் தாவன்னா காசிம், மர்ஹூம் நாகூர் சலீம், மர்ஹூம் ஆபிதீன் புலவர் போன்ற பல பாடலாசிரியர்களின் மூளையில் உதித்த பாடல்கள் ஒரு மூலையில் அமர்ந்திருக்கும். அவற்றை நம் காதுகளுக்கு கல்யாணம் செய்து வைத்தவர் இந்த சில்வர் முடி சிம்மக்கொரலோன்.

இவருடைய பேச்சு - பாடும் சாயலை பின்பற்றியே பல இஸ்லாமிய பாடகர்கள் இன்னமும் பாடி வருகின்றனர். சற்றொப்ப 30 வருடங்களுக்கு முன்னர்,
திக்குத் திகந்தமும் கொன்ன்டாடியே வந்து என்ற பாடலில் - தக்க பெரியோனருள் தங்கியே.... என்ற வரியை உயர்ந்த சாரீரத்தில் பாடுகையில் இவர் சரீரம் வெகுவாகவே பாதித்தது. இறையருளால் மீண்டும் உடல் நலம் பெற்று பாடத் துவங்கியவர்.

திராவிட இயக்கங்களின் துவக்கங்களில் உள்ளவர். இயக்கங்களால் இவர் வளர்ந்ததில்லை. மாறாக,, இயக்கங்களின் வளர்ச்சிக்கு உழைத்தவர்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் சிறிய, பெரிய பாவங்களை மண்ணித்து, அவர்களின் நல் அமல்களை அங்கீகரித்து, அவர்களின் மண்ணறையை ஒளிவாக்கி, நாளை மஹ்ஷரில், நல்லடியார்களுடன் எழுப்பச்செய்து மேலான சுவனத்தில் உயர்ந்த அந்தஸ்தில் வீற்றிருக்க செய்வானாக ஆமீன்.

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும், அல்லாஹ் அவனது மேலான பொறுமையை வழங்குவானாக ஆமீன்.

யஹ்யா முஹியித்தீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:...
posted by Salai.S.L.Khaja Muhyideen (Dubai) [09 April 2015]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 40083

இன்னாளிலாஹி வ இன்னா இலிஹி ரஜிஹூன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:...
posted by Mauroof (Dubai) [09 April 2015]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 40084

​​​​​​​​​​இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [09 April 2015]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40085

அஸ்ஸலாமு அலைக்கும்.

>>>> இன்னாளிலாஹி வ இன்னா இலிஹி ரஜிஹூன் <<<< வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:...
posted by Katheeb A.K. Syed Ahamed (AKSA) (HONG KONG) [09 April 2015]
IP: 118.*.*.* Hong Kong | Comment Reference Number: 40086

இன்னாலிலீலாஹி வ இன்னா இலைஹி ராஜ்வூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. Re:...
posted by Ahamed Shahul Hameed (Padappai) [09 April 2015]
IP: 107.*.*.* | Comment Reference Number: 40088

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன் - நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; மேலும் நாம் அவனிடமே திரும்பிச் செல்லவிருக்கிறோம்...

யா அல்லாஹ்! இவர்களுக்கு கபரின் வாழ்க்கையை இலகுவாக்கி வைப்பாயாக...

யா அல்லாஹ்! இவர்களுக்கு கபரின் கேள்விகளை இலகுவாக்கி வைப்பாயாக...

யா அல்லாஹ்! இவர்களை மறுமையில் நல்லோர்களுடன் எழுப்புவாயாக...

யா அல்லாஹ்! இவர்களுக்கு சுவர்க்கத்தை ஆகுமானதாக்கி, நரகிலிருந்தும் காப்பாயாக...

யா அல்லாஹ்! இவர்களுடைய குடும்பத்தார்க்கு பொறுமையை கொடுத்தருள்வாயாக.

யா அல்லாஹ்! இவர்களை மன்னிப்பாயாக! இவர்களுக்கு அருள் புரிவாயாக! இவர்களது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவர்கள் தங்குமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக! இவர்கள் நுழையும் இடத்தை விசாலமாக்குவாயாக! இவர்களை தண்ணீராலும், பனிக் கட்டியாலும், ஆலங்கட்டியாலும் கழுவுவாயாக! வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து சுத்தம் செய்வதைப் போல் இவர்களை குற்றங்களிலிருந்து சுத்தம் செய்வாயாக! இங்கிருக்கும் வீட்டை விடச் சிறந்த வீட்டையும், இங்கிருக்கும் குடும்பத்தை விடச் சிறந்த குடும்பத்தையும், இங்கிருந்த வாழ்க்கைத் துணையை விட சிறந்த துணையையும் இவர்களுக்கு வழங்குவாயாக!

நீங்கள் முன்னே சென்றுவிட்டீர்கள், இன்ஷா அல்லாஹ் நாங்களும் உங்களை தொடர இருக்கிறோம். யா அல்லாஹ்! எங்கள் அனைவரையும் இம்மையிலும், மறுமையிலும் நல்லோர்கள் கூட்டத்தில் ஆக்கிவைப்பாயாக...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. Re:...
posted by முஹம்மது அப்துல் காதர் (துபாய்) [09 April 2015]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 40089

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .

வல்ல நாயன் மர்ஹூமா அவர்களின் பாவங்களை பொருத்து மேலான சுவன பதியை கொடுத்து அருள்வானாக. ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. السلام عليكم ورحمة الله وبركاته -اللهم اغفر له وارحمه
posted by M.S.Kaja Mahlari (Singapore) [09 April 2015]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 40090

அல்ஹாஜ் நாகூர் ஹனீபா அவர்களின் மறைவு முஸ்லிம் சமுதாயத்திற்கு ஈடு செய்ய முடியாத ஒரு மாபெரும் இழப்பாகும் . இஸ்லாமிய பாடல் என்றால் உடனே அனைவருக்கும் நாபகம் வருவது நாகூர் ஹனீபா அவர்களின் பாடல்கள்தான் .

அந்த அளவிற்கு இஸ்லாத்தை தனது சிம்மக் குரலுடன் பாடல் வடிவத்தில் பட்டி, தொட்டி எல்லாம் பரவச்செய்தவர் .

அவர் தொடாத துறையே இல்லை என சொல்லும் அளவிற்கு அணைத்து துறைகளையும் தனது பாடலால் இணைத்தவர் .

அல்லாஹ்வைப்பற்றி (இறைவனிடம் கையேந்துங்கள்) , அண்ணல் நபிகள் நாயகம் (ஸல் லல்லாஹு அலைஹி வ ஸல்லம்) அவர்களைப்பற்றி (அண்ணல் நபி பொன்முகத்தை கண்கள் தேடுதே), மக்காவை பற்றி (மக்கமா நகர் பிறந்தீரே) மதீனாவைப் பற்றி (மதீனா நகருக்கு போகவேண்டும்) , வலிமார்களை பற்றி (ஜீலானி அப்துல் காதிர் ஜிலானி , கருணை கடலாம் காதிர் வலியின்) என சொல்லிக்கொண்டே செல்லலாம்.

உண்மையில் இவர்கள் அண்ணல் நபியின் மீது அளப்பெரும் அன்பு கொண்டவர்கள் (ஆசிகே ரசூல்) அந்த அளவிற்கு நபியின் மீதுண்டான பாசம் அவர்களின் பாடல்களின் தேனருவியாய் பாய்ந்தோடும் .

எல்லாம் வல்ல நாயன் அவர்களின் மண்ணறையை ஒளிமயமாக்கி , விசாலமாக்கி , அவர்களின் குற்றங்கள் , குறைகளை மன்னித்து நாளை மறுமையில் நபிமார்கள் , சுகதாக்கள் , சாளிஹீன்களோடு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனபதியில் அண்ணல் நபி அவர்களின் அசல்பாகத்தில் குடியமர எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக ! ஆமீன் ! யா ரப்பல் ஆலமீன் !!!!!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. Re:... இன்ன லிள்ளஹி வா இன்ன இலைஹி ராஜிவூன்
posted by S. Mohamed Ismail alias Gifto Ismail. (Chennai) [09 April 2015]
IP: 124.*.*.* India | Comment Reference Number: 40091

இன்ன லிள்ளஹி வா இன்ன இலாஹி ராஜிவூன்

நாகூர் ஹனிபா அவர்களின் மரணத்தை நினைக்கும் பொது அவர் பாடிய அற்புதமான சில பாடல்கள் நம் எண்ணத்தின் தாக்கத்தை ஏற்படுத்தியதை நாம் உணரமுடிகிறது அதில் இறைவனிடம் கையேந்துங்கள் , பாத்திமா வாழ்த்த முறை உனக்கு தெரியுமா , மதீனா நகருக்கு போகவேன்றும் போன்ற பாடல்கள் மிக அற்புதமான பாடல்கல் .

இதே நேரத்தில் இதின் மூலவர்யும் நினைவு கூறவேண்டியது மிக முக்கியம்.

இந்த பாடல்கள் எல்லாம் ஏற்றிய கருத்தின் வித்தகர், எனக்கும் நண்பர் மஹ்பூபுகும் நேசமான எனது அன்பு நண்பர் சமுதாய கவிஞர் சரவிளக்கு பத்திரிகை ஆசிரியர் தா.கா என்ற தா.காசிம் அவர்களுக்கு, நாகூர் ஹனிபா அவர்கள் படிய பாடலினால் வந்த பெருமையிலும், உயர்விலும் சம பங்கு உண்டு.

இந்த நேரத்தில் இந்த இவர்களின் மவ்பிரதிக்கு துஆ செய்கிறேன் . அல்லாஹ் அவர்களுக்கு மேலான சுவனபதியை கொடுபானாக. ஆமீன் .

S. Mohamed Ismail alias Gifto Ismail.
Chennai.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
31. Re:...மனதை வாட்டுகிறது..!
posted by vakil.ahmed (chennai) [10 April 2015]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 40092

மதங்களை கடந்து மக்களை ஈர்த்த கணீர் குரல் மறைந்தது மனதை வாட்டுகிறது..!

இசை முரசு ஹனிபாவின் பாடல்கள் காலத்தால் அழியாத நல்ல தமிழ் இஸ்லாமிய பாடல்கள். அவரது பாடல்களின் சொல் அழகு, தமிழ், அரபு சொல் உச்சரிப்பு, அது அவருக்கே உரிய தனித்துவம். தமிழ் பேசும் இஸ்லாமிய உலகிற்கு அவர் தந்த பாடல்களில், இன்று என் நினைவை வருடுடியவைகளில் சில..

" அருள்மழை பொழிவாய் ரஹ்மானே !" ; "பெரியார் பிலாலின் தியாக வாழ்கை" ; "சென்று வரலாம் மதீனா" ; "காணக்கண் கோடி வேண்டும் கபாவை" ; "அதிகாலை நேரம்" ; " கன்னியரே, அன்னையரே" ; "அஸ்ஸலாமு அலைக்கும்" ; “ஒருநாள் மதீனா நகர் தனிலே" ; "பாத்திமா வாழ்ந்த முறை" ; " தாயுப் நகரத்து விதியிலே" ; "கண்ணுக்கு இமை போன்ற பெண்ணே" ; இப்படி , அவர் பாடிய இஸ்லாமிய பாடல்கள் ஒன்றன் பின் ஒன்றாய், அலையலையாய் நினைவுக்கு வருகிறது.

ஹனிபா, தி.மு.கவின் ஆரம்பகால உறுப்பினர், கலைஞரின் கூட்டாளி. தி.மு. கழகத்திற்கு இவரது கம்பீர கானக்குரல் மிகவும் வலிமை சேர்த்தது. "ஓடி வருகிறான் உதய சூரியன்" , "கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே" ஆகிய இவரது கழக பாடல்கள் பிரசித்தி பெற்றவை. தி.மு.கழகத்தின் விசுவாசியான இவருக்கு 2002ம் ஆண்டு நடைபெற்ற வாணியம்படி இடை தேர்தலில் சட்டமன்ற வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது, ஆனால் வெற்றி வாய்ப்பை இழந்தார். தி.மு.கழகத்தின் ஆட்சியின் போது, 2007ம் ஆண்டு இவர் தமிழ் நாடு வக்ப் வாரியத்தின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

"பாவ மன்னிப்பு" திரை படத்தில் TMS சௌந்தர்ராஜனுடன் இணைந்து பாடிய " எல்லோரும் கொண்டாடுவோம்" என்ற பாடலும், " ராமன் அப்துல்லா " என்ற திரை படத்தில் "உன் மதமா, என் மதமா " என்ற அவரது பாடலும், திரைபடத்தின் பிரபல பாடல்கள். "

“ இறைவனிடம் கையேந்துங்கள் " என்ற இவரது பாடல் தேனீர் கடைகள், சுபநிகழ்சிகள், ஆம்னி பஸ்கள், உலகெங்கும் உள்ள தமிழ் வானொலிகளிலும், FMரேடியோக்களிலும், அனைத்து இடங்களிலும் இன்றும் ஜாதி, மத, பேத மின்றி ஒலித்து கொண்டிருகிறது.

இஸ்லாத்தின் வரலாறுகளை தன் தமிழ் பாடலால் கணிரென கர்ஜித்தவர் ஹனிபா. அவர் மறைந்தாலும், எங்கெல்லாம் அவரது பாடல் ஒலிக்கிறதோ, அங்கெல்லாம் அவர் நியாபகத்துக்கு வருவார். உலக நாடுகள் பலவற்றிலும் பல்லாயிரம் இஸ்லாமிய இசை கட்சேரிகளை நடத்தியுள்ள ஹனிபா தமிழ் இஸ்லாமிய பாடல் உலகின் ஒரு சரித்திர சகாப்தம். தமிழ் இஸ்லாமிய பாடல் விரும்பிகளின் மனங்களில் நிறைந்த வானம்பாடி, மகத்தான தீன் பாடல் நாயகர். இறைவன் இவரது பாவங்களை மன்னித்து சுவனத்தை தந்தருள்வானாக. ஆமீன்.

அன்னாரின் மறைவால் விளைந்த துயரத்தைத் தாங்கும் சக்தியை அவரது மகனார், எம் இனிய நண்பர் நௌஷாத் அலி மற்றும் அவர்கள் குடும்பத்தாருக்கு இறைவன் தந்தருளட்டும். வல்ல இறைவனின் கருணை அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் வழங்கட்டும்.

இறைவனிடம் கையேந்தி வேண்டியவனாக…
வக்கீல்.அஹ்மத்
பணிப்பாளர்
துளிர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
32. Re:...
posted by mohamed salih (chennai) [10 April 2015]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 40093

இன்னாளிலாஹி வ இன்னா இலிஹி ரஜிஹூன்!

புகழ்பெற்ற இஸ்லாமிய பாடகர் நாகூர் இ.எம்.ஹனீஃபா, இன்று 20.00 மணியளவில் சென்னை – கோட்டூர்புரத்திலுள்ள அவரது இல்லத்தில் காலமானார். என்ற செய்தி கேட்டு மிக்க வேதனையில் முழ்கினேன் என்றாலும் இறைவனின் நாட்ட படி நடந்த இந்த துயர சம்பவம் சபூர் செய்து கொண்டேன் ..

நாவினிக்க பாடும் அல்ஹாஜ் நாகூர் ஹனீஃபா அவர்கள் கட்டுகடங்கால் கூட்டத்தை தன் இன்ப இசை மூலம் கட்டு பாட்டுக்குள் கொண்டு வருபவர் ..

கம்பீர குரலுக்கும் , கண்ணியமான முக பாவனைக்கும் சொன்ந்தகாரர் இசைமுரசு ஹனீபா அவர்கள்..பாடுகிறார் என்றால் தன்பசியை மறந்து அவர்களின் பாடலின் ருசியை சுவைகாதவர் யாவரும் இருக்க முடியாது ..

அவர்கள் பாடிய எந்த ஒரு படலை கேட்டாலும்அதை திரும்ப திரும்ப கேட்க துண்டும் தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகமெங்கும் ஓவ்வரு இசுலாமியரின் மனதில் அவர்களின் இன்ப குரல் தேன் அருவியாய் பாயும் .

இன்னும் சொல்லப்போனால் மாற்று மத சான்றோர்கள் இவர்களின் பாடலை .கேட்டு மெய் மறந்து போவர்கள்..

எல்லாம் வல்ல அல்லாஹ் மறைந்திட்ட மரியாதைக்குரிய இசைமுரசு அல்ஹாஜ் நாகூர் ,இ.எம்.ஹனிபா அவர்களின் நல்லமல்கள் யாவற்றையும் கபூல் செய்து பாவ பிழைகளை மன்னித்து மண்ணறையை வெளிச்சமாக்கி விசாலமாக்கியும் வைத்து நாளை மறுமையில் உயரிய ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவனப்பதியை வழங்கிடுவானாக ஆமீன்.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் - அவர்களது குடும்பத்தார் உள்ளிட்ட யாவருக்கும் அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக... ஆமீன்.

என்றும் அன்புடன்,
பொக்கு. எஸ் .ஐ முஹம்மத் பிலால்
நெய்னா தெரு ,
காயல்பட்னம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
33. Re:...condolence
posted by s.d.segu abdul cader (quede millath nagar) [11 April 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 40096

CONDOLENCE

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம். May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous. I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter.
Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
34. Re:...இறைவனிடம் கையேந்துவோம் ....
posted by mackie noohuthambi (kayalpaattinam) [11 April 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 40097

நான் வெளிநாட்டு சுற்றுலா பயணத்தை முடித்துக் கொண்டு ஊரில் வந்து இறங்கிய காலை பொழுது அது. எனது அலைபேசிக்கு ஓர் அழைப்பு. சற்று வேலையாக இருந்த நான் சில நாழிகை கழித்து அதை எடுத்து பேசினேன்.

"ஹலோ!...இது நான்.

மறுமுனையில் இருந்து, "ஏன் போனை எடுத்தீர்கள் அழகான பாட்டு போகிறது இன்பமாக கேட்டுக் கொண்டிருந்தேன், கட்டாகி விட்டதே"....

அது என்ன பாட்டு ? அதுதான் "இறைவனிடம் கையேந்துங்கள்...அவன் இல்லை என்று சொல்லுவதில்லை"....

எதெல்லாமோ ரிங் டோன் வைக்கிறார்கள். காலைப் பொழுதில் இறைவனை நினைத்து அவனிடம் வேண்டி பொழுதை ஆரம்பிக்க அற்புதமான வரிகள். நாகூர் ஹனீபா மறைந்து விட்டாலும் இன்னும் பாடிக் கொண்டிருக்கிறார் அதை உங்கள் ரிங் டோன் சொல்கிறது என்றார். மனம் மகிழ்ந்து போனேன்.நெகிழ்ந்து போனேன்....

ஓடி வருகிறான் உதய சூரியன்...., அழைக்கின்றார் அழைக்கின்றார் அண்ணா.... தமிழ் மணக்கும் சோலையெல்லாம் தேடினேன் உன்னை சான்றோர் தம் அவை எல்லாம் அலைய விட்டேன் கண்ணை, எங்கே சென்றாய் எங்கே சென்றாய் எங்களை ஏங்க விட்டு எங்கே சென்றாய்...இது அண்ணாவை நினைவுபடுத்தும்.

கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே எங்கள் உள்ளம் குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே...இது கலைஞரை நினைவுபடுத்தும்.

காய்ந்து சிவந்தது சூரியகாந்தி கனலில் தோய்ந்து சிவந்தது காய்ச்சிய தங்கம் ஆய்ந்து சிவந்தது அறிஞர் தம் நெஞ்சம் தினம் ஈந்து சிவந்தது எம்ஜியார் இருகரமே....இது புரட்சி தலைவர் எம்ஜியாரை நினைவுபடுத்தும்.

இஸ்லாமிய கீதங்கள் என்றாலே அதன் பிதாமகன் நாகூர் ஹனீபா அவர்கள்தான். அகவை 90 தாண்டி தன் வாழ்க்கைப் பயணத்தை வெற்றிகரமாக நிம்மதியாக முடித்துக் கொண்டு இறைவனிடம் சென்றிருக்கிறார்கள். இசைக் கருவிகள் முழங்க இசைகள் வழங்குவதை இஸ்லாம் தடை செய்துள்ளது என்ற செய்தி இவருடைய விஷயத்தில் எப்படி இருக்கும் என்பதை அல்லாஹ்வே முடிவு செய்வான். பாவங்களை சிறு நன்மைகளும் கூட இல்லாமல் ஆக்கிவிடுகின்றன. அவற்றை மன்னிப்பது அல்லாஹ்வுக்கு ஒரு பொருட்டே அல்ல.

எனவே அல்லாஹ் அவர்கள் பாவங்களை பொறுத்து அருள்வானாக . அவர் தன் பாடல்கள் மூலம் இஸ்லாமிய மார்க்க உணர்வுகளை மக்களிடம் பரப்பியுள்ளார் என்ற காரணத்தால் அல்லாஹ் அவர்கள் மண்ணறையை விசாலமாக்கி வைப்பானாக, மேலான சொர்க்க வாழ்வை நசீபாக்கி வைப்பானாக என்று இறைவனிடம் கையேந்துவோம்.. அவன் இல்லை என்று சொல்லுவதில்லை. இல்லை என்று சொல்லும் மனம் இல்லாதவன் ஈடு இணை இல்லாத கருணை உள்ளவன் தலைவணங்கி கேட்பவர்க்கு தந்து மகிழ்பவன். தரணி எல்லாம் நிறைந்து நிற்கும் மகா வல்லவன்.

அவர்கள் குடும்பத்தினருக்கும் அல்லாஹ் நல்ல பொறுமையை கொடுத்தருள்வானாக...

அவர் வாழ்ந்த காலமெல்லாம் திராவிட முன்னேற்ற கழக உறுப்பினராக இருந்து இஸ்லாமிய பாடல் மேடைகளிலும் ஒரு பாடலாவது கழகத்தை பற்றி பாடாமல் அவர் கீழே இறங்கியதில்லை. திமுக மாநாடுகள் அவருடைய பாடல்களுடன்தான் அரங்கேறும்.

அந்த மாமனிதனுக்காக அவர் நினைவாக ஒரு மணி மண்டபம் அமைக்க கலைஞர் முன் வருவாரா... அண்ணா அறிவாலயம் - கலைஞர் நினைவாலயம் போல் நாகூர் ஹனீபா இசையாலயம் ஒன்றை நிறுவி கலைஞர் தன் நன்றி கடனை நிறைவேற்றுவாரா...

நமதூர் கவிஞர் - சட்டமன்றம் செல்லாத நிரந்தர சட்டமன்ற உறுப்பினர் MLA என்று அழைக்கப் பட்ட செய்து அஹ்மத் அவர்களும் இப்படித்தான் கழகத்தை தன் உயிர்மூச்சாக நேசித்தார். ஆனால் அவர் மறைவுக்கு ஒரு நினைவு அஞ்சலி கூட கலைஞர் செலுத்தியதில்லை என்ற மன நெருடல் இப்போதும் என் போன்றவர்கள் மனதில் அவ்வப்போது வந்து மறையும்.

திருக்குறள் எண் 110 மிக அழகாக சொல்கிறதே

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு என்பது இந்த குறளோவிய நாயகனுக்கு தெரியாதா....

விதி எண் 110 மூலம் மிக அவசரமாக -

சட்டங்களையும் நல திட்டங்களையும் அள்ளி வழங்கும் மக்களின் முதல்வருக்கு இது புரியாதா....இந்த அரசியல் கட்சிகள் எல்லாமே ஹனீபாவுக்கு நிறய கடமை பட்டுள்ளன....

நீங்கள் செய்வீர்களா...

பொறுத்திருந்து பார்ப்போம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved