1. சூரிய சக்திக்கு ஈடு இணை இல்லை!. posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[06 April 2015] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40017
அறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்த நேரத்தில் சட்டசபையில் ஒரு சுவாரஸ்யமான விவாதம் நடந்தது,
எதிர்கட்சி காங்கிரஸ் உறுப்பினர் திருமதி அனந்தநாயகி அவர்கள் தன் வாதத்தின் இடையே, சூரியனை எனக்கு பிடிக்காது அது சுட்டெரிக்கும் ஒரு சத்தியாகும், அதன் வெப்ப நிலை வேதனை தாங்காமல் சூரியனை வெருக்கக்கூடியவர்கள்தான் இந்த உலகத்தில் அதிகம் அதில் நம் தமிழ்நாடும் விதிவிலக்காகாது என நம்புகிறேன் என்று சிலேடையாக தி.மு.கா வை சாடினார்!..
அதற்கு பதிலளிக்கும் முகமாக அறிஞர் அண்ணா அமைதியாக எழுந்து புண்முறுவலுடன் தன் சொற்முத்துக்களை சுருக்கமாக உதிர்த்தார், சூரியனால் சொல்லில்லடங்கா அநேக அநேக நன்மைகளை அடைந்துகொண்டிருப்பதை திருமதி அனந்த நாயகி அவர்களின் கண்களுக்கும், கருத்துக்கும் சுய சிந்தனைக்கும் எட்டினாலும் அது எட்டாக்கனி போன்றும், அக்கனி கசப்பது போன்றும் ஒரு பொய்மையை விவரிகின்றார்.
உண்மை எதுவென்றால், முற்றிலும் சூரிய வெளிச்சத்தை விரும்பாமல் இருட்டை மட்டுமே விரும்புகிறவர்கள் இரு வகையாளர்கள், அதில் ஒரு வகையினர் இரவுத் திருடர்கள் மற்றொரு வகையினர் இரவு விடுதி நடத்தும் உல்லாச ஒய்யாரிகள்.. இதில் எந்த வகையை சேர்ந்தவர் அனந்தநாயகி "அம்மா" என்ற முடிவை அவர்களுக்கே விட்டுவிடுகிறேன் என்றார்.
மேலே கண்ட முந்திய நிகழ்விற்கும், இன்றைய இந்த செய்தியில் உள்ள படத்திற்கும் என்ன சம்பந்தம் என்றால், அந்த சூரிய சக்தியை புகழ்ந்த அன்றைய அறிஞர் அண்ணாவை, இன்றைய இந்த தர்பூஸ் கடைக்காரர் தெரிந்து, புரிந்து வைத்திருந்தால் உள்ளம் மகிழ உளமார ஒருவரும் அறியாவண்ணம் தன் அன்பு அரியாசனையில் அமர்த்தி அன்றாடம் ஆராதனை செய்துகொண்டே இருப்பார் அல்லவா?
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
2. Re:... posted byசாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபார் )[07 April 2015] IP: 95.*.*.* Romania | Comment Reference Number: 40019
தலைப்பு " ஆ... என்னா கீட்டுபா...! " - என்னவென்று சரியாக புரியவில்லை. முன்னத்தலையை இரண்டு தடவைகள் சொரிந்து பார்த்தும் புலப்படவில்லை..!!
மற்ற இடங்களை விட, ICICI அருகில் விற்பனை செய்யப்படும் தர்பூஸ் ஜூஸ், பழங்கள் போன்றவைகள் கொஞ்சம் சுகாதாரமாகதான் தெரிகின்றது.
ஆனால், தர்பூஸ் ஜூஸ் தயாரிக்கும் போது, சுவைக்காக ரோஸ் கலர் இனிப்பு சர்பத்து சேர்க்கின்றார்கள்.
என் நண்பன் ஒருவன், கோடையில் நாவறட்சி நாவறட்சி என்று இரண்டு மூன்று தர்பூஸ் ஜூஸ் கிளாஸ்கள் அடிப்பான். இருந்தாலும் நாவறட்சி நின்ற பாடில்லை. சோர்ந்தும் காணப்பட்டான்.
வாப்பா.. டாக்டரிடம் காட்டலாம். ஒருவேளை சுகர் இருக்கலாம் என்றேன்.
போப்பா.. நாங்க எல்லாம் ஸ்டீல் பார்ட்டிகள். சுகராவது மண்ணாவது என்று மறுத்துவிட்டான்.
வற்புறுத்தி அழைத்து சென்று சுகர் பார்த்தால், அவன் SSLC இல் எடுத்த மார்க்கை விட டபுள் ஆக இருந்தது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross