இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் நேற்று நிகழ்ந்தது. சென்னையில் உள்ள பிர்லா கோளரங்கில் நூற்றுக்கணக்கான மக்கள் இதைக் கண்டு ரசித்தனர். காயல்பட்டினத்தில் பகுதி கிரகணமாக இது தென்பட்டது.
சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி வரும்போது பூமியின் நிழல் சந்திரனில் விழுவதால், சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் நேற்று நிகழ்ந்தது. இது இந்திய நேரப்படி மாலை 3.45 மணிக்கு தொடங்கி இரவு 8.30 மணி வரை நீடித்தது. முழுமையான கிரகணம் மாலை 5.31 மணிக்கு தொடங்கி 12 நிமிடங்கள் நீடித்தது.
இந்த முழு சந்திர கிரகணத்தை தென் அமெரிக்க, ஆப்பிரிக்க நாடுகளில் உள்ளவர்களால் மட்டுமே பார்க்க முடிந்தது. இந்தியாவில் பகுதி கிரகணம் மட்டுமே தெரிந்தது. பகுதி சந்திர கிரகணம் மாலை 6.30-க்கு தொடங்கி இரவு 8.30 மணி வரை நீடித்தது. இந்த நிகழ்வின்போது சந்திரன் கருஞ்சிவப்பாக காட்சியளித்தது.
காயல்பட்டினம் கடற்கரையில் தென்பட்ட கிரகணக் காட்சியை, பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு களித்தனர்.
|