பொதுமக்கள், வாக்காளர் பட்டியலிலுள்ள தமது பெயருடன் ஆதார் எண், கைபேசி எண், மின்னஞ்சல் முகவரியை ஆன்லைன் முறையிலும், பொதுச் சேவை மையங்கள் மூலமும் இணைத்துக்கொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில், வாக்காளர் பட்டியலில் ஆதார் எண், கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட விபரங்களை இணைக்கும் முகாம் காயல்பட்டினம் இளைஞர் ஐக்கிய முன்னணியில் (YUF) இன்று (ஏப்ரல் 03) காலை முதல் மாலை வரை நடைபெற்றது. இதில், நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்து, தமது விபரங்களை சமர்ப்பித்துச் சென்றனர்.
இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |