கத்தர் காயல் நல மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம், இம்மாதம் 03ஆம் நாளன்று நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்தது. மோசமான வானிலை காரணமாக, இம்மாதம் 10ஆம் நாளுக்கு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அ அம்மன்ற நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
அன்பின் மன்ற உறுப்பினர்கள் மற்றும் கத்தர் வாழ் காயலர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்.
வல்ல அல்லாஹ்வின் பேரருளால், நமது கத்தர் காயல் நல மன்றத்தின் வருடாந்திர மற்றும் 23ஆவது பொதுக்குழுக் கூட்டம், வரும் 03.04.2015 வெள்ளிக்கிழமையன்று (நாளை) நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்தது.
கத்தரில் புழுதிப்புயல் காரணமாக வானிலை மோசமடைந்துள்ளதால், இக்கூட்டம், இம்மாதம் 10ஆம் நாள் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 10.04.2015 அன்று 08.00 மணி முதல் 18.00 மணி வரை, கத்தர் Muberek Family Parkஇல் குடும்ப சங்கம நிகழ்சியாக நடைபெறவுள்ளது.
பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சிகளில், மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட காயலர்கள் அனைவரும் - இச்செய்தியையே அழைப்பாகக் கருதி, உங்கள் குடும்பத்தினருடன் தவறாமல் பங்கேற்க வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
மேலதிக விபரங்களுக்கு, சகோதரர் முஹம்மத் லெப்பை (5570 9972), சகோதரர் ஹுஸைன் ஹல்லாஜ் (3349 2265) ஆகியோரைத் தொடர்புகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
S.K.ஸாலிஹ்
(உள்ளூர் பிரதிநிதி)
கத்தர் காயல் நல மன்றத்தின் முந்தைய (22ஆவது) பொதுக்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
கத்தர் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |