தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கடலோரப் பகுதிகளில், விளாத்திகுளத்தில் துவங்கி - சாத்தான்குளம் வரை உயரலைக் கோடு எல்லைக் கல் நிறுவும் பணி நடைபெற்று வருகிறது. காயல்பட்டினம் கடற்கரையில், திருவைகுண்டம் வனச்சரகத்தின் ஏரல் பிரிவு வனவர் பெரியசாமி மேற்பார்வையில் இன்று 17.30 மணியளவில் எல்லைக் கல் நிறுவப்பட்டது.
இந்தியா முழுவதும், கடலோரப் பகுதிகளில், உயரலைக் கோடு (High Tide Line) எல்லையை அடையாளப்படுத்த எல்லைக் கல் நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியிலும் எல்லைக் கல் நிறுவும் பணியை, அந்தந்த வட்டார வனச் சரக அலுவலர்கள் கண்காணிக்க பொறுப்பளிக்கப்பட்டுள்ளதாகவும், அதனடிப்படையில், தூத்துக்குடி மாவட்ட கடலோரப் பகுதிகளில் எல்லைக் கல் நிறுவும் பணியை தாங்கள் கண்காணித்து வருவதாகவும், திருவைகுண்டம் வனச்சரக அதிகாரி நெல்லை நாயகம் தெரிவித்துள்ளார். |