இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் உறுப்பினராவதற்காக, தூத்துக்குடி மாவட்டம் முழுவதிலுமிருந்து பெறப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் சென்னையிலுள்ள கட்சி தலைமை நிலையத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-
நாடெங்கிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் சேர்ப்புப் பணிகள் நடைபெற்று, உறுப்பினர் விண்ணப்பப் படிவங்களும், அவற்றுக்கான ஈவுத் தொகையும் மாவட்ட வாரியாக சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது.
அந்த வரிசையில், தூத்துக்குடி மாவட்டம் வடக்கு ஆத்தூர், தெற்கு ஆத்தூர், புறையூர், ஆழ்வார் திருநகரி, கேம்பலாபாத், பேட்மாநகரம், ஏரல், குரும்பூர், சிறுதொண்டநல்லூர், சூளை வாய்க்கால், நாலுமாவடி, சாத்தான்குளம், சேதுக்குவாய்த்தான், சத்யா நகர் (மெஞ்ஞானபுரம்) நடுவிற்பட்டி, பட்டினமருதூர், வடமலை சமுத்திரம், கோவில்பட்டி, முத்தையாபுரம், கயத்தார், கலியாவூர், அரிய நாயகிபுரம், தூத்துக்குடி - ஜாகிர் உசேன் நகர், ஜெய்லானி தெரு, திரேஸ்புரம், காயல்பட்டினம் நகரின் அனைத்து வார்டுகள் என மாவட்டம் முழுவதிலுமிருந்து 41 ப்ரைமரி (கிளை)களில் உறுப்பினர்கள் விண்ணப்பப் படிவங்கள் வினியோகிக்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களும், அவற்றுக்கான ஈவுத் தொகையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் பீ.மீராசா மரைக்காயர் தலைமையில், மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ, மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், காயல்பட்டினம் நகர நிர்வாகிகளான பெத்தப்பா எம்.ஏ.சி.சுல்தான், எம்.எச்.அப்துல் கரீம் ஆகியோர் இணைந்து, சென்னையிலுள்ள தலைமை நிலையத்தில், கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் ஆகியோரிடம், இம்மாதம் 26ஆம் நாளன்று சமர்ப்பித்தனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |