சஊதி அரபிய்யா - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 85-வது செயற்குழு மன்றத்தின் புதிய 7 -வது அமர்வின் முதல் செயற்குழு கூட்டமாக சென்ற 20/03/2015 ,வெள்ளிக்கிழமை மாலை மஃரிப் தொழுகைக்குப்பின் ஜித்தா-ஷரஃபியாவிலுள்ள இம்பாலா கார்டன் உணவக உள்ளரங்கில் சிறப்பாக நடந்தேறியது.
மன்றத்தலைவர் சகோ.K.M.A.அஹ்மது முஹ்யித்தீன் தலைமையில் துணைப் பொருளாளர் சகோ.M.M.S.செய்கு அப்துல் காதர் இறைமறை ஓத சகோ.S.H.அப்துல் காதிர் வருகை புரிந்த அனைவரையும் வரவேற்க கூட்டம் ஆரம்பமானது.
தலைமையுரை:
மன்றச் செயற்குழுவின் அறிமுகம், அதன் முக்கிய அஜன்டாவான கல்வி மற்றும் மருத்துவம், அதன் நிமித்தம் நடந்தேறும் உறுப்பினர்களின் கருதுப்பதிவுகள் மற்றும் செயற்குழு குறித்த இதர செய்திகளை புதிய செயற்குழு உறுப்பினர்களுக்கு எடுத்துத்தார் இக்கூட்டத்தின் தலைவரும் மன்றத் தலைவருமான சகோ.K.M.A.அஹ்மது முஹ்யித்தீன்.
மன்ற செயல்பாடுகள்:
சென்ற கூட்டத்தின் தீர்மானம், கடந்த மாதம் குடும்ப சங்கம நிகழ்வாக மிக சிறப்பாக நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் சார்ந்த செய்திகள், இதற்காக வேண்டி எல்லா வகைகளிலும் வழிகளிலும் உதவிய, ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளையும் கூறியதுடன் மேலும் நிறைவேறிய மன்றப்பணிகள் மற்றும் "நாம் பொறுப்பேற்றிருக்கும் இப்பணி இறைவனுக்கு உகப்பான ஒரு அமானிதம், அவ்வமானிதத்தை நிறைவேற்ற அனைத்து உறுப்பினர்களும் மிக ஆர்வமும் அக்கறையும் கொண்டு தவறாது எல்லா கூட்டங்களிலும் கலந்து சிறப்பிக்கணும் என உறுப்பினர்களை அன்புடன் வேண்டிக்கொண்டார் செயலாளர் சகோ.S.A.K.செய்யிது மீரான்.
"நம் மன்றத்திற்கு வரும் மனுக்களின் பரிசீலனை, அதனூடே நடைபெறும் கருத்துப்பகிர்வுகளை புதிய உறுப்பினர்கள் தற்போது காணலாமென்றும், செயற்குழுவில் அனைத்து உறுப்பினர்களும் தவறாது கலந்து தங்களின் யோசனைகள் கருத்துக்களை தெரிவிக்கலாமென்றும் கேட்டுக்கொண்டார் செயலாளர் சகோ.M.A.செய்யிது இப்ராஹீம்.
"முதன் முறையாக தான் கலந்து கொள்ளும் இச்செயற்குழு ஒரு பொதுக்குழுவை போல் உள்ளதென்றும், அதில் மன்ற உறுப்பினர்களின் பங்களிப்பு மெய்சிலிர்க்க வைக்கிறதென்றும், இம்மன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் நம் ஊரின் உயர்வுக்காக உழைக்க வல்ல இறையோனை பிரார்த்திப்பதாகவும்" கூறினார் யான்புவிலிருந்து ஆர்வமாக வந்து கலந்து கொண்ட ஆலோசகர் சகோ.முஹம்மது ஆதம் சுல்தான்.
நிதி நிலை:
நடந்தேறிய பொதுக்குழுவின் வரவு மற்றும் செலவுகள், தற்போதைய மன்ற இருப்பு,
பயனாளிகளுக்கான உதவிகள் போன்ற நிதிநிலைகளை கூறியதோடு, இக்ரஃ விற்கான ஆயுட்கால உறுப்பினர்களின் சேர்க்கை மற்றும் விபரங்கள் குறித்தும் புதிய உறுப்பினர்களுக்கு நினைவூட்டினார் பொருளாளர் சகோ.M.S.L.முஹம்மது ஆதம்.
சிறப்பு விருந்தினர்:
தாயகத்திலிருந்து புனித "உம்ரா" கடமையை நிறைவேற்ற வருகை தந்திருந்த சகோ.அல்ஹாபிஃழ் முஹம்மது அபூபக்கர் சிறப்பு விருந்தினராக கலந்து மன்றப்பணிகளை கூட்ட செயல்பாடுகளை கண்டு சிலாகித்ததோடு மன்றத்தின் சேவைகள் மேலும் சிறக்க பிராத்தித்ததார்.
மருத்துவ உதவிகள்:
பயனாளிகளிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மன்ற துணைத்தலைவர் மருத்துவர் M.A.ஜியாது அபூபக்கர் முன்னிலையில் முறையே பரிசீலிக்கப்பட்டது. இருதயம், கண், வயிறு, கர்ப்பப்பை, கிட்னி, மூளை, தலை மற்றும் சில பாதிப்புள்ள-வர்களுக்கும், மேலும்; உறுப்புக்களில் புற்றுநோய், தைராய்டு, ஹீமோஃபீலியா, விபத்து போன்றவற்றால் பாதிப்புக்குள்ளாவனர்களுக்குமாக 18 காயல் சொந்தங்-களுக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு அவர்களின் நற் சுகத்திற்காக வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கப்பட்டது.
கலந்துரையாடல்:
மன்ற உறுப்பினர்களின் ஆரோக்கியமான கலந்துரையாடலில் நல்ல பல செய்திகள் பகிரப்பட்டன. மன்றத்தின் சந்தாதாரர்களை அதிகரிப்பது, மன்றத்திற்கு நன்கொடைகளை அறிந்தோரிடம் வேண்டிப்பெறுவது, ஜகாத் நிதிகளை பெருக்குவது ,மத்திய மாநில அரசுத்துறையால் சிறுபான்மையினர்களாகிய நமக்கு கிடைக்கும் கல்வி மற்றும் மருத்துவ சலுகைகளை நம் மக்களிடம் முறையே கொண்டு சேர்ப்பது, புதிய மற்றும், நல்ல துணிகளை சேகரித்து நம் நகரில் தேவையுடையோருக்கு பகிர்ந்தளிப்பது போன்ற அழகிய கருத்துக்களை உறுப்பினர்கள் பதிவாக்கினர்.
தீர்மானம்:
1. கடந்த மாதம் 13-02-2015 ,வெள்ளியன்று காலை 08-00 மணி முதல் இரவு 08-00 மணி வரை மிக குதுகலத்தோடு நடந்தேறிய காயலர் குடும்ப சங்கம நிகழ்வான பொதுக்குழு கூட்டத்திற்கு சர்க்கரை பொங்கலோடு காலை சிற்றுண்டி ,மதிய களரி சாப்பாடு,காலை மாலை தேநீர் ,விசாலமான இட வசதி, பரிசுப்பொருட்கள் ,விளையாட்டு உபகரணங்கள், குடிநீர் ,தின்பண்டங்கள், ஐஸ் க்ரீம்
மற்றும் வாகன ஏற்பாடு மற்றும் எல்லா வகையிலும் பங்களிப்புகள் செய்த அனுசரணையாளர்கள் அனைவருக்கும் மேலும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம் .ஜசாக்குமுல்லாஹ் ஹைரா.
2. மேல்நிலை மற்றும் உயர்நிலை தேர்வு எழுதும் நம் நகர் மாணவ மாணவிகள் நற்மதிப்பெண்கள் பெற்று முதல் வகுப்பில் தேர்வு பெற வல்ல இறையிடம் பிரார்த்திக்கப்பட்டது.
3, இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 17-04-2015 வெள்ளிக்கிழமை மாலை மஃரிப் தொழுகைக்குப்பின் ஜித்தா-ஷரஃபியாவிலுள்ள இம்பாலா கார்டன் உணவக உள்ளரங்கில் மன்றத்தின் 86 -வது செயற்குழு நடைபெறுமென்றும் அறிய தருகின்றோம்.
சகோ.S.H.அமீர் சுல்தான் நன்றி நவில சகோ.P.S.J. நூர்தீன் நெய்னா பிரார்த்திக்க துஆ கஃப்பாராவுடன் செயற்குழு இனிதே நிறைவுற்றது .அல்ஹம்துலில்லாஹ்.
கூட்டத்திற்கான இரவு உணவு அனுசரணையை ஆலோசகர் சகோ.S..பஷீர் அஹமது செய்து இருந்தார்.
தகவல் மற்றும் படங்கள்::
காயல் நற்பணி மன்றம்,
ஜித்தா- சஊதி அரபிய்யா,
01-04-2015.
|