நடப்பு கோடைப் பருவத்தை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், பேருந்து நிலையம் அருகில், நீர் - மோர் பந்தல் திறப்பு விழா, இம்மாதம் 29ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமையன்று காலை 11.30 மணியளவில் நடைபெற்றது.
கட்சியின் மூத்த உறுப்பினர் எஸ்.ஏ.மெய்தீன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் எஸ்.பீ.சண்முகநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, நீர் - மோர் பந்தலைத் திறந்து வைத்து, அனைவருக்கும் மோர் மற்றும் பழச்சாறுகளை வழங்கினார்.
முன்னதாக, அவரை கட்சி நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர்.
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், அதிமுக நகர துணைச் செயலாளர் கே.ஏ,ஷேக் அப்துல் காதிர், பொருளாளர் ஜின்னா, இணைச் செயலாளர் அருணாச்சலக்கனி, மாவட்டப் பிரதிநிதி பூந்தோட்டம் பீ.மனோகரன், 13ஆவது வார்டு செயலாளர் ஆறுமுக நெயினார், 01ஆவது வார்டு செயலாளர் செந்தமிழ்ச் செல்வன், புரட்சி சங்கர், எம்.இ.எல்.புகாரீ, எம்.எல்.இல்யாஸ், மீனவ மகளிர் சங்க தலைவர் எம்.அமலக்கனி உள்ளிட்ட - கட்சியின் நிர்வாகிகளும், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, நகர துணைச் செயலாளர் கே.ஏ.ஷேக் அப்துல் காதிர் செய்திருந்தார்.
படங்கள்:
ஃபாஸில் ஸ்டூடியோ
நகர அதிமுக சார்பில் 2013ஆம் ஆண்டு நடைபெற்ற நீர் - மோர் பந்தல் திறப்பு விழா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
அதிமுக தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |