ஓட்டுனரின் கையிலிருப்பது வலயம் அல்ல உயிர்! posted byமுஹம்மது அதம் சுல்தான் (yanbu)[07 April 2015] IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 40032
மேற்படி பள்ளி வாகனத்தை முறையான பயிற்சியற்ற ஓட்டுநர் ஓட்டி வருவதாகவும், அவர் எப்போதுமே இதுபோன்று அத்துமீறிய நிலையிலேயே வாகனத்தை ஓட்டி வருவதாகவும், இவ்விபத்தைப் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.(C&P)
மேலே கண்ட செய்தி வாசகங்கள் ,இந்த இடத்திலேயே தீர்ப்பு வழங்கியது போல் இருக்கிறதே என்று என் மனம் நெருடலுக்குள்ளானாலும், அந்த விபத்தின் நிகழ்வுகளின் நிழற்படம் சொல்லும் உண்மமை 9௦% சதவீதம் ஓட்டுனரின் தவறுதான் என்பதை ஒப்புக்கொள்ள வைக்கிறது!
நமதூரில் வாகனத்தின் வலதுபக்க ஓரத்தில் ஓட்டுனர் உட்கார்ந்துகொண்டு வாகனத்தை சாலையின் இடது பக்கமாக செல்லும் பாதையை நோக்கி செலுத்துவார். அப்படித்தான் செலுத்தவேண்டும் என்பது சாலைவிதி
ஆனால் நடந்த விபத்தின் நிகழ்வு காட்சியில் இடதுபுறமாக வந்து கொண்டிருந்த பேருந்து தன் கட்டுப்பாட்டை இழந்து வலதுபக்க பாதைக்கு திமிறிக்கொண்டு திரும்பி அங்கு சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகனத்தில் முட்டி மோதி நிற்கிறது!
ஓட்டுனர்களே, உங்களில் சிலரின் நிதானமின்மையின் காரணமாக செலுத்தும் வாகனத்தால் ஏற்படும் விபத்தில் உங்கள் உயிர் மட்டுமல்ல உங்களோடு பயணிக்கும் நபர்களின் உயிர்களும், நீங்கள் மோதும் மற்றைய வாகனத்தில் உள்ளவர்களின் உயிர்களும் ஒரு கண் சிமிட்டும் காலப்போலுதில் ஏற்படும் கவனக்கசிவின் முடிவு மதிப்பிடமுடியா எத்தனையோ உயிர்களின் வாழ்க்கையை முடிவாக்கி வைத்துவிடும் என்பதை உணர்வீர்களா?
நம்மை படைத்த இறைவன் நலமுடன் இவ்வுலகில் வாழத்தான் நம்மை விட்டு வைத்திருக்கிறான், அந்த உயிர்களின் ஆசாபாசங்கள் அடங்கும் முன்னமே உங்களின் அத்துமீறிய ஓட்டுதலாலும்,அக்கறையின்மையின் நடத்தலாலும்,அதி பயங்கர விபத்தை ஏற்படுத்தி அனாவிசியமாக அப்பாவி உயிர்களை பறிக்கின்ற பெரிய பாவத்திற்கு காரணமாக அமைந்து காலம் காலமாக அந்த குடும்பத்தாரின் சாபத்திற்கு நீங்களும்,உங்கள் குடும்பமும் ஆளாகலாமா?
நீங்களும் நீடித்த ஆயுளுடன் வாழவேண்டும்,உங்கள் வாகனத்தில் உங்களுடன் பயணிக்கும் அத்தனை உயிர்களும் எந்த ஆபத்தின்றி அவர்களின் சேரும் இடத்தை சென்றடையவேண்டும். ஆண்டவனுக்கடுத்தது அனைத்து பொறுப்பும் பாதுகாப்பும் உங்களுடையது. நீங்கள் இருகைகளாலும் பிடித்திருப்பது வலயம் அல்ல உயிர்கள் என்பதை உள்ளத்தில் பதிய வைத்துக்கொண்டு வாகனத்தை ஓட்டுங்கள்.
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross