Re:...சிலிர்க்க வைக்கும் திருமறை செல்வர்கள் posted bymackie noohuthambi (colombo)[08 April 2015] IP: 103.*.*.* | Comment Reference Number: 40039
நேற்று பகல் உங்கள் வீட்டில் என்ன சாப்பாடு? இந்த கேள்விக்கு உடனே பதில் சொல்ல முடியாது, மனைவியை அழைப்போம் நேற்று என்னடி சாப்பாடு? அதுவா, இருங்க, மகளை கேட்டு சொல்றேன் என்று உம்மா சொல்வாள். மகள் வெளியே போய் இருப்பாள் அவள் வந்து சொல்வதற்குள் கேள்வி கேட்டவர் போய் விடுவார். ஒவ்வொரு வீட்டிலும் நடக்கின்ற செய்திதான் இது.
ஆனால் 6666 வசனங்கள் நிறைந்த திருமறை, அதில் ஒரே மாதிரியான ஆயத்துக்கள், வசனங்கள், கொஞ்சம் அசந்தால் அர்த்தமே மாறி விடும் இவ்வளவு சிக்கல்களுக்கிடையில் மேலே இருப்பதை சொல்லி கீழே இருப்பதை ஓதுங்கள், கீழே இருப்பதை சொல்லி, மேலே இருப்பதை சொல்லுங்கள் என்று கேள்விக்கு மேல் கேள்வி கேட்டு திகைக்க வைக்கும் கேள்வியாளர்களின் கேள்விகளுக்கு மிக நளினமாக சாதாரணமாக அதை ஓதும் ஹாபிழ்கள்
எப்படி இந்த அதிசயம் நடக்கிறது. இது அல்லாஹ்வின் வேதம் அவனே படைத்தான் அவனே பாதுகாக்கும் பொறுப்பையும் தன் வசம் எடுத்துக் கொண்டதால் இப்படிப் பட்ட ஹாபிள்களின் நாவில் அவன் பேசுகிறான் என்பதுதான் உண்மை.
இறைவா ஓதுவது நான் அல்ல - என் நாவல்ல
உன் நுட்பமான நிஉமத் என் அற்பமான நாவில் வந்து அரசாட்சி செய்கிறது உன்னையே வணங்குகிறோம் உன்னிடமே உதவியும் தேடுகிறோம். அல்ஹம்து லில்லாஹ்.
கணினி மயமான உலகம் பல சிக்கல்களில் இளைஞர்களை தட்டு தடுமாறும் திசைக்கு அழைத்து செல்கிறது. திக்கு தெரியாத காட்டுக்கு இட்டு செல்கிறது என்பதை வேதனையுடன் நோக்குபவர்களுக்கு, இல்லை, ஒரே கத்தி ஆப்பிளை அறுக்கவும் பயன்படுகிறது, கையை அறுக்கவும் பயன்படுகிறது. கத்தியில் தவறில்லை அதை பயன்படுத்துபவர்கள் எண்ணத்தில் செயலில்தான் தப்பு என்பதை இந்த ஆன்லைன் ஹிப்ல் நிகழ்ச்சி நமக்கு நினைவு படுத்துகிறது. மாற்றி யோசிக்கும் பழக்கம் பரவலாக இளைஞர்களிடம் காணப் படுகிறது.
சிங்கப்பூரை லீ குவான் யூ எப்படி மாற்றினார் என்ற செய்தியை பார்த்தபோது அசந்து விட்டேன். துணிச்சலாக சில காரியங்களை சில முடிவுகளை எடுக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் வந்தபோது அவற்றை அவர் எப்படி எதிர்கொண்டார் தடைகளை தாண்டி தடம் பதித்தார் என்பதை நினைத்து பார்க்கிறேன். நமதூர் பிள்ளைகளும் அந்த மண்ணில் வாழ்வதால் இப்படி துணிச்சலாக சில சாதனைகளை அரங்கேற்றி இருக்கிறார்கள் . அது அந்த மண் வாசனையோ என்றுகூட எண்ண தோன்றுகிறது .
எங்கள் நெஞ்சமெல்லாம் நிறைந்து வாழும் எங்கள் அன்பு தந்தை மக்கி ஆலிம் அவர்கள் வீட்டுக்கொரு ஹாபில் உருவாக வேண்டும் என்று ஆசைப் படுவார்கள். அவர்கள் மக்கள், பேரன் பேத்தி பூட்டன் எல்லோரும் ஹாபில்களாக உருவாகி இருக்கிறார்கள். கண் பட்டு விடுமே என்று தனது ஒரு மகனை மட்டும் சற்று ஓய்வெடுக்க வைத்து விட்டு சென்றிருக்கிறார்கள்..
சிலிர்க்க வைக்கும் திருமறை செல்வர்களுக்கு எனது துஆவையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross