இன்னாலில்லாஹி posted byNIZAR (kayalpatnam)[09 April 2015] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 40060
இன்று இரவு எனது நண்பர் ஒருவர் இசைமுரசு ஹனீபா அவர்களின் மரண செய்தியை சொன்னார். நான் சற்றும் நம்பவில்லை. நான் அந்த நண்பரிடம் சொன்னேன். அவர் இதை போன்று பல முறை மரணம் செய்து உள்ளார் என்றேன். இல்லை இது உண்மையான செய்தி, தொலைகாட்சிகளில் அறிவித்து உள்ளார்கள் என்றதும் நம்பினேன்.
அது என்னமோ தெரியலே. இசை கூடாது,இஸ்லாமிய கச்சேரிகள் கூடாது என்று கருத்து வேறுபாடுகள் கொண்டவர்கள் கூட இவர் பாடலை கேட்டவுடன் அப்படியே ரசிக்க
ஆரம்பித்துவிடுவார்கள். அதற்கு காரணம் இவருடைய பெரும்பான்மையான பாடல்களில் நபிகளின் வரலாறும் இஸ்லாமிய வரலாற்று செய்திகளும் மிஞ்சி இருக்கும்.
இவருக்கு ஏற்பட்டு இருக்கும் இத்தனை புகழுக்கும் கவிஞ்சர் நாகூர் சலீமின் வைர வரிகளும் முக்கிய காரணம் எனலாம். என்னுடைய சிறுவயதில் சாஹிப் தைக்கா வெட்டையில் பல்லாக் குடும்பத்தின் கல்யாணத்தில் இவருடைய கச்சேரி நடந்தது. மிக பிரமாண்டமாக நடந்த அந்த கச்சேரியில் மாலை சூடும் மணமக்களே என்ற பாடலை வெளியிட்டு பாடினார்.
அதிலிருந்து இவர் கச்சேரி நம்,பகுதியில் எங்கு நடந்தாலும் தவறாமல் செல்வதுண்டு. கேரளா கரையோரம் பீமா பள்ளி வரை சென்று இவர் பாடல் கேட்டதுண்டு. இறைவனிடம் கையேந்துங்கள் என்பது இவருக்கு உச்சகட்ட புகழை தேடி கொடுத்தது. இவர் அல்லாத மற்ற பாடர்கள் கச்சேரிகளுக்கு செல்வதுண்டு, அப்பொழுது பாதுகாப்புக்கு வரும் காவல் துறை அதிகாரிகள் மாற்று மத சான்றோர்கள் இறைவனிடம் கையேந்துங்கள் பாடுங்கள் என்று கேட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆக்கியதுண்டு.அவர் பாடிய மவ்த்தையே நீ மறந்து வாலாகுமா? மன்னாதி மன்னரெல்லாம் நிரந்தமறாய் இருந்ததில்லை என்ற அவரின் வரிகளை கொண்டு ஆறுதல் அடைந்து கொள்ள வேண்டும்.இறைவன் அவர்களுக்கு சிறப்பான மறுமை வாழ்வை அளிப்பானாக என முகநூல் நண்பர்கள் சார்பில் இறைஞ்சி முடிக்கிறேன்.கொண்டவர்கள்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross