அனைவருக்கும் மார்க்கக் கல்வி பயிற்றுவித்த ஆசான்! posted byS,K.Salih (Kayalpatnam)[09 April 2015] IP: 180.*.*.* India | Comment Reference Number: 40064
காயல்பட்டினத்தில் வேண்டுமானால் ஹாமிதிய்யா, மழ்ஹருல் ஆபிதீன், ஜாவியா போன்ற மார்க்கக் கல்வி நிறுவனங்கள் இருக்கலாம். ஆனால், முஸ்லிம்கள் செறிவாக வசித்தும் - மார்க்க வாடையே இல்லாத ஊர்களிலுள்ள மக்களும் ஓரளவுக்கு அல்லாஹ்வை, அவனது தூதரை, மார்க்கக் கிரியைகளை உணர்ந்துள்ளனர் என்றால் அது இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனீஃபா அவர்களின் பாடல்களால்தான்!
வல்ல அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க அவர்கள் தமது இவ்வுலக வாழ்வை முடித்துக்கொண்டார்கள். இசைமுரசு அவர்கள் தம் வாழ்நாளில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகள் அனைத்தையும் கருணையுள்ள அல்லாஹ் தன் அளப்பெரும் கிருபை கொண்டு பொறுத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தில், நபிமார் - ஸித்தீக்கீன் - ஷுஹதா - ஸாலிஹீனுடன் இணைந்திருக்கும் பாக்கியத்தை நற்கூலியாக வழங்கியருள்வானாக...
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் - அவர்களது குடும்பத்தார் உள்ளிட்ட யாவருக்கும் அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக... ஆமீன்.
அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.
துஆக்களுடன்,
எஸ்.கே.ஸாலிஹ்
மற்றும்
மர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் குடும்பத்தார்
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross