ஹனிபா புகழ் என்று நிலைத்த்திட வேண்டும்! posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[09 April 2015] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40079
நாகூர் ஹனிபா அவர்கள் தன் இன்னிசையால் நம் இஸ்லாத்தின் மாண்புகளை எடுத்கூறி நம்புண்ணிய மார்க்கத்தை இப்புவியில் பரப்பிட ஒவ்வொரு ஊராக சென்று தன் குரலாலும்,உடலாலும் உன்னதமாக உழைத்தவர்!
தான் சார்ந்த கட்சிக்காக தன்னுடைய உண்மையான உழைப்பை செலுத்தி தன் கட்சிக்கு சோதனை வந்தத நேரமெல்லாம் தலைமைக்கு துணையாக நின்ற ஒரு நன்றிமறவா
நல்நெஞ்சமுடையவர் நாகூர் ஹனிபா என்றால் அது மிகையல்ல!
ஒரு எலும்பு துண்டு ஆதாயத்திற்காக நாக்கை தொங்க போட்டுக்கொண்டு தாம் பிறந்த ஊரைக்கூட காட்டிக்கொடுக்கும் பல பச்சோந்திகள் வாழும் இந்த தமிழகத்தில் வாழந்த வைராக்கிய கொள்கை குன்று நாகூர் ஹனிபா அவர்களுக்கு காட்டிய ஆசைகள்தான் எத்தனை எத்தனை,அள்ளித்தருகிறோம் ,அந்த கட்சியைவிட்டு வந்து விடு எங்கள் கட்சி தலைமையின் தாரகப்புகழை பாட வா என்று பல நாட்கள் , மாதங்கள், வருடங்கள் வலை விரித்து பிடிக்க முயற்சித்தார்கள்!
தான் சார்ந்த கட்சிக்கும்,தன் தலைவனுக்கும் துரோகம் செய்ய துளியளவு கூட சஞ்சலம் கொள்ளாமல் பணத்திற்காக எதையும் தின்று ஏப்பமிட்டு இழிநிலை வாழ்க்கையை வாழும் வீணர்களின் கூட்டத்திலிருந்து விலகி வீரமுடனும்,விசுவாசத்துடனும் கடைசிவரை வாழ்ந்து மறைந்த கொள்கை குன்றுவின் புகழ் இவ்வையகம் வாழும்வரை நின்று நிலைபெற்று வலம் வந்துகொண்டே இருக்கும்! இன்ஷா அல்லாஹ்!
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்,
ஹனிபா புகழ் என்று நிலைத்த்திட நாடும்,
முஹம்மது ஆதம் சுல்தான்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross