நீதி மன்றமே இப்பிரச்சனைக்கு தீர்வு..! posted byதமிழன் முத்து இஸ்மாயில். (kayalpattinam)[11 April 2015] IP: 180.*.*.* India | Comment Reference Number: 40102
சர்வே எண் 278இன் உட்பிரிவு 1 (278/1) வட பாகம் கிராமம் குறித்ததா..? அல்லது தென் பாகம் கிராமம் குறித்ததா..? என்ற குழப்பத்தையும் - எரிவாயு மையத்திற்கு செல்லும் சாலை CRZ பகுதிக்குள் வருகிறதா..? அல்லது சாலை CRZ பகுதிக்குள் வரவில்லையா..? மற்றும் மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளை விதிமுறைக்கு மாற்றமாக தவறாக வழிநடத்தியவர்கள் யார்..? என்ற கேள்விக்கு சரியான தகவல் நாம் கிடைக்க பெற நீதிமன்றத்தை (நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்துவது) அணுகுவது சரியான தீர்வாக அமையும் - அந்த நீதிமன்ற தீர்ப்பை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்வதே இதற்க்கான கடைசி முடிவாக இருக்கும் என கருதுகிறேன்.
கடுமையான நெருக்கடிக்கு தற்போது உட்படுத்தப்பட்டுள்ளதாக கேள்வியுறும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் அது தொடர்பான அதிகாரிகளுக்கும் இது குறித்த பிரச்சனை மிகவும் எளிதான விஷயமாகவும் வெளிப்படையாகவும் அமைந்து விடும்.
இந்த தொடர் பிரச்சனைக்கு நீதி மன்றத்தின் மூலமே தீர்வு காணுவது கால சிறந்தது..!
காலில் சலங்கை கட்டிக்கொண்டு ஒலி எழுப்பிக்கொண்டு திரியும் நகரின் பூனை குட்டிகளுக்கு நீதி மன்றம் மூலமே சரியான தீர்வாக இது அமையும் என்பதில் சந்தேகமில்லை - அப்போது தான் பூனைக்குட்டிகளின் சலங்கை ஒலியும் முடிவுக்கு வரும்..!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross