DCW ஆலையை எதிர்ப்பதில் 90% சதவீத மக்கள் காயல் நகரைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அனைவர்களும் முஸ்லிம்கள். ஆகவே முஸ்லிம்களுக்கு எந்த பாதகம் வந்தாலும் அது சரியே, இமியளவும் அவர்களை எந்த சாதகமும் சென்றடையக்கூடாது என்ற சீரிய குணமுள்ள கோபாலன் கூறுவது ஒன்றும் புதிதல்ல! அவர் உயரத்திலுல்ல எதையோ பார்த்து ஓலமிடுகிறார் என்று ஒதுக்கித்தள்ளிவிட வேண்டியதுதான்!
அதே நேரத்தில் அவர் பேச்சை எதிர்க்கும் நம்மை
மாத்திப்பிடுத்து இதே கோபாலன் கேட்டால், நம்மால்
பதில் சொல்ல முடியுமா ? அது எதுவென்றால்,
நான் பேசியதை கண்டிக்க முன் வரும் காயல் மக்களுக்கு அந்த நகராட்சியில் பெரும்பாலான உறுப்பினர்கள் இந்த ஆலைக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்களே அதுதெரியாதா?
இன்றுவரை அந்த ஆலைக்கு எல்லாவகையிலும் உறுதுணையாக இருந்து ஒன்றென கலந்திருக்கிறார்களே அப்படிப்பட்ட ஊராட்சி உறுப்பினர்களுக்கு தெரியாதா இந்த ஆலையின் கெடுதல் பற்றி! அவர்களின் கண்களும் கருத்துக்களும் குருடாகவா போய்விட்டது, அவர்கள் தானே இந்த ஊரை காப்பாற்றும் உத்தமர்கள்!
அவர்களைக்கூட, இந்த ஆலையின்மூலம் பல அனுசரணைகளை பெருவதால்தான் அந்த ஆலை நிர்வாகத்திற்கு அனுகூலமாக இருக்கிறார்கள் என்று அந்த அருமையான அருந்தவப் புதல்வர்களை, ஒரு சிறு ஆதாயமும் அறியாத புண்ணியம் பொங்கும் பத்திரமாற்று தங்கங்களைப்பற்றி தாறுமாறாகவும், தரக்குறைவாகவும் பேசுபவர்கள் பொறாமை குணமுள்ளவர்கள் என்பதுதான் உண்மை என்று இன்னொரு பேட்டியில் இதே கோபாலன் கூறுகிறார் என்று வைத்துக்கொள்வோம்,
நம் ஒட்டுமொத்த ஊரார்களும்,அண்மைபகுதி மக்களும் இந்த நச்சு ஆலைக்கெதிராக போராடி வருகிறோமே
நாம் அனைவர்களும் நம்முடைய முகத்தை எங்கே கொண்டுபோய் முட்டிக்கொள்ள, மோதிக்கொள்ள!.
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross