Re:... posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[15 April 2015] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40136
ஒரு "தேனீ "க்கு தங்கும் இடம் தேவையா? பொதுத்தொண்டே தன் லட்சிய வாழ்வுக்குறியவனுக்கு ஓய்வா? ஒரு நிமிட உரையாடலில் கூட வேறொருவரின் நலன் நாடியும்,நையாண்டி நகைச்சுவையுடனும் விசாரிக்கும் வித்தியாசமிகு வைத்தியருக்கு ஓய்வுவென்ற "விலங்கா"?
செய்தி பார்த்து பிரமித்துவிட்டேன்.பல மாத வருடம்தாண்டி அவரைசந்தித்தபோது இன்று பூத்த ரோஜாபோல் அவருடைய என்றுமுள்ள இளமையான இதயங்கவரும் சிரிப்புடன் வரவேற்றவர், வழமையான குசல்த்துடன் ஆரம்பித்த எங்கள் உரையாடல் நடுநிசிவரை நீண்டுகொண்டே இருந்தாலும், என்னைப்பற்றி அவர் அறியநினைத்து கேட்டது கால்மணிநேரப் பொலுது கூட இருக்காது!
என்னைத்தவிர மற்றைய ஏனையோர்களைபபற்றியும் அவர்கள் நலன்களைப்பற்ற்யும்,ஊரைப்பற்றியும் ஊர்நலனாற்றுவதிலுள்ள சாதக பாதகங்களைப்பற்ற்யுமே பின்னிரவு வரை பட்டியலிட்டுக் கொண்டு இருந்தாரே தவிர பதப்படுத்தப்பட்டு தயார் நிலையுலுள்ள இரவு உணவைக்கொடுத்துவிட்டு உரையாடலாமே என்று உணர்வு கூட எளிதில் எழாத அளவிற்கு அடுத்தவர்களின் நலனையே நிறைவாக தன் நெஞ்சில் சுமந்து வாழும் ஒரு மனிதநேய,மனிதாபமிகு மாணிக்கம் இதுவரை தாமாமில் தன்னொளியை கொடுத்துவிட்டு,தன் தாயத்திற்கும் தன்னுடைய பொதுநலத்தொண்டொளியை மிளிர்ந்தருள தயாராகி விட்டது!
நீவீர் எங்கிருந்தாலும் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் உதவியால் நலமுடன் வாழ்வாங்கு வாழ,வலிவு பெற்றோங்கிக் கொண்டே இருக்க என்றும் உங்கள் இதயத்தோடு இருக்கமாய் இருக்கும் இந்த ஆதம் சுல்தானின் அன்பு வாழ்த்துக்கள்!
டாக்டர் அவர்களின் உள்ளத்தில் என்றும் நிரம்பி வழியும் நகைச்சுவையின் ஒரு சிறு தூறல்:
தமாமிலுள்ள ஒரு கம்பெனி எங்கள் கம்பெனிக்கு பல வருடங்கள் பாக்கி வைத்த தொகையை வசூலிக்க யான்போவிலிருந்து தமாம் சென்ற நான் டாக்டர் வீட்டில் தங்கினேன். காலையில் குளித்துவிட்டு சிற்றுண்டிக்குப்பிறகு செல்ல தயாரானேன், டாக்டர் பதறியபடி கொஞ்சம் நில்லுங்கள் என்று கதவைத்திறந்து கொண்டு வெளிப்பக்கம் அங்கேயும் இங்கேயுமாக பார்த்தார். என்ன டாக்டர் என்றேன்,வேறு ஒண்ணுமில்லே,பலநாள் பாக்கியுள்ள தொகையை வசூலிக்க போறீங்க நீங்க வீட்டைவிட்டு செல்லும்பொழுது நரி குறுக்கே வந்து அதன் முகத்தில் நீங்கள் முழித்துவிட்டு சென்றால் காரியம் கைகூடும் என்பார்கள்,அதற்க்காகத்தான் வெளியில் பார்த்தேன் என்று கூறியவர் மேலும் தொடர்ந்தார்,
ஆனால் ஒண்ணு,முதலில் நீங்கள் நரியைப்பார்த்து விடவேண்டும்,அதற்கு முன்னால் நரி உங்கள் முகத்தைப் பார்த்தால் அவ்வளவுதான் என்றார், ஏன் என்ன நடக்கும் என்றேன்,வாழ்க்கையில் அந்த நரி கடைசியாக சந்தித்த முகம் உங்கள் முகமாகத்தான் இருக்கும் என்றாரே பார்க்கலாம்!
அல்லஹ் அனைத்தும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross