1. Re:... posted bySHEIKH ABDUL QADER (RIYADH)[15 April 2015] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40134
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.
இறையருள் நிறைக.
தன்னார்வாவமாய் முன்வந்து மனமுவந்து தம் மருத்துவப்பணிகளுக்கிமிடையில் அறப்பணிகளையும்,அரும்பணிகளையும் தொடராக உடலாலும், உழைப்பாலும், மனதாலும் சேவைமனப்பான்மையோடு தந்துகொண்டிருக்கும் நமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய டாக்டர்.முஹம்மது இத்ரீஸ் அவர்கள் தம்மாம் காயல் நலமன்றத்தின் தலைவராக இருந்து தலையாய சேவையாற்றிவந்திருக்கிறார்கள் மாஷா அல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ்.
இது பிரிவு உபசாரமல்ல பரிவு உபசாரமே!
ஆதவனின் கரங்கள் எப்போதும் தம்மை மூடிக்கொள்வதில்லை!
எந்த திசையிலிருந்தாலும் வந்தனம்தரவும் வந்து தனம்தரவும் மறப்பதில்லை.
அந்தவழியில் இடம்பெயரும் நம் அன்பிற்குரிய மருத்துவர் முஹம்மது இத்ரீஸ் அவர்களுக்கு
வல்ல இறைவன் இவ்வரும்சேவைகளுக்கும் இருலோகபாக்கியங்களையும் தந்து உங்களை ஒரு முன்மாதிரியாக்கி மென்மேலும் நல்ல நல்ல சேவைகளாற்றும் ஆரோக்கியத்தையும் வளமான நலமான வாழ்வையும் எங்கிருந்தபோதும்தந்து மகிழ்வான முகங்களை உருவாக்கும் முகிலாக அமைத்துத்தந்தருள்வானாக ஆமீன்.
2. Re:... posted byS.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A)[15 April 2015] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40135
தம்மாம் காயல் நல மன்றத்தின் பொதுக்குழு சிறப்பாக நடந்தேற வல்லோன் அருள் புரிவானாக.
இப்பொதுக்குழுவில் மரியாதைக்குரிய மன்றத்தின் தலைவர் டாக்டர் இத்ரிஸ் அவர்களுக்கு வழியனுப்பு என்பதனை அறிந்து மகிழ்வதா வேதனை அடைவதா என்பதனை சொல்ல தெரியவில்லை!
காரணம் அவர்கள் இங்கு தம்மாமிளிருந்தாலும் சவுதியில் எந்தபகுதியிலிருந்து மருத்துவ ஆலோசனை கேட்டாலும் தனது பரிவான பதிலையும் ஆலோசனையும் நகைச்சுவையுடன் தரக்கூடியவர்கள்.இதில் அதிகம் பயன் பெற்றவர்களில் நானும் ஒருவன். இருந்தாலும் அவர்கள் தாயகத்தில்ருந்து இந்த சேவையை தொடவார்கள் என்பதில் சந்தோசமே!
வல்லநாயன் டாக்டர் அவர்களுக்கு பூரண சுகத்தை கொடுத்து மருத்துவ மற்றும் பொது சேவையினை தொடர அருள்புரிவானாக - ஆமீன்.
3. Re:... posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[15 April 2015] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40136
ஒரு "தேனீ "க்கு தங்கும் இடம் தேவையா? பொதுத்தொண்டே தன் லட்சிய வாழ்வுக்குறியவனுக்கு ஓய்வா? ஒரு நிமிட உரையாடலில் கூட வேறொருவரின் நலன் நாடியும்,நையாண்டி நகைச்சுவையுடனும் விசாரிக்கும் வித்தியாசமிகு வைத்தியருக்கு ஓய்வுவென்ற "விலங்கா"?
செய்தி பார்த்து பிரமித்துவிட்டேன்.பல மாத வருடம்தாண்டி அவரைசந்தித்தபோது இன்று பூத்த ரோஜாபோல் அவருடைய என்றுமுள்ள இளமையான இதயங்கவரும் சிரிப்புடன் வரவேற்றவர், வழமையான குசல்த்துடன் ஆரம்பித்த எங்கள் உரையாடல் நடுநிசிவரை நீண்டுகொண்டே இருந்தாலும், என்னைப்பற்றி அவர் அறியநினைத்து கேட்டது கால்மணிநேரப் பொலுது கூட இருக்காது!
என்னைத்தவிர மற்றைய ஏனையோர்களைபபற்றியும் அவர்கள் நலன்களைப்பற்ற்யும்,ஊரைப்பற்றியும் ஊர்நலனாற்றுவதிலுள்ள சாதக பாதகங்களைப்பற்ற்யுமே பின்னிரவு வரை பட்டியலிட்டுக் கொண்டு இருந்தாரே தவிர பதப்படுத்தப்பட்டு தயார் நிலையுலுள்ள இரவு உணவைக்கொடுத்துவிட்டு உரையாடலாமே என்று உணர்வு கூட எளிதில் எழாத அளவிற்கு அடுத்தவர்களின் நலனையே நிறைவாக தன் நெஞ்சில் சுமந்து வாழும் ஒரு மனிதநேய,மனிதாபமிகு மாணிக்கம் இதுவரை தாமாமில் தன்னொளியை கொடுத்துவிட்டு,தன் தாயத்திற்கும் தன்னுடைய பொதுநலத்தொண்டொளியை மிளிர்ந்தருள தயாராகி விட்டது!
நீவீர் எங்கிருந்தாலும் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் உதவியால் நலமுடன் வாழ்வாங்கு வாழ,வலிவு பெற்றோங்கிக் கொண்டே இருக்க என்றும் உங்கள் இதயத்தோடு இருக்கமாய் இருக்கும் இந்த ஆதம் சுல்தானின் அன்பு வாழ்த்துக்கள்!
டாக்டர் அவர்களின் உள்ளத்தில் என்றும் நிரம்பி வழியும் நகைச்சுவையின் ஒரு சிறு தூறல்:
தமாமிலுள்ள ஒரு கம்பெனி எங்கள் கம்பெனிக்கு பல வருடங்கள் பாக்கி வைத்த தொகையை வசூலிக்க யான்போவிலிருந்து தமாம் சென்ற நான் டாக்டர் வீட்டில் தங்கினேன். காலையில் குளித்துவிட்டு சிற்றுண்டிக்குப்பிறகு செல்ல தயாரானேன், டாக்டர் பதறியபடி கொஞ்சம் நில்லுங்கள் என்று கதவைத்திறந்து கொண்டு வெளிப்பக்கம் அங்கேயும் இங்கேயுமாக பார்த்தார். என்ன டாக்டர் என்றேன்,வேறு ஒண்ணுமில்லே,பலநாள் பாக்கியுள்ள தொகையை வசூலிக்க போறீங்க நீங்க வீட்டைவிட்டு செல்லும்பொழுது நரி குறுக்கே வந்து அதன் முகத்தில் நீங்கள் முழித்துவிட்டு சென்றால் காரியம் கைகூடும் என்பார்கள்,அதற்க்காகத்தான் வெளியில் பார்த்தேன் என்று கூறியவர் மேலும் தொடர்ந்தார்,
ஆனால் ஒண்ணு,முதலில் நீங்கள் நரியைப்பார்த்து விடவேண்டும்,அதற்கு முன்னால் நரி உங்கள் முகத்தைப் பார்த்தால் அவ்வளவுதான் என்றார், ஏன் என்ன நடக்கும் என்றேன்,வாழ்க்கையில் அந்த நரி கடைசியாக சந்தித்த முகம் உங்கள் முகமாகத்தான் இருக்கும் என்றாரே பார்க்கலாம்!
அல்லஹ் அனைத்தும் அறிந்தவன்!
4. Re:...இத்ரீஸ் என்ற இப்ரீத்துக்கு ஓய்வா? posted bymackie noohuthambi (kayalpatnam)[15 April 2015] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 40139
மரம் ஓய்வெடுக்க நினைத்தாலும் காற்று விடுவதில்லை.
இத்ரீஸ் என்ற இப்ரீத்துக்கு ஓய்வா? நம்ப முடியவில்லை. நாங்கள் தம்மாம் காயல்நல மன்றத்தில் பணியாற்றிய காலங்களிலும் பின்னர் ரியாதில் பணியாற்றி மீண்டும் தம்மாமில் இணைந்தபோதும் இந்த என்றும் இளமை மிக்க மருத்துவரின் நகைச்சுவைகளை கண்டு ரசித்திருக்கிறேன்.
மருத்துவர்கள் வாயில் CIGARETTE, முகத்தில் COOLING GLASS கழுத்தில் STATHOSCOPE இவற்றுடன் மிக TENSION னாகவும் கோபமாகவும்தான் இருப்பார்கள்.. அவர்கள் நடந்தால் அவரது BOOTS டாக் டாக் என்று ஒலி எழுப்பும். அது நோயாளிகளுக்கு கிலி எழுப்பும். அதுதான் அவர்களுக்கு கௌரவம் என்றும் நினைப்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் அந்த நிலை இல்லை. நமது இத்ரீஸ் டாக்டர் அவர்களிடம் எந்தக் காலத்திலும் இந்த மாதிரி அணிகலன்கள் இருந்ததில்லை. அவர் புன்னகை மன்னனாகவே இருப்பார். இது ஒரு டாக்டருக்கு அழகா என்றெல்லாம் சிலர் நினைப்பதுண்டு. அவ்வளவு சிம்பிள். அவர் ஓய்வெடுக்கிறார் என்றால் இப்போது அவருக்கு வயதாகி விட்டது என்பதைத்தான் அது காட்டுகிறது.
தாய் நாட்டுக்கு அவர் திரும்பி வருகிறார். இந்த நாட்டு சுற்று சூழல்கள் நட்பு வட்டங்கள் அவரை எப்படி இங்கு மாற்றி விடுமோ என்று எனக்கு பயமாக இருக்கிறது..
ஒரு நண்பர் சிரிப்பாக சொன்னார். இந்தியாவில்
""தேனும் பாலும் ஓடும்"" என்று சொன்னார்கள் இங்கு வந்து பார்த்த போது ""தேளும் பாம்பும்தான் ஓடுகிறது"".
டாக்டர் அவர்கள் சிரிப்பும் செழிப்பும் என்றென்றும் நிலைத்து நிற்க அல்லாஹ் அருள் புரிவானாக அவருக்குரிய சிறப்பும் மதிப்பும் அந்த நகைச்சுவையுடன் பணியாற்றும் தன்மையில்தான் தங்கி இருக்கிறது.
மரம் ஓய்வெடுக்க நினைத்தாலும் காற்று விடுவதில்லை என்பார்கள். உங்களுக்கு ஒய்வு இங்கே காயல்பட்டினம் மக்களுக்கு சேவை செய்வதில்தான் இருக்கிறது. இப்ரீத் என்ற ஜின் ஓய்வெடுத்ததுண்டா? அதற்கான சான்றுகள் எனக்கு தெரியவில்லை.
வாருங்கள் வரவேற்கிறோம். உங்கள் வரவு நல்வரவாகட்டும்..
5. வேடந்தாங்களே பறக்க போவது கண்டு.. posted byமுத்துவாப்பா (AL KHOBAR)[16 April 2015] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40145
மன்ற தாய் கழகத்தின் தந்தையே...
தனி மரம் தோப்பாகதென்பார்கள்-ஆனால்
இந்த தனி மரத்தால் இம்மன்றம் தோப்பானது..
வேடந்தாங்களே பறக்க போவது கண்டு..
விழி பிதுங்கி நிற்கும் பறவைகளாய் நாங்கள்
பிரிவு என்ற சொல் வலிக்கத்தான் செய்கின்றது
உங்கள் நினைவுகள் என்னும் பொக்கிஷத்தொடு நாங்கள்…
இது பிரிவல்ல சற்று தொலைவு தான் என்ற ஆறுதலோடு…
தங்களின் சமூக பணி தொடர , பிணியின்றி ,நீண்ட ஆயுளோடு
நிம்மதியான வாழ்வோடு பல்லாண்டு காலம் வாழ
இரு கையேந்தி இறைவனை இறைஞ்சுகின்றேன்
6. Re:...பாலைவனத்து பொது சேவையில் இவர் ஒரு சோலைவனம்...! posted byAnbinalA (Jaipur)[16 April 2015] IP: 115.*.*.* India | Comment Reference Number: 40176
தலைவரின் வழியனுப்பு விழா
அழைப்பிதழ் படித்தேன்
அது ஒரு "ப டி ' தேன்..."
71 - ம் பொதுக் கூட்டம்
17 - ம் தேதி நடைபெறுகிறது
தம்மாமின் சேவை நாயகர்
"தமாம்"செய்து விட்டு தாயகம் வரும்
தாய் அகத்தை வரவேற்க்கிறோம்...
1994 -ம் ஆண்டு நானும் மர்ஹூம் கனியும் (அலியார் தெரு) இரவு 11 மணிக்கு அல்கோபரில் டாக்டர் வீட்டில் சென்று இதுபோல் காயல் நலமன்றம் துவங்குவது என முடிவு செய்துள்ளோம் எனவும். நீங்கள் தலைமை ஏற்று நடத்துங்கள் என்றோம். அப்போது டாக்டர் ஏன் நீங்கள் இளைஞர்கள் நடத்துங்கள் என்றார்கள் மேலும் இதற்கு முன் நலமன்றம் இருந்தது தற்போது நடக்கவில்லை என்றார்கள். அப்போது நான் சொன்னேன். "சிறுவர் செய்த வெள்ளாமை வீடு வந்து சேராது "டாக்டர் என்றதும் ஓ....!அப்படியா அவருக்கே உரிய "நகை' சுவை" உணர்வுடன் சரி நான் தலைமை ஏற்க்கிறேன்... இளைஞர்கள் ஆதரவுடன் என அன்று பிறந்த குழந்தையை இன்று 21 வயது வாலிபனாக ஒலிம்பிக்கில் பதக்கத்தை விட நிறைந்த நல் இதயங்களின் தங்கமான வான் உயர் பாராட்டும்...தூஆவும்...எண்ணிடலாங்கா..... இதை மலரும் நினைவாக இதன் மூலம் பதிவு செய்கிறேன்...
எமது பாசமிகு பண்பாளர்
காயல் நல மன்ற தலைவர்
குட்டையானவர் - ஆனால்
பிறர் துயர் கண்ணீர் துடைக்கும்
"கை'குட்டையானவர்..."
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross