காயல்பட்டினம் பேருந்து நிலையத்தையொட்டி அமைந்துள்ளது பொதுச்சேவை மையம். அரசிடமிருந்து பெறப்பட வேண்டிய முக்கியமான சான்றிதழ்களை இச்சேவை மையத்திலிருந்து ஆன்லைன் மூலம் பெற்றுக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
கூடுதலாக, தற்போது ஆதார் அடையாள அட்டை பெறுவதற்கான பதிவுகளும் இங்கு நடைபெற்று வருகிறது. கடந்த (ஏப்ரல் 10) வெள்ளிக்கிழமை முதல், கணக்கெடுப்பில் இடம்பெறாத புதியவர்களுக்கும் இப்பொதுச்சேவை மையம் வழியாக விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டு, ஆதார் அட்டை பெறுவதற்கான பதிவுகள் செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியரால் அறிவிக்கப்பட்டிருந்தது.
இப்பொதுச்சேவை மையத்தில், காயல்பட்டினம் நகர மக்கள் மட்டுமின்றி, சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மக்களும் சேவைகளைப் பெறுவதற்காக அன்றாடம் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலையுள்ளது. முறையான இருக்கை வசதிகள் இல்லாததால் அவர்கள் பல்வேறு அவதிகளுக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், பொதுமக்கள் வசதிக்காக காயல்பட்டினம் பொதுச் சேவை மையத்தில் கூடுதலாக ஒரு கணினி அமைக்கப்பட்டு, மொத்தம் இரண்டு கணினிகளில் பதிவுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இவ்வாறிருக்க, நேற்று (ஏப்ரல் 15 புதன்கிழமை) காயல்பட்டினம் பொதுச்சேவை மையத்தில் ஆதார் அடையாள அட்டை பதிவுக்கான டோக்கன் பெறுவதற்காக பெருந்திரளானோர் காத்திருந்தனர். கூட்ட நெரிசல் காரணமாக அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டு, பொதுமக்களிடையே வாக்குவாதங்களும் நடைபெற்றுள்ளன.
சிறிது நேரத்தில் காவல்துறையினர் அங்கு வந்து பொதுமக்களை அமைதிப்படுத்தியதோடு, அவர்களே தலையிட்டு டோக்கன்களை வினியோகித்தனர்.
தற்போது, அங்கு வார்டு வாரியாக டோக்கன் வழங்க நாட்கள் பிரிக்கப்பட்டு, காயல்பட்டினம் நகராட்சி ஆணையரால் பின்வருமாறு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது:-
படங்களில் உதவி:
ஷேக்னா (PHM)
பொதுச்சேவை மையம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |