ஐக்கிய அரபு அமீரகம் - துபையில் செயல்பட்டு வரும் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜமாஅத் அமைப்பின் சார்பில், இம்மாதம் 24ஆம் நாளன்று குடும்ப சங்கம நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, அதன் செய்தி தொடர்பாளர் எம்.எஸ்.அப்துல் ஹமீத் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
அமீரகத்தில் சிறப்பாக இயங்கி வரும் காயல் அஸ்ஹர் ஜமாஅத் (KAJ) இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 24.04.2015 வெள்ளியன்று துபையில் குடும்ப சங்கம நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இந்நிகழ்ச்சியை அலங்கரிக்கும் விதமாக மௌலவி அப்துல் பாஸித் புகாரீ அவர்கள் “சமூக வலைத்தளங்களும் பெற்றோர்களின் பங்களிப்பும்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார்.
பர்துபையிலுள்ள அல் முஸல்லா டவரில் இன்ஷா அல்லாஹ் மாலை 7.30 முதல் 9.30 மணி வரை இந்நிகழ்ச்சி நடைபெறும். கிரீன் லைனிலுள்ள அல் ஃபாஹிதி மெட்ரோ ஸ்டேஷனில் இறங்கி Exit no.4ல் வெளிவந்தால் அல் முஸல்லா டவருக்கு எளிதாக வரலாம். சகோதரர்கள் மெட்ரோவில் வருவது நல்லது. கார் பார்க்கிங் வசதியும் உண்டு. இரண்டு மணி நேரத்திற்கு கார் பார்க்கிங் இலவசம்.
இரவு உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கு தனியிட வசதி உண்டு.
கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் சகோ. ஃபிர்தவ்ஸ் - 052 6491992 & சகோ. தஸ்தகீர் - 050 2837484 ஆகியோரைத் தொடர்பு கொண்டு தங்கள் வருகையை முன்பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். நிகழ்ச்சி நடக்கும் இடம் மற்றும் மேலதிக தகவல்களுக்கு சகோ. ரியாஸ் - 055 5280250 & சகோ. ஷேக் முஹம்மது - 055 8497669 ஆகியோரைத் தொடர்புகொள்ளலாம்.
அபூதபீயிலுள்ள சகோதரர்கள் சகோ. மக்பூல் - 050 690 4600 & சகோ. அன்சாரீ - 055 9100909 ஆகியோரைத் தொடர்பு கொண்டு தங்கள் வருகையை முன்பதிவு செய்யவும்.
அபூதபீயிலிருந்து வரும் சகோதரர்கள் பார்க்கிங் வசதியுள்ள மெட்ரோ ஸ்டேஷன் ஒன்றில் (உதா: இப்னு பதூதா மெட்ரோ ஸ்டேஷன்) வாகனத்தை நிறுத்தி விட்டு, பர்ஜுமான் சென்டர் வரை மெட்ரோவில் வந்து, அங்கிருந்து கிரீன் லைன் மாறி, அதற்கடுத்த ஸ்டேஷனான அல் ஃபாஹிதி ஸ்டேஷனில் வந்து இறங்க வேண்டும். இதனால் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கலாம். பயண நேரத்தையும் மிச்சப்படுத்தலாம்.
அமீரகவாழ் காயல் சகோதரர்கள் அனைவரும் நிகழ்ச்சியில் கலந்து பயனடையுமாறு காயல் அஸ்ஹர் ஜமாஅத் கனிவன்புடன் கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு அந்த செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபை அஸ்ஹர் ஜமாஅத் அமைப்பு தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 13:54 / 18.04.2015]
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross