பள்ளப்பட்டி மக்தூமிய்யா அரபிக் கல்லூரியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து, இம்மாதம் 02ஆம் நாள் (நேற்று) வியாழக்கிழமையன்று, கொடைக்கானலில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு திரும்பி வந்தபோது, திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டை அருகே அவர்களது வாகனம் எதிரே வந்த லாரி மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில், அக்கல்லூரியின் ஆசிரியர்கள் உட்பட 8 மார்க்க அறிஞர்களும், வாகன ஓட்டுநர் ஒருவரும் என மொத்தம் 9 பேர் இறந்துவிட்டனர். ஒரு மார்க்க அறிஞர் நினைவிழந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இவ்விபத்தில் காலமானவர்களது குடும்ப நலனுக்காக, ஜெய்ப்பூர் காயல் நல மன்றம் - ஜக்வா அமைப்பின் சார்பில் 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவ்வமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹிம். அஸ்ஸலாமுஅலைக்கும்.
அல்லாஹ்வின் பேருதவியால் எமது ஜெய்ப்பூர் காயல் நல மன்றம் சார்பாக திண்டுக்கல் அருகே விபத்தில் உயிரிழந்த மார்க்க அறிஞர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 50,000/= நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.
நிதியுதவி அளிக்க விரும்பும் மற்ற காயல் நல மன்றங்கள் தூத்துக்குடி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை செயலாளர் மெளலவி முஜிபுர்ரஹ்மான் அவர்களை தொடர்பு கொள்ளும்படி வேண்டுகிறோம். அவரின் அலைபேசி எண்: +918682944818 +919487248287
தகவல்:
தலைவர் (+919414339719,+919442362353)
ஜக்வா ஜெய்ப்பூர்
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜக்வா தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |