சென்னை மாநகராட்சியின் மெரினா லூப் சாலை திட்டத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் சென்னை கிளையின் இரண்டாம் அமர்வு இடைக்கால தடை
விதித்துள்ளது. 47 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டம் மூலம், சென்னை சாந்தோம் சாலை போக்குவரத்தினை மேம்படுத்த, கலங்கரை விளக்கம் மற்றும் பட்டினம்பாக்கம் பகுதிகளை இணைக்கும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த திட்டத்திற்கு CRZ ஒப்புதல் வழங்கப்படவில்லை என்ற காரணத்திற்காக கடந்த மாதம், நீதிபதி சொக்கலிங்கம் தலைமையிலான இத்தீர்ப்பாயத்தின் முதல் அமர்வு - இடைக்கால் தடை விதித்திருந்தது. மேலும் - சாலை விரிவாக்கம் திட்டம் - விதிமுறைகளை மீறுகிறதா என விசாரிக்க, இத்தீர்ப்பாயம் வழக்கறிஞர் ஒருவரை நியமித்தும் இருந்தது.
இதற்கிடையே - தொடர்ந்து நடந்த விசாரணையில், மாநகராட்சி தரப்பில் - இத்திட்டத்திற்கு என பெறப்பட்ட CRZ ஒப்புதல் தீர்ப்பாயத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதனை அடுத்து, சென்னை டி.நகர் சார்ந்த எஸ்.வெங்கடேஷ் என்பவர், CRZ ஒப்புதலுக்கு தடை விதிக்க கோரி, தீர்ப்பாயத்தை அணுகினார்.
புதிய மனு, நேற்று (புதன்கிழமை), பசுமை தீர்ப்பாயத்தின் நீதிபதி ஜோதிமணி தலைமையிலான இரண்டாம் அமர்விற்கு முன்னர் வந்தது. அம்மனுவில் - இத்திட்டம், சில இடங்களில் உயர் அலை எல்லைக்குள் வருகிறது என்றும், அலைகளின் எல்லைகளுக்கு இடையிலான பகுதி CRZ - 1 பகுதி என விதிகள் கூறுகின்றன என்றும், எனவே இப்பணிகள் - CRZ NOTIFICATION 2011 படி, அனுமதிக்கப்பட்டவை அல்ல என்றும் தெரிவித்தது.
வழங்கப்பட்ட CRZ ஒப்புதல், சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் இணையதளத்தில் கட்டாயமாக பதிவேற்றம் செய்யப்படவேண்டும் என்றும், இத்திட்டத்திற்கு வழங்கப்பட்ட CRZ ஒப்புதல் - இணையதளத்தில் பதிவேற்றம் செய்யபப்டவில்லை என்றும் மனு தாரர் கூறியிருந்தார்.
அரசு வழக்கறிஞர்கள், இது தொடர்பான் மற்றொரு வழக்கு, இதே நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதால், அந்த வழக்கோடு இந்த வழக்கை இணைக்கலாம் என கூறினாலும் - CRZ ஒப்புதலுக்கு இடைக்கால தடை விதித்து, வழக்கினை மே 5க்கு நீதிபதி ஜோதிமணி ஒத்தி வைத்தார்.
தகவல்:
தி ஹிந்து |