காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியில், யு.கே.ஜி. முடித்து முதல் வகுப்பில் அடியெடுத்து வைக்கவுள்ள மழலை மாணவ-மாணவியருக்கான பட்டமளிப்பு விழா இம்மாதம் 11ஆம் நாள் சனிக்கிழமையன்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
பள்ளி ஆசிரியை எஸ்.ஏ.கே.மைமூன் ஆஸியா நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். ஆசிரியை சி.சுமதி வரவேற்புரையாற்றினார். விழாவிற்குத் தலைமை தாங்கிய பள்ளி நிறுவனர் முனைவர் ஆர்.எஸ்.அப்துல் லத்தீஃப் நிகழ்ச்சி அறிமுகவுரையாற்றினார்.
இவ்விழாவில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வாழ்த்துரையாற்றியதோடு, மழலை மாணவ-மாணவியருக்கு பட்டச் சான்றிதழ்களை வழங்கினார்.
அவரைத் தொடர்ந்து, பள்ளி நிர்வாகிகளான ஆர்.எஸ்.அப்துல் காதிர், வி.எஸ்.எஸ்.முஹ்யித்தீன் தம்பி, பள்ளி செயலாளர் ஏ.எல்.ஷம்சுத்தீன், தலைமையாசிரியர் ஸ்டீஃபன் உள்ளிட்டோர் மழலையருக்கு பட்டச் சான்றிதழ்களை வழங்கினர்.
பள்ளி ஆசிரியை ஃபாத்திமா ஷாஹின் நன்றி கூற, துஆ - ஸலவாத்துடன் விழா நிறைவுற்றது. இவ்விழாவில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி பள்ளி நிர்வாகிகள், ஆசிரியையர், மாணவ-மாணவியர், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
தகவல் & படங்கள்:
K.M.T.சுலைமான்
(துணைச் செயலாளர் - முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி)
முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |