செய்தி எண் (ID #) 15772 | | |
வியாழன், ஏப்ரல் 16, 2015 |
மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் முன்னாள் செயலாளர் காலமானார்! ஏப். 17 (நாளை) காலை 10 மணிக்கு நல்லடக்கம்!! |
செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்) இந்த பக்கம் 6743 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (40) <> கருத்து பதிவு செய்ய |
|
மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் முன்னாள் செயலாளர் – காயல்பட்டினம் அப்பாபள்ளித் தெருவைச் சேர்ந்த அல்ஹாஜ் எஸ்.ஏ.பீர் முஹம்மத், இன்று 14.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 75. அன்னார்,
மர்ஹூம் பீ.செ.செய்யித் அஹ்மத் அவர்களின் மகனும்,
மர்ஹூம் எஸ்.எல்.ஷெய்கு நூருத்தீன் அவர்களின் மருமகனாரும்,
குருவித்துறைப் பள்ளி மற்றும் மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் தலைவர் அல்ஹாஜ் நஹ்வீ இ.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ ஆலிம், குருவித்துறைப் பள்ளியின் முன்னாள் செயலர் மர்ஹூம் அல்ஹாஜ் இ.எஸ்.செய்யித் இஸ்மாயில் ஆகியோரின் சகோதரி மகனும்,
ஹாஜ்ஜா எஸ்.என்.முஹ்யித்தீன் ஃபாத்திமா என்பவரின் கணவரும்,
குருவித்துறைப் பள்ளியின் முன்னாள் செயலர் மர்ஹூம் அல்ஹாஜ் எஸ்.என்.சுல்தான் அப்துல் காதிர், அல்ஹாஜ் எஸ்.என்.முஹம்மத் நூஹ் ஆகியோரின் மைத்துனரும்,
குருவித்துறைப் பள்ளியின் முன்னாள் செயலாளர் அல்ஹாஜ் எஸ்.எம்.கபீர் அவர்களின் சகளையும்,
மர்ஹூம் செய்யித் அபூதாஹிர், அல்ஹாஜ் கே.எம்.முஹ்யித்தீன் தம்பி, ஜனாப் எம்.எம்.ஷெய்கு சுலைமான் ஆகியோரின் மச்சானும்,
ஐக்கிய அரபு அமீரகம் துபை காயல் நல மன்றத்தின் மருத்துவ உதவிக் குழு உறுப்பினர் டாக்டர் பீ.எம்.செய்யித் அஹ்மத், அபூதபீ காயல் நல மன்ற பொருளாளர் அல்ஹாஜ் பீ.எம்.ஹுஸைன் நூருத்தீன், சிங்கப்பூர் காயல் நல மன்ற முன்னாள் செயற்குழு உறுப்பினர் அல்ஹாஃபிழ் பீ.எம்.முஹம்மத் ஸர்ஜூன், ஹாஜ்ஜா பீ.எம்.முத்து ஆமினத் ஆகியோரின் தந்தையும்,
அல்ஹாஜ் ஓ.ஏ.கே.ஷஃபீயுல்லாஹ்வின் மாமனாரும்,
ஹாஃபிழ் எஸ்.ஏ.அஹ்மத் முஸ்தஃபா, எம்.டீ.கிதுரு முஹம்மத் ஃபாயிஸ், ஹாஃபிழ் எம்.டீ.செய்யித் அஹ்மத், ஹாஃபிழ் எம்.டீ.யாஸர் அரஃபாத், ஹாஃபிழ் எஸ்.எஸ்.முஹம்மத் முஹ்யித்தீன் ஆகியோரின் தாய்மாமாவும்,
டாக்டர் எம்.எம்.சுல்தான் ராஷித், எஸ்.ஏ.பீர் முஹம்மத், எஸ்.முஹம்மத் உமர் ஆகியோரின் அப்பாவும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா, நாளை (ஏப்ரல் 17) வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
தகவல்:
O.A.K.ஷஃபீயுல்லாஹ்
படம்:
ஹாஃபிழ் S.M.B.முஹம்மத் முஹ்யித்தீன் மூலமாக
M.N.L.சுலைமான்
(MNL ஏரோ ட்ராவல்ஸ்)
[விரிவான தகவல்கள், படம் இணைக்கப்பட்டன @ 17:33 / 16.04.2015] |