பள்ளப்பட்டி மக்தூமிய்யா அரபிக் கல்லூரியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து, இம்மாதம் 02ஆம் நாள் (நேற்று) வியாழக்கிழமையன்று, கொடைக்கானலில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு திரும்பி வந்தபோது, திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டை அருகே அவர்களது வாகனம் எதிரே வந்த லாரி மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில், அக்கல்லூரியின் ஆசிரியர்கள் உட்பட 8 மார்க்க அறிஞர்களும், வாகன ஓட்டுநர் ஒருவரும் என மொத்தம் 9 பேர் இறந்துவிட்டனர். ஒரு மார்க்க அறிஞர் நினைவிழந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இறந்தவர்களின் பாவப் பிழைபொறுப்பிற்காகவும், சிகிச்சை பெற்று வருபவரின் பூரண உடல் நலனுக்காகவும், இம்மாதம் 15ஆம் நாள் புதன்கிழமையன்று நடைபெற்ற - காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் பொதுக்குழுக் கூட்டத்தில் இரங்கல் தெரிவித்து துஆ செய்யப்பட்டது.
குருவித்துறைப் பள்ளி மற்றும் மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் தலைவர் நஹ்வீ இ.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ ஆலிம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தை, ஹாஃபிழ் எம்.ஏ.சி.ஈஸா ஷஃபீக் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார்.
நடப்பு 88ஆம் ஆண்டு வைபவ நிகழ்ச்சிகளை, இம்மாதம் 19ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை இரவு ராத்திபத்துல் காதிரிய்யா திக்ர் மஜ்லிஸுடன் வழமை போல துவக்கிட இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
மஜ்லிஸ் நலப்பணிகளில் இணைந்து செயலாற்றி, அண்மையில் காலமான - ஹாஜி உ.ம.செய்யித் இப்றாஹீம், ‘நூஹிய்யா ட்ரேடர்ஸ்’ ஹாஜி எம்.என்.முஹம்மத் இஸ்மாஈல் ஆகியோர் மறைவுக்கும், அண்மையில் விபத்தில் காலமான பள்ளப்பட்டி மார்க்க அறிஞர்கள் மறைவுக்கும் இக்கூட்டத்தில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு, அன்னவர்களின் மஃக்ஃபிரத்திற்காக (பாவப் பிழை பொறுப்பிற்காக) துஆ பிரார்த்தனை செய்யப்பட்டது. மவ்லவீ எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
நடப்பாண்டு வைபவ நிகழ்ச்சிகள் குறித்த பிரசுரம் வருமாறு:-
மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |