சஊதி அரபிய்யா - தம்மாம் காயல் நல மன்ற பொதுக்குழுக் கூட்டத்தில், விடைபெற்று தாயகம் திரும்பும் மன்றத் தலைவருக்கு பிரியாவிடையளிக்கப்பட்டதுடன், புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் துணைத்தலைவர் சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் வெளியிட்டுள்ள அறிக்கை:-
எல்லாப் புகழும், புகழ்ச்சியும் வல்ல அல்லாஹ் ஒருவனுக்கே.
பொதுக்குழுக் கூட்டம்:
சஊதி அரபிய்யா - தம்மாம் காயல் நல மன்றத்தின் 71ஆவது பொதுக்குழுக் கூட்டம், 17ஆம் நாள், வெள்ளிக்கிழமையன்று 18:30 மணியளவில், தம்மாம் ரோஸ் உணவக வளாகத்தில் - விடைபெறும் மன்றத் தலைவருக்கு வழியனுப்பு நிகழ்ச்சியாக நடைபெற்று முடிந்தது, அல்ஹம்துலில்லாஹ்.
எம்.எம்.செய்யித் இஸ்மாஈல் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். இளவல் யூஸுஃப் இறைமறை குர்ஆன் வசனங்களை ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார்.
கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த அனைத்து உறுப்பினர்களையும், வெளியூர் சகோதரர்களையும் மன்ற துணைத்தலைவர் சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் வரவேற்றுப் பேசினார்.
விடைபெறும் தலைவருக்குப் பிரியாவிடை:
ரியாத் காயல் நல மன்றத்தின் தலைவர் ஹாஃபிழ் எம்.ஏ.ஷெய்க் தாவூத் இத்ரீஸ், தம்மாம் காயல் நல மன்ற துணைத்தலைவர் சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன், நஹ்வீ அபூபக்கர், செய்யித் முஹம்மத் ஷாதுலீ, திருச்சி அப்பாஸ் பாய், திருச்சி பொறியாளர் ஷாஃபீ, கீழக்கரை மவ்லவீ ஜஹாங்கீர், மவ்லவீ நூஹ் மஹ்ழரீ ஆகியோர் இக்கூட்டத்தில் - விடைபெறும் மன்றத் தலைவரது சேவைகளை நினைவுகூர்ந்து உரையாற்றி, அவருக்காக பிரார்த்தனை செய்தனர்.
ஏற்புரை:
அவர்களைத் தொடர்ந்து, விடைபெறும் தலைவர் டாக்டர் முஹம்மத் இத்ரீஸ் ஏற்புரையாற்றினார்.
மன்றம் துவங்கப்பட்ட வரலாறு, கடந்து வந்த பாதைகள், மன்றத்தின் வளர்ச்சிக்குப் பாடுபட்ட சகோதரர்களின் உதவிகள் போன்றவற்றை நினைவு கூர்ந்து பேசிய அவர், தான் சஊதியில் செய்த சமூகப் பணிகளை, காயல்பட்டினத்தில் அப்படியே தொடரப் போவதாகக் கூறினார்.
அவருக்கும் மன்றத்திற்கும் கிடைத்த - அனைவரது உதவிகளையும் நன்றியுடன் நினைவு கூர்ந்த அவர், அனைவரது ஆரோக்கியத்திற்கும், நல்ல பல சேவைகளைத் தொடர்ந்து செய்யவும் பிரார்த்தித்து, வாழும் வழிமுறைகளை தனக்கே உரித்தான நகைச்சுவை பாணியில் விவரித்து, தற்காலிகமாக விடைபெற்றார்.
புதிய நிர்வாகிகள் தேர்வு:
புதிய நிர்வாகிகளது பெயர்களை விடைபெறும் தலைவர் முன்மொழிய அனைவரும் தக்பீர் முழக்கத்துடன் வழிமொழிந்தனர். புதிய நிர்வாகிகள் விபரம் வருமாறு:-
தலைவர்:
எஸ்.ஏ.அஹ்மத் ரஃபீக்
துணைத் தலைவர்கள்:
(1) சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன்
(2) பீ.எஸ்.ஷெய்க் நூருத்தீன் (தல்)
பொதுச் செயலாளர்:
எம்.எம்.செய்யித் இஸ்மாஈல்
துணைச் செயலாளர்கள்:
(1) பீ.எம்.எஸ்.ஸதக்கத்துல்லாஹ்
(2) ஏ.பஷீர் அஹ்மத்
பொருளாளர்:
முஹம்மத் இப்றாஹீம்
துணைப் பொருளாளர்:
புகாரீ சுலைமான்
செயற்குழு உறுப்பினர்கள்:
(01) எம்.எம்.புகாரீ
(02) யு.எல்.முஹம்மத் அபூபக்கர்
(03) எஸ்.நூருத்தீன்
(04) எஸ்.டி.அபூபக்கர்
(05) ஓ.எஃப்.செய்யித் முஹம்மத் ஷாதுலீ
(06) எஸ்.பி.இம்தியாஸ்
(07) என்.ஏ.முஹம்மத் நூஹ்
(08) எஸ்.எஸ்.அப்துல் அஜீஸ்
(09) நவ்ஃபல் இஸ்மாஈல்
(10) அப்துல் காதிர் (ஸாரா)
(11) நஸீர்
(12) தாவூத்
(13) எம்.எம்.அபூபக்கர் (ஜுபைல்)
(14) முத்துவாப்பா புகாரீ
(15) கலீலுர்ரஹ்மான் (ரஹீமா)
Action Committee Members:
(1) எஸ்.பி.இம்தியாஸ் (கன்வீனர்)
(2) பீ.எம்.எஸ்.ஸதக்கத்துல்லாஹ்
(3) பஷீர் அஹ்மத்
(4) ஓ.எஃப்.செய்யித் முஹம்மத் ஷாதுலீ
(5) எஸ்.டி.அபூபக்கர்
(6) நவ்ஃபல் இஸ்மாஈல்
(7) என்.ஏ.முஹம்மத் நூஹ்
ஆலோசகர்கள்:
(1) டாக்டர் முஹம்மது இத்ரீஸ்
(2) எம்.ஐ.மெஹர் அலீ
புதிய தலைவர் உரை:
புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அனைத்து புதிய நிர்வாகிகள் சார்பில் - செயலாளர் எஸ்.ஏ.அஹ்மத் ரஃபீக் உரையாற்றினார்.
மன்றம் துவங்கி 21 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில், இதுவரை செய்துள்ள நகர்நலச் சேவைப் பணிகளை அவர் சுருக்கமாக விவரித்தார்.
சென்ற பொதுக்குழுவிற்கும் - இப்பொதுக்குழுவிற்கும் இடையில் நடைபெற்ற மன்றச் செயல்பாடுகள் குறித்தும், உதவித் திட்டங்கள் குறித்தும் அவர் சற்று விரிவாக விளக்கிப் பேசினார்.
அவர்களின் உரையில் மன்றம் ஆரம்பித்து 21 வருடங்கள் முடிந்த நிலையில், இதுவரை நிகழ்த்திய மக்கள் சேவைகளை சுருக்கமாக விவரித்தார். சென்ற பொதுக்குழுவிற்கும் இந்த பொதுக்குழுவிற்கும் இடையில் நடைபெற்ற மன்ற செயல்பாடுகளையும், உதவி திட்டத்தையும் விவரித்து பேசினார்.
மன்றத்திற்காக அயராது பாடுபட்டு சேவையாற்றி, தற்போது விடைபெறும் டாக்டர் இத்ரீஸ் அவர்களின் சேவைகளையும், நற்பண்புகளையும் பட்டியலிட்டுப் பேசிய அவர், அவர்களின் வாழ்வு சிறக்கவும், சமூக நலப் பணிகள் தொடரவும் வல்ல அல்லாஹ்விடம் பிராத்தித்து, பிரியாவிடை கொடுத்து உரையை முடித்தார்.
புதிய உறுப்பினர்கள் அறிமுகம்:
தம்மாம் நகருக்குப் புதிதாக வந்துள்ள ஹாஃபிழ் எச்.ஏ.செய்யித் இஸ்மாஈல், எஸ்.ஏ.சி.செய்யித் முஹம்மத் புகாரீ ஆகியோர் மன்றத்தின் புதிய உறுப்பினர்களாக தம்மை இணைத்துக்கொண்டதுடன், கூட்டத்தில் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டனர்.
விவாதிக்க வேறு அம்சங்கள் இல்லா நிலையில், மன்றத்தின் துணைச் செயலாளர் ஏ.பஷீர் அஹ்மத் நன்றி கூற, துஆவுடன் நிகழ்ச்சிகள் உணர்ச்சிப்பூர்வமாக இனிதே நிறைவுற்றது, எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே - அல்ஹம்துலில்லாஹ்!
இக்கூட்டத்தில், மன்றத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்ட காயலர்கள் மற்றும் சிறப்பழைப்பாளர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இரவுணவு விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தம்மாம் காயல் நல மன்றத்தின் முந்தைய (70ஆவது) பொதுக்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
தம்மாம் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |