சஊதி அரபிய்யா - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 86-வது செயற்குழு கூட்டம் கடந்த 17/04/2015, வெள்ளிக்கிழமை மாலை மஃரிப் தொழுகைக்குப்பின் ஜித்தா-ஷரஃபியாவிலுள்ள இம்பாலா கார்டன் உணவக உள்ளரங்கில் சிறப்பாக நடந்தேறியது.
சகோ,எஸ்.எஸ்.ஜாபர்சாதிக் தலைமையில் சகோ. எஸ்.டி .செய்கு அப்துல்லாஹ் இறைமறை ஓத சகோ,எஸ்.ஐச்.ஹுமாயூன் கபீர் வருகை புரிந்த அனைவரையும் வரவேற்க கூட்டம் இனிதே ஆரம்பமானது.
தலைமையுரை:
சமீபத்தில் விடுமுறையில் தாயகம் சென்று இருந்த சமயம் நம் மன்ற உள்ளூர் பிரதிநிதி சகோ,ஏ.எம்.இஸ்மாயில் நஜீப் அவர்களோடு மன்ற நலப்பணிகள் பற்றியும் கலந்துரையாடியதும் மேலும் சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்ற இடத்திலும்
அங்கு சிங்கை காயல் நல மன்ற நிர்வாகிகளை சந்தித்ததும் அவர்களும் வரவேற்று
மிகவும் கண்ணியப்படுத்தியதோடு நம் இரு மன்றம் சார்ந்த செய்திகளை நல்லமாதிரி பகிர்ந்ததும் பரிமாறி கொண்ட நடப்புக்கும் கூட்ட தலைவர் சகோ,எஸ்.எஸ்.ஜாபர்சாதிக் விளக்கமாக எடுத்துரைத்தார்.
மன்ற செயல்பாடுகள்:
கடந்த கூட்டத்தின் தீர்மானம் மேலும் நிறைவேறிய மன்றப்பணிகள் மற்றும் மன்றம் சார்ந்த செய்திகளையும் , தம்மாம் காயல் நல மன்றத்தின் தலைவராக சமூக நலப்பணியில் நீண்ட காலாமாக தொடர்ந்து செயலாற்றி வரும் சகோ ,மருத்துவர் முஹம்மது இத்ரீஸ் அவர்கள் சவூதியால் பணிகளை முடித்துக்கொண்டு அடுத்து தாயகம் புறப்பட உள்ளதும் அவர்களோடு அலைபேசியில் தொடர்பு கொண்டு நம் மன்றம் சார்பில் பயணம் சிறக்க மனமார்ந்த நல்வாழ்த்துக்களையும் பிரார்த்தனையையும் பரிமாறியதும் அதற்கு அவர்கள் நம்மில் யாவருக்கும் நன்றியையும் கூறியதாக விளக்கினார் மன்ற செயலாளர் சகோ சட்னி, எஸ்.ஏ.கே. செய்யிது மீரான்.
நமதூர் கே.எம்.டி.மருத்துவ மனைக்கு அவசர கால உதவிக்காக மருத்துவ வசதி வேண்டி தம்மாம் காயல் நல மன்றம் சார்பாக முன் வைத்த கோரிக்கை கடிதத்திற்கு கே.எம்.டி.மருத்துவமனை நிர்வாகத்தின் செயலாளர் ரியாத் காயல் நல மன்றத்திற்கு எழுதிய பதில் மடலை வாசித்தும் இதன் சாராம்சம் பற்றியும் விளக்கமாக எடுத்துரைத்தார் மன்ற செயலாளர் சகோ,எம்.ஏ.செய்யிது இப்ராஹீம்.
நமது ஊரில் இப்பொழுது அதிகமாக மக்களை பாதிப்புக்குள்ளாக்கும் உயிர்கொல்லி நோயான புற்றுநோய் நம்மில் யாவருக்கும் மிக கவலையளிப்பதும் இதற்கு நம்மருகில் இருக்கும் இரசாயன ஆலை ஒரு காரணியாக இருக்கும் என்றாலும்
மேலும் நமது உணவு பழக்க வழக்க முறைகளை பற்றியும் நாம் மிக கவனத்தில்
கொள்ள வேண்டியது தற்பொழுது அவசியம் என்பதுடன் "ஊட்டச்சத்து" சம்பந்தமான
பலவித விளக்கங்களையும் தெளிவாகஎடுத்துரைத்தார் மன்றத்தலைவர் சகோ.குளம் எம்.ஏ.அஹ்மது முஹ்யித்தீன்.
நிதி நிலை:
தற்போதைய இருப்பு, பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட உதவிகள் போன்ற விபரம் மற்றும் நிதிநிலைகளை விளக்கினார் பொருளாளர் சகோ , எம்.எஸ்.எல்.முஹம்மது ஆதம்.
மருத்துவ உதவிகள்:
ஷிபா மருத்துவ கூட்டமைப்பின் மூலமாக பெறப்பட்ட பயனாளிகளின் மனுக்கள்
வரிசைப்படுத்தப்பட்டு மன்ற துணைத்தலைவர் மருத்துவர் எம்.ஏ.முஹம்மது ஜியாது முன்னிலையில் முறையே பரிசீலிக்கப்பட்டது. "இருதயம் , கண், கர்ப்பப்பை, எலும்பு முறிவு ,அப்பண்டீஸ் போன்ற அறுவை சிகிச்சை ,தூக்கமின்மை,ஆஸ்துமா ,சுவாசப்பிரச்சினை மற்றும் தொடர் சிகிச்சை என பாதிப்புக்குள்ளாகியுள்ள நம் காயல் சொந்தங்கள் மொத்தம் 14 பயனாளிகளுக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு அவர்களின் பூரண நல பேற்றுக்காக வல்லோன் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கப்பட்டது.
கலந்துரையாடல்:
இனி வருங்காலங்களில் செயற்குழு கூட்டம் இன்ஷா அல்லாஹ் மாதத்தின் மூன்றாம் வாரத்தில் நடத்துவது எல்லோருக்கும் வசதியாக இருக்கும் என்றும் மேலும் ஷிபா அமைப்பு மற்றும் கே எம் டி மருத்துவமனை சம்பந்தமான பல செய்திகளையும் உறுப்பினர்களின் ஆரோக்கியமான கலந்துரையாடலில் பரிமாறப்பட்டன.
தீர்மானம்:
1.கடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்ட பிரகாரம் இங்குள்ள நம் மக்களிடம்
உபயோகித்த மற்றும் புதிய உடைகள் சேகரிக்கப்பட்டு எதிர்வரும் மே மாதம் மத்தியில்
தாயகம் அனுப்பி அங்குள்ள நகர் நல அமைப்புகளின் மூலமாக தேவையுடைய
நம் காயல் சொந்தங்களுக்கு விநியோகம் செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.
இது சம்பந்தமாக சகோ சொளுக்கு ,எஸ்.எம்.ஐ.செய்யது முஹம்மது சாஹிப் ( 050 130 7713 ) மேற்பார்வையில் சகோ வி.எஸ்.ஐச்.முத்து மொஹ்தூம் ( 056 571 2000 )
மக்கா,சகோ வி.எம்.டி.முஹம்மது அலி ( 055 741 6090 ) மற்றும்
யான்பு சகோ ,முஹம்மது ஆதம் சுல்தான் ( 056 026 0062 ,050 536 1849)
ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டும் இவர்களை தொடர்பு கொண்டு உதவிடுமாறு
அனைவரையும் அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறது.
2. இன்ஷாஅல்லாஹ் மன்றத்தின் 87-வது செயற்குழு கூட்டம் எதிர்வரும் 15-05-2015 வெள்ளிக்கிழமை ஜித்தா அல்லது யான்பு நகரில் வைத்து நடத்துவது எனவும் இதன் விபரம் அடுத்து அறியத்தரப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
சகோ.அரபி எம்.ஐ.முஹம்மது சுஐபு நன்றி நவில சகோ.பிரபு எஸ்.ஜெ.நூர்தீன் நெய்னா பிரார்த்திக்க துஆ கஃப்பாராவுடன் இச்செயற்குழு இனிதே நிறைவுற்றது அல்ஹம்துலில்லாஹ்.
தகவல் மற்றும் படங்கள்:
சட்னி எஸ்.ஏ.கே.செய்யது மீரான்
காயல் நற்பணி மன்றம்,
ஜித்தா- சஊதி அரபிய்யா,
22-04-2015.
|