1925ம் ஆண்டு தாரங்கதாராவில் (தற்போதைய குஜராத் மாநிலத்தில் உள்ள ஊர்) துவங்கப்பட்ட DCW தொழிற்சாலை, 1958ம் ஆண்டு காயல்பட்டினம்
நகரில் தனது காலினை பதித்தது. இந்த பகுதியில் - உப்பின் மூலம் காஸ்டிக் சோடா உற்பத்தி செய்திட விரும்பிய இந்நிறுவனத்திற்கு, அப்போதைய
மதராஸ் அரசாங்கம், 1382 ஏக்கர் நிலங்களை - LAND ACQUISITION ACT, 1894 சட்டத்தின் கீழ் ஆர்ஜிதம் செய்து வழங்கியது.
இந்நிலங்கள் போக, DCW நிறுவனம் - 793.39 ஏக்கர் நிலத்தையும் - 30 ஆண்டு குத்தகை அடிப்படையில் - அரசாங்கத்திடம் இருந்து பெற்றது.
குத்தகை காலம் - 1993ம் ஆண்டே முடிந்து புதுப்பிக்கப்படாத நிலையிலும், இத்தொழிற்சாலை இந்நிலங்களை தொடர்ந்து அனுபவித்து
வருகிறது.
மேலும் - இந்நிலங்களை, 1958ம் ஆண்டைய சந்தை விலையிலும் - இந்நிறுவனம் - அரசிடம் கோரி வருகிறது.
இவ்விஷயம் குறித்து, அரசாங்கம் பல ஆண்டுகளாக எந்த முடிவும் எடுக்காத காரணத்தால், பல லட்ச ரூபாய் - வருவாய் இழப்பீடு, அரசுக்கு
ஏற்பட்டுள்ளது என்று - குத்தகை அடிப்படையில் அரசு வழங்கிய 793 ஏக்கர் நிலம்! 1959ம் ஆண்டு மதிப்பீட்டின்
அடிப்படையில் நிலத்தினை கோருகிறது DCW நிறுவனம்! என்ற தலைப்பில், பிப்ரவரி மாதம், காயல்பட்டணம்.காம் - நான்கு பாக செய்தி
வெளியிட்டிருந்தது நினைவிருக்கலாம்.
ஹைதராபாத் நகரினை தலைமையிடமாக கொண்டு, தென் மாநிலங்களில் விற்பனையாகும் DECCAN CHRONICLE நாளிதழ், இன்றைய - தனது
சென்னை, கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சி பதிப்புகளில், DCW குத்தகை நிலம் விஷயம் குறித்து - விரிவான செய்தி
வெளியிட்டுள்ளது.
|