கோடைகாலம் என்ற நிலையிலும், காயல்பட்டினம் சுற்றுவட்டாரத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து, நிலத்தையும் - மக்கள் மனங்களையும் குளிர்வித்து வருகிறது.
இம்மாதம் 22ஆம் நாள் புதன்கிழமையன்று காலையிலும், மாலையிலும் சில நிமிடங்கள் இதமழை பெய்தது. இதனால், நகரின் தாழ்வான சில பகுதிகளில் மழை நீர் தேங்கியிருந்தது.
பின்னர், இன்று (ஏப்ரல் 24 வெள்ளிக்கிழமை) 16.30 மணி வரை கடும் வெயில் வாட்டிய நிலையில், திடீரென கருமேகங்கள் திரண்டு, வானம் இருண்டு காணப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, 17.00 மணி துவங்கி சில நிமிடங்கள் சிறுமழை பெய்தது. அதன் பின் வானிலை இதமாக இருந்தது.
இன்று காலை 08.15 மணி துவங்கி, சுமார் 30 நிமிடங்கள் நகரில் இதமழை பெய்தது. நண்பகல் 11.00 மணி நிலவரப்படி, கோடைகாலத்திற்கே உரிய வெயில் வீசுகின்றபோதிலும், காலையில் பெய்த மழை காரணமாக இதமான வானிலை நிலவுகிறது.
மழை குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |