கோடைகாலம் என்ற நிலையிலும், காயல்பட்டினம் சுற்றுவட்டாரத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து, நிலத்தையும் - மக்கள் மனங்களையும் குளிர்வித்து வருகிறது.
நேற்று மாலையில் சில நிமிடங்கள் இதமழை பெய்துள்ள நிலையில், இன்று (ஏப்ரல் 25 சனிக்கிமை) காலை 06.15 மணி துவங்கி, 08.15 மணி வரை நகரில் இதமழை பெய்தது.
பின்னர் வெயில் இருந்தபோதிலும், பெய்த மழை காரணமாக இரவு வரை வானிலை இதமாகவே உள்ளது. தாழ்வான பகுதிகளில், ‘வழமை போல’ மழை நீர் தேங்கி காணப்படுகிறது.
மழை குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |