வாக்காளர் பட்டியலில் ஆதார் எண், கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட கூடுதல் விபரங்களை இணைத்திடவும்,
வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இடம்பெற்றுள்ள பெயர்களை நீக்கல், பிழைகளைத் திருத்தல், முகவரி மாற்றம், புதிய வாக்காளர் பெயர் சேர்க்கை ஆகியவற்றைச் செய்திடுவதற்காக, தூத்துக்குடி மாவட்டத்தின் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் இன்று 09.30 மணி முதல் 17.30 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற்றது.
காயல்பட்டினத்தில் நடைபெறும் முகாம் குறித்து, மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் உள்ளிட்ட பொது நிறுவனங்கள் மூலமும், பள்ளிவாசல்கள் மூலமும் பொதுமக்களுக்கு தொடர் அறிவிப்பு செய்யப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, நகரின் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நடைபெற்ற சிறப்பு முகாம்களில், ஏராளமான ஆண்களும், பெண்களும் சென்று தமக்குத் தேவையான சேவைகளைப் பெற்றுக்கொண்டனர்.
சென்ட்ரல் மேனிலைப்பள்ளி, தீவுத்தெரு அரசு மகளிர் மேனிலைப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடிகளில் முகாம் நடைபெற்ற காட்சிகள்:-
|