வாக்காளர் பட்டியலில் ஆதார் எண், கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட கூடுதல் விபரங்களை இணைத்திடவும்,
வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இடம்பெற்றுள்ள பெயர்களை நீக்கல், பிழைகளைத் திருத்தல், முகவரி மாற்றம், புதிய வாக்காளர் பேயர் சேர்க்கை ஆகியவற்றைச் செய்திடவும், காயல்பட்டினம் உட்பட - தூத்துக்குடி மாவட்டத்தின் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் இன்று 09.30 மணி முதல் 17.30 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
தேசிய அளவில் வாக்காளர் பட்டியலை செம்மை படுத்தி விவரங்களை உறுதிபடுத்தும் திட்டத்திற்காக வாக்காளர்களின் ஆதார் எண், கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று சேகரித்து வருகின்றனர். மேலும்,
ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பின் அதனை நீக்கம் செய்திட படிவம் 7,
வாக்காளர் பட்டியலில் வாக்காளர் குறித்த விபரங்களில் பிழைகள் இருப்பின் அதனை சரி செய்திட படிவம் 8,
ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்து குடியிருந்து வருவபவர்களிடம் வாக்காளர் பட்டியலில் முகவரி மாற்றம் செய்திட படிவம் 8ஏ,
புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 6
ஆகியவற்றை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பெற்று வருகின்றனர்.
வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் மேற்படி விவரங்களை அளிக்காத விடுபட்ட வாக்காளர்களிடமிருந்து ஆதார் எண், கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களை பெறுவதற்கும், படிவம் 6, 7, 8 மற்றும் படிவம் 8ஏ பெறுவதற்கும் 26.04.2015 அன்று (இன்று) காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை வாக்குச்சாவடி அமைந்துள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெறும். மேற்படி முகாமில்; வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பணியிலிருந்து வாக்காளர்களிமிருந்து - ஆதார் எண், கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களையும், படிவம் 6, 7, 8 மற்றும் படிவம் 8ஏ ஆகியவற்றினை பெறவேண்டும்.
மேற்படி பணிக்கு குறிப்பிட்ட நேரத்தில் வாக்குச்சாவடிகளில் வாக்குச்சாவடி அலுவலர்கள் ஆஜராக வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அந்த செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |