சஊதி அரபிய்யா - ரியாத் காயல் நல மன்றத்தின் 47ஆவது செயற்குழுக் கூட்டத்தில், நகர்நலனுக்காக, 4 லட்சத்து 21 ஆயிரத்து 500 ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூட்ட நிகழ்வுகள் குறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
ஆரம்பமாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களின் அனுசரனையில் விருந்து பரிமாறப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சி நிரலை ஹாஜி செய்து முஹம்மது நெறிபடுத்தி பின்னர் இறைமறை ஓதி ஹாபிழ் SAC சாலிஹ் அவர்கள் துவக்கி வைக்க, தொடர்ச்சியாக Koose அபூபக்கர் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.
பின்னர் இக்கூட்டத்திற்கு தலைமை பொறுப்பேற்று நடத்திய ஹாபிழ் PSJ ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் தனதுரையில் நம்மன்றம் ஒவ்வொரு செயற்குழு கூட்டத்திலும் மிக அருமையாக அனைத்து உறுப்பினர்களின் பங்களிப்போடு நடந்ததை சுட்டிக்காட்டி இக்கூட்டத்திலும் அதே பங்களிப்பை எதிர்நோக்குவதாக தெரிவித்தார்.
நிதி நிலை அறிக்கை:
அடுத்து மன்ற பொருளாளர் ஹசன் அவர்கள் இவ்வருடம் முதல் இது நாள் வரை செய்துள்ள மற்றும் வழங்க இருக்கிற தொகை போக மீதமுள்ள இருப்புத்தொகையை தெளிவாக சமர்பித்தார்.
மன்ற நல உதவிகள்:
அடுத்து ஷிபா மூலம் பெறப்பட்ட மருத்துவ கடிதங்கள் மற்றும் நேரடியாக பெறப்பட்ட கல்வி/சிறுதொழில் விண்ணப்பங்களை வாசித்து மொத்தமாக ரூபாய் 4,21,500 (நான்கு இலட்சத்து இருபத்தோராயிரத்து ஐநூறு) வழங்கப்பட்டது.
மருத்துவம்: 3,37,000
கல்வி / சிறுதொழில்: 84,500
அடுத்த பொதுக்குழு கூட்டம்:
இன்ஷா அல்லாஹ் எம்மன்றத்தின் 50-வது பொதுக்குழு கூட்டம் வருகிற ஜூலை மாதம் 3-ம் தேதி (ரமலான் மாதம்) இப்தார் நிகழ்ச்சியோடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இரவு நேர அவசர மருத்துவ உதவி:
கடந்த செயற்குழுவில் எடுத்த முடிவின் பேரில் 'இரவு நேர அவசர மருத்துவ ஊர்தி மற்றும் மருத்துவர் சேவை' தேவை என்பதை கருதி நமதூர் KMT மருத்துவமனைக்கு ஒரு விண்ணப்பம் அளிக்கப்பட்டு அதற்கு அவர்களின் பதிலுரையும் பெறப்பட்டதை அனைவர் முன்பு செயலாளர் ஸூபி அவர்கள் வாசித்து மேற்கொண்டு அதை எப்படி கையாள்வது என்பதை அன்றைய கூட்டத்திற்கு விருந்தினராக பங்கெடுத்த தம்மாம் காயல் நற்பணி மன்ற செயலாளர் MM செய்து இஸ்மாயில் அவர்கள் ஒரு சில ஆலோசனைகளை வழங்கினார்,
இத்திட்டத்தை முன்னெடுத்து செல்வதற்கு நம்மன்ற தலைவர் ஹாபிழ் செய்ஹு தாவூத் இத்ரீஸ் அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டு மற்ற காயல் நல மன்றங்களோடு தொடர்பு கொண்டு இச்சேவையை துரிதமாக நமதூர் மக்களின் செயல்பாட்டுக்கு கொண்டு வர முயற்சி செய்ய ஆவணம் செய்யப்பட்டுள்ளது.
ஷிபா மற்றும் இக்ராஃ:
அடுத்து ஷிபா மற்றும் இக்ராஃ பற்றிய சில தகவல்களை தலைவர் மற்றும் துணை தலைவர் முஹம்மது நூஹ் அவர்கள் பரிமாரிகொண்டனர்.
ரமலான் உணவுப்பொருள் திட்டம்:
பின்னர் கடந்த 3 வருடங்களாக சிறப்புற செயல்படுத்தி வரும் ரமலான் மாத உணவுப்பொருள் வழங்கும் திட்டத்தை இவ்வருடமும் இன்ஷா அல்லாஹ் வழங்க செயற்குழுவில் ஒப்புதல் பெறப்பட்டு மன்ற துணைச்செயலாளர் முஹ்சின் அவர்கள் கடந்த வருடங்களைப்போல் அனைத்து செயற்குழு உறுப்பினர்களுக்கும் 150/ சவுதி ரியால் நிர்ணயம் செய்து, மற்ற மன்ற உறுப்பினர்களுக்கு அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப வழங்கலாம் என்றும், குறிப்பாக முழுத்தொகை வழங்குபவர்கள் அவர்கள் தரும் பயனீட்டாளரக்கு உணவு வழங்கப்படும் என்பதையும் தெரிவித்தார். அத்தொகையை மே மாதம் இறுதிக்குள் செலுத்திடவும் கேட்டு கொண்டார். அனைத்து உறுப்பினர்களுக்கும் மின்னஞ்சல்/குறுஞ்செய்தி (Email/SMS) மூலம் தகவல் பரிமாறப்படும் என்பதையும் தெரிவித்தார்.
CUT OFF மதிப்பெண் ஊக்கத்தொகை:
கடந்த வருடங்களைப்போல் இவ்வருடமும் CUT OFF மதிப்பெண் ஊக்கத்தொகை வழங்குவதை துணைப்பொருளாளர் வெள்ளி சித்திக் அவர்கள் தெரிவித்தார், அதில் சில மாற்றங்களோடு பொறியியல் பிரிவில் மாணவர்களுக்கு மட்டுமே வழங்குவதை வலியுறுத்தி மருத்துவப்பிரிவில் இரு சாரார்களுக்கும், அதோடு கூடுதலாக வணிகப்பிரிவில் அதிக மதிப்பெண் பெரும் முதல் மூன்று மாணவர்களுக்கும் பணமுடிச்சு வழங்கவுதாகவும் தெரிவித்தார்.
சிறப்பு பார்வையாளர்கள் / விருந்தினர்கள்:
இந்த கூட்டத்திற்கு சிறப்பு பார்வையாளர்கள் மற்றும் விருந்தினர்கள் கலந்து கொண்டதோடு...அவர்களின் கருத்து மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்கள். இந்நிகழ்வில் மன்ற பொதுக்குழு உறுப்பினர்களில் RSL மீரா நெய்னா அவர்கள் cut off மதிப்பெண் ஊக்கத்தொகை வெளியூரில் படிக்கும் நமதூர் மாணவர்களுக்கும் அதை உட்படுத்தலாமே என்றும் ஆலோசனை வழங்கினர்,
MY ஷாகுல் ஹமீது அவர்கள் இத்தருணத்தில் என்னையும் அழைத்ததற்கு நன்றி தெரிவித்து அதோடு இக்கூட்டத்தில் ஆலோசித்த இரவு நேர அவசர மருத்துவ உதவி மிக மிக அத்தியாவசியம் என்பதை நான் மிகவும் உணர்வேன் ஏனென்றால் அத்தருணம் தனக்கு நிகழ்ந்து கஷ்டப்பட்டதாகவும் கூறினார், MN அப்துல் வாரித் அவர்கள் இன்றைய நமது நாட்டின் கால/அரசியல் நிலைக்கேற்ப நமதூரை சுற்றி இருக்கிற மாற்று மத ஏழைகளுக்கும் நாம் உதவிக்கரம் நீட்டலாமே என்ற ஆலோசனையையும் வழங்கினர்.
அடுத்து தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் செயலாளர் MM செய்து இஸ்மாயில் அவர்கள் இந்த கூட்டத்தில் பங்கெடுக்க அழைப்பு கொடுத்த அனைவர்களுக்கும் நன்றி தெரிவித்து ரியாத் காயல் மன்றம் மிக மூத்த மன்றமாகவும், இன்றைய சூழ்நிலையில் மிகவும் உத்வேகத்துடனும் இளைஞர் பட்டாளத்தை கொண்டு வீறு நடை போடுவது அனைத்து உலக மன்றங்களுக்கும் ஒரு முன்னோடியாக செயல்படுகிறது கூறலாம் என்று தனதுரையில் தெரிவித்தார், இறுதியாக செயற்குழு உறுப்பினர் KM முஹ்யிதீன் அப்துல் காதர் அவர்கள் தனக்கே உரித்தான பாணியில் புன்னகையுடன் பாராட்டினார்.
ஒருங்கிணைப்பாளர்கள்:
இக்கூட்ட ஒருங்கிணைப்பாளர்களான PMS லெப்பை, ஹைதர் அலி, SL சதக்கதுல்லாஹ், வாவு கிதுர் முஹம்மது மற்றும் இஸ்மத் நௌபல் ஆகியோரின் அனுசரணையோடு அருமையான நெய்ச்சோறு விருந்து வழங்கப்பட்டது.
இறுதியாக இப்ராஹிம் பைசல் நன்றி நவில, ஹாஜியார் சாலிஹ் அவர்களின் துஆ பிரார்த்தனையோடு ஒன்றுகூடி புகைப்படம் எடுத்த பின்னர் கூட்டம் சிறப்புற முடிந்தது அல்ஹம்துலில்லாஹ்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் முந்தைய (46ஆவது) செயற்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ரியாத் காயல் நற்பணி மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |