இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தமிழகப் பிரிவிற்கு பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வரிசையில், தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவராக காயல்பட்டினம் எம்.ஏ.அப்துல் காதர் நியமிக்கப்பட்டுள்ளார். காயல்பட்டினம் நகர காங்கிரஸ் தலைவராக எம்.எம்.கமால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்விருவரையும் பாராட்டும் நிகழ்ச்சி, நேற்று (ஏப்ரல் 25 சனிக்கிழமை) 17.30 மணியளவில், நகர தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கட்சியின் மூத்த அங்கத்தினரான கே.எஸ்.ஏ.புகாரீ, எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ ஆகியோர் புதிய நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து வாழ்த்தினர்.
காயல் முத்துவாப்பா, முஸ்தஃபா கமால், எம்.பீ.செய்யித் முஹம்மத் ஸாஹிப் உள்ளிட்ட கட்சியின் பிரமுகர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
கள உதவி:
M.P.செய்யித் முஹம்மத் ஸாஹிப்
காங்கிரஸ் கட்சி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |