அரசாணை, உயர் நீதிமன்ற ஆணைகளுக்கு முரணாக இயங்குவதாக எச்சரிக்கப்பட்டும் - குறைகளைக் களைய நடவடிக்கை மேற்கொள்ள முயற்சிக்காதமைக்காக, காயல்பட்டினம் பாத்திமா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி உள்ளிட்ட - தூத்துக்குடி மாவட்டத்தின் 6 மழலையர் பள்ளிக்கூடங்களை மூடிட, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆலோசனைப் படி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.. இதுகுறித்த செய்தியறிக்கை வருமாறு:-
தூத்துக்குடி மாவட்டத்தில் தொடக்கக் கல்வி இயக்ககத்தின் அங்கீகாரமின்றி தமிழ் நாடு அங்கீகாரம் பெற்ற நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கான ஒழுங்குபடுத்தும் விதி தொகுப்பு அரசாணை நிலை எண்.484 கல்வித்துறை நாள் 24.04.1991, அரசாணை நிலை எண்.349 நாள் 31.08.1993 மற்றும் உயர் நீதிமன்ற ஆணை W.P. No. 18861/2014 நாள் 14.08.2014-களுக்கு முரணாக, தொடக்கக் கல்வித்துறை அங்கீகாரமின்றியும், முறையான கட்டிடங்கள் இன்றியும் வசதியற்ற கட்டிடங்களின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நான்கு வழிச்சாலை ஓரத்திலும் இயக்கப்பட்டுக் கொண்டிருந்த கீழ்கண்டுள்ள 6 நர்சரி பள்ளிகளை - குறைகளைக் களைந்து அங்கீகாரம் பெற்றிட வலியுறுத்தப்பட்டும், அங்கீகாரம் பெற்றிட எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முயற்சிக்காத இப்பள்ளிகளை மூடிட, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களின் ஆலோசனைப்படி தூத்துக்குடி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரால் மூடி விட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |