இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் திருப்பூர் சத்தார், இம்மாதம் 18ஆம் நாளன்று காலமானார். அன்னாரின் மறைவை முன்னிட்டு, காயல்பட்டினம் முஸ்லிம் லீக் அலுவலகத்தில் இரங்கல் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
இதுகுறித்து, அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் திருப்பூர் சத்தார், இம்மாதம் 18ஆம் நாளன்று காலமானார். அன்னாரின் ஜனாஸா, அன்று 17.00 மணியளவில், சென்னை மின்ட் மாடர்ன் சிட்டி மஸ்ஜித் நடத்தப்பட்ட ஜனாஸா தொழுகையைத் தொடர்ந்து, சென்னை வண்ணாரப்பேட்டை சந்தை மஸ்ஜித் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அவரது மறைவை முன்னிட்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை அலுலகமான தியாகி பீ.எச்.எம்.முஹம்மத் அப்துல் காதிர் மன்ஸிலில் இம்மாதம் 19ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமையன்று 19.00 மணியளவில், கத்முல் குர்ஆன் மஜ்லிஸ் மற்றும் இரங்கல் நிகழ்ச்சி ஆகியன மவ்லவீ ஹாஃபிழ் கே.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் தலைமையில் நடைபெற்றது. துவக்கமாக கத்முல் குர்ஆன் ஓதப்பட்டு, மறைந்த மர்ஹூமின் பெயரில் ஈஸால் தவாப் செய்யப்பட்டது.
பின்னர் இரங்கல் கூட்டம் துவங்கியது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர தலைவர் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ், மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ, நகர துணைச் செயலாளர் எம்.எல்.ஷேக்னா லெப்பை ஆகியோர், மறைந்த திருப்பூர் சத்தார் அவர்களது சேவைகளை நினைவுகூர்ந்தும், அன்னாரின் பாவப் பிழை பொறுப்பிற்காக (மஃக்ஃபிரத்திற்காக) துஆ செய்தும் இரங்கல் உரையாற்றினர்.
ஹாஜி எம்.கே.முஹம்மத் அலீ என்ற ஹாஜி காக்காவின் துஆவுடன் நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன. நிகழ்ச்சிகளில், கட்சியின் நிர்வாகிகள், அங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
S.A.இப்றாஹீம் மக்கீ
படங்களில் உதவி:
M.A.C.சுஹைல் இப்றாஹீம்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |