Re:...இத்ரீஸ் என்ற இப்ரீத்துக்கு ஓய்வா? posted bymackie noohuthambi (kayalpatnam)[15 April 2015] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 40139
மரம் ஓய்வெடுக்க நினைத்தாலும் காற்று விடுவதில்லை.
இத்ரீஸ் என்ற இப்ரீத்துக்கு ஓய்வா? நம்ப முடியவில்லை. நாங்கள் தம்மாம் காயல்நல மன்றத்தில் பணியாற்றிய காலங்களிலும் பின்னர் ரியாதில் பணியாற்றி மீண்டும் தம்மாமில் இணைந்தபோதும் இந்த என்றும் இளமை மிக்க மருத்துவரின் நகைச்சுவைகளை கண்டு ரசித்திருக்கிறேன்.
மருத்துவர்கள் வாயில் CIGARETTE, முகத்தில் COOLING GLASS கழுத்தில் STATHOSCOPE இவற்றுடன் மிக TENSION னாகவும் கோபமாகவும்தான் இருப்பார்கள்.. அவர்கள் நடந்தால் அவரது BOOTS டாக் டாக் என்று ஒலி எழுப்பும். அது நோயாளிகளுக்கு கிலி எழுப்பும். அதுதான் அவர்களுக்கு கௌரவம் என்றும் நினைப்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் அந்த நிலை இல்லை. நமது இத்ரீஸ் டாக்டர் அவர்களிடம் எந்தக் காலத்திலும் இந்த மாதிரி அணிகலன்கள் இருந்ததில்லை. அவர் புன்னகை மன்னனாகவே இருப்பார். இது ஒரு டாக்டருக்கு அழகா என்றெல்லாம் சிலர் நினைப்பதுண்டு. அவ்வளவு சிம்பிள். அவர் ஓய்வெடுக்கிறார் என்றால் இப்போது அவருக்கு வயதாகி விட்டது என்பதைத்தான் அது காட்டுகிறது.
தாய் நாட்டுக்கு அவர் திரும்பி வருகிறார். இந்த நாட்டு சுற்று சூழல்கள் நட்பு வட்டங்கள் அவரை எப்படி இங்கு மாற்றி விடுமோ என்று எனக்கு பயமாக இருக்கிறது..
ஒரு நண்பர் சிரிப்பாக சொன்னார். இந்தியாவில்
""தேனும் பாலும் ஓடும்"" என்று சொன்னார்கள் இங்கு வந்து பார்த்த போது ""தேளும் பாம்பும்தான் ஓடுகிறது"".
டாக்டர் அவர்கள் சிரிப்பும் செழிப்பும் என்றென்றும் நிலைத்து நிற்க அல்லாஹ் அருள் புரிவானாக அவருக்குரிய சிறப்பும் மதிப்பும் அந்த நகைச்சுவையுடன் பணியாற்றும் தன்மையில்தான் தங்கி இருக்கிறது.
மரம் ஓய்வெடுக்க நினைத்தாலும் காற்று விடுவதில்லை என்பார்கள். உங்களுக்கு ஒய்வு இங்கே காயல்பட்டினம் மக்களுக்கு சேவை செய்வதில்தான் இருக்கிறது. இப்ரீத் என்ற ஜின் ஓய்வெடுத்ததுண்டா? அதற்கான சான்றுகள் எனக்கு தெரியவில்லை.
வாருங்கள் வரவேற்கிறோம். உங்கள் வரவு நல்வரவாகட்டும்..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross