கொஞ்.......சமும் எதிர்பார்க்கவில்லை! posted byS,K.Salih (Kayalpatnam)[16 April 2015] IP: 180.*.*.* India | Comment Reference Number: 40181
இளைஞன் என்று சொல்லிக்கொள்ளவே வெட்கமாக இருக்கும் - அதிகாலையிலும் புத்துணர்ச்சியுடன் பள்ளிவாசலை நோக்கி வரும் அவர்களைப் பார்த்து...
எங்கள் மஹல்லாவான குருவித்துறைப் பள்ளியில் ஐவேளைத் தொழுகையிலும் முதல் வரிசையில், தலைப்பாகையுடன் முற்கூட்டியே காத்திருந்து கலந்துகொள்வார்கள். குருவித்துறைப் பள்ளியை விட்டால் கடைப்பள்ளிதான் அவர்களுக்குப் போக்கிடம்.
அவர்கள் வஃபாத்தான இன்று, கடைப்பள்ளியில் அஸ்ர் தொழுகை ஜமாஅத்தை முடித்துவிட்டு வழமை போல துஆ ஓதிய இமாம் தங்கள் புகாரீ மாமா அவர்களுக்கு துஆவினிடையே தொண்டை கரகரத்து, அடுத்த சொல் வாயில் வரவில்லை... அழுதுவிட்டார்கள் என எம்.என்.எல்.சுலைமான் சாச்சப்பா என்னிடம் கூறினார்.
மரணத்தைப் பார்த்தால், மையித்துக்குச் செய்ய வேண்டிய கடமைகளும், அவர்களது குடும்பத்தாருக்குச் செய்ய வேண்டிய ஒத்தாசைகளும்தான் என் மனதில் முன்னிற்கும் என்பதால், எளிதில் கண்ணீர் வடித்து விட மாட்டேன். ஆனால் இன்று நான் தோற்றுவிட்டேன்.
எங்கள் தாய் வீட்டில் இன்று உறவினர்களுக்கு விருந்து நிகழ்ச்சி. சாப்பிட ஆவலாய்க் காத்திருந்தபோது, மாமாவின் வஃபாத் செய்தியை அவரது மருமகனார் நண்பர் ஷஃபீயுல்லாஹ் எனக்குத் தொலைபேசியில் தெரிவிக்க, அதன் பின்னர் உணவுண்ண வேண்டும் என்ற எண்ணமே கசந்து போனது. உடனடியாக கே.எம்.டீ. மருத்துவமனைக்குச் சென்று என்னாலியன்ற கடமைகளைச் செய்தேன்.
சில நாட்களுக்கு முன் குருவித்துறைப் பள்ளியில் என்னைச் சந்தித்த மாமா, “வாப்பா! நீ ஒரு மத்ரஸா நடத்தினாயே...? இப்ப நடத்தவா செய்றா?” என்று கேட்க, “இல்லையே மாமா... நிறுத்திட்டேனே...?” என்றேன். “என் பேரன் குர்ஆனைப் பார்த்து ஓதி முடித்துவிட்டான் என்றாலும் அவனுக்கு தஜ்வீத் முறைப்படி ஓதிக்கொடுக்கனும்” என்றார்கள். “எங்கள் வீட்டிற்கு அனுப்பி வையுங்கள், என் மனைவி சொல்லிக் கொடுப்பாள்” என்றேன். அடுத்த நாளே அனுப்பி வைத்துவிட்டார்கள்.
மய்யித்தைப் பார்க்க வந்த ஒவ்வொருவரும் சொன்ன புகழாரமெல்லாம், “ஒரு ஜமாஅத் விட மாட்டாங்களே...?” என்பதுதான்.
“கிடையில் கிடந்து, யாருக்கும் தொல்லையெல்லாம் கொடுத்துவிடாமல், அல்லாஹ் என்னைப் பாதுகாக்கனும்... சத்தமில்லாமல் போய் சேர்ந்துடனும்” என்று KEPA தலைவர் ஹாஜி மாமாவிடம் சில நாட்களுக்கு முன்பு கூட கூறினார்களாம். அது இப்போது மெய்யாகிவிட்டது.
“உங்களுக்கென்ன மாமா...? நீங்கள் யாருக்கும் தொந்தரவு தராமல் நிம்மதியாகப் போய்விட்டீர்கள்... ஆனால், உங்களின் இந்தத் திடீர் பிரிவை எங்களால் எளிதில் தாங்க இயலவில்லையே...?
வல்ல அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க மாமா அவர்கள் தமது இவ்வுலக வாழ்வை முடித்துக்கொண்டார்கள். அவர்கள் தம் வாழ்நாளில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகள் அனைத்தையும் கருணையுள்ள அல்லாஹ் தன் அளப்பெரும் கிருபை கொண்டு பொறுத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தில், நபிமார் - ஸித்தீக்கீன் - ஷுஹதா - ஸாலிஹீனுடன் இணைந்திருக்கும் பாக்கியத்தை நற்கூலியாக வழங்கியருள்வானாக...
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் - என் பாசத்திற்குரிய தாய் மெய்தீன் மாமி அவர்கள், என் மரியாதைக்குரிய டாக்டர் காக்கா அவர்கள், அவர்கள் என் மீது கோபமுற்ற காலங்களிலும் நான் மிகவும் நேசிக்கும் என் அன்பிற்குரிய ஹுஸைன் காக்கா அவர்கள், என் உயிர் நண்பன் ஹாஃபிழ் ஸர்ஜூன், அன்புத் தங்கை உள்ளிட்ட குடும்பத்தார் யாவருக்கும் அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக... ஆமீன்.
அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.
துஆக்களுடன்,
எஸ்.கே.ஸாலிஹ்
மற்றும்
மர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் குடும்பத்தார்
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross